||| | | | | |
தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: பைரிதிரம்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள்

ஹன்சா மற்றும் கொடைக்கானல்

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதியுடைய இருபொறை மண் உகந்தது. மிதமான வெப்பநிலைஈ குறைந்த காலம், குறைந்த கோடைக்காலம் மற்றும் வருடமழை 100 செ.மீ இருத்தல்வேண்டும். குறைந்து ஆறு வாரங்களுக்கு 17 டிகிரி செல்சியல் வெப்பமும் நிலை பூ / மலர் உற்பத்திக்கு தேவைப்படுகின்றது.

பருவம் : ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் – நவம்பர்

விதை மற்றும் விதைப்பு

இதனை விதை மூலம் உற்பத்தி செய்யலாம். ஒரு எக்டர் பயிர் செய்ய 2-3 கிலோ விதை தேவைப்படுகின்றது. விதைகளை நாற்றாங்காலில் விதைத்து, பின் 6-8 வாரம் ஆன நாற்றுக்களை 45x30 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 15 டன் தொழு உரம்  இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவையான அளவில் பாத்திகள் அமைத்து நாற்றுக்களை நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த மேலாண்மை

 

அடியுரம் : ஒரு எக்டருக்கு 20,50,50 கிலோ தழை, மணி மற்றும் சத்தினை அடியுரமாக இடவேண்டும்.

மேலுரம் : 20 கிலோ தழைச்சத்தினை இரண்டுமுறை பிரித்து இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மேலும் மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி

தேவையான போது களை எடுக்கவேண்டும்.

அறுவடை

நடவு செய்த மூன்றாவது மாதத்திலிருந்து பூக்களை அறுவடை செய்து உலரவைக்கவேண்டும்.

மகசூல் : ஒரு எக்டருக்கு 500 கிலோ பூக்கள்


 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008