தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: நித்ய கல்யாணி

நித்ய கல்யாணி ((Catharanthus roseus)
Apocynaceae

இரகங்கள்

நித்ய கல்யாணியில் மூன்று வகைகள் உள்ளன. வெள்ளை, ஊதா பூக்கள் மற்றும் நிர்மல் (வெள்ளை பூக்கள் இரகம் : CIMAP). வெள்ளை பூ வகையில் ‘நிர்மல்’ மற்றும் ‘தவல்’ இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மண் மற்றும் காலநிலை

இது அனைத்து மண் வகைகளுக்கும் மற்றும் வெப்ப மண்டல பகுதிகளுக்கும் ஏற்றதாகும். ஆண்டு மழை அளவு 100 செ.மீ உகந்ததாகும். மானாவாரி பயிருக்கும் ஏற்றது.

விதைகள் மற்றும் நடவு

இவை நேரடி விதைப்பு அல்லது நடவு செய்யப்படுகிறது.

விதை அளவு

நேரடி விதைப்பிற்கு எக்டருக்கு 2.5 கிகி விதை தேவைப்படுகிறது மற்றும் நாற்று நடவிற்கு எக்டருக்கு 0.5 கிகி தேவைப்படுகிறது. 45-60 நாட்கள் வயதுடைய நாற்றுகள் 45x20 செ.மீ இடைவெளியில் ஜீன் மற்றும் ஜீலை அல்லது செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்யப்படுகின்றன.

உரமிடுதல்

எக்டருக்கு 20 டன் தொழுஉரம் அளிக்க வேண்டும் மற்றும் எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 25:50:75 கிகி அடியுரமாக அளிக்க வேண்டும். நடவு செய்த 60 நாட்களில் 50 கிகி தழைச்சத்தை மேலுரமாக அளிக்கவும்.

சாகுபடிக்கு பின்பு

விதைத்த அல்லது நடவு செய்த 90ம் நாளில் முதல் முறை களையெடுத்தல் மற்றும் 60 நாளில் இரண்டாது களையெடுத்தல் வேண்டும்.

அறுவடை

வேர்கள் ஒரு வருடத்தில் அறுவடைக்கு தயாராகின்றன. இரண்டு இலை வரிகள், 6 மாதங்களுக்கு பிறகு முதல் ஒரு விதைப்பு 9 மாதங்கள் இரண்டாவது விதைப்பு எடுக்க முடியும். மண்ணை உழுது வேர்களை அறுவடை செய்ய வேண்டும். கிழங்குகள் சேதம் ஏற்படாமல் சேகரிக்க வேண்டும்.

மகசூல்


தாவர பகுதி

மகசூல் (கிலோ/எக்டர்)

 

பாசனம்

மானாவாரி

வேர்கள்

1500 கிலோ/எக்டர்

750 கிலோ/எக்டர்

காம்புகள்

1500 கிலோ/எக்டர்

1000 கிலோ/எக்டர்

இலைகள்

3000 கிலோ/எக்டர்

2000 கிலோ/எக்டர்


Source
1. www.flickr.com/.../in/set-72157600279486684/ 
2. flickr.com/photos/globetrotter1937/182189741/ 
Last Update : July 2016