||| | | | | |
தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: அவுரி சென்னா
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

முன்னுரை

நமது நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமாதியாகிவரும் மருந்துப் பயிர்களில் அவுரி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் திருநெல்வேலி சென்னா என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, இராநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது  அவுரி சுமார் 2,700 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5000 டன் இலைகளும் காய்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் சுமார் 45 மில்லியன் ரூபாய் வரை அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

பயன்கள் :

அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்களல் நோயைக் குணப்படுத்த  பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் ‘சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. மூலம் மற்றும் மலச்சிக்கல் நோய்களைக் குணப்படுத்த இவை பயன்படுகின்றன. உலகளவில் அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

அவுரிச் செடிகள் சுமார் 75 செ.மீ உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் நான்கு முதல் ஆறு செ.மீ நீளமாகவும் 1.5 செ.மீ அகலமாகவும், முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும். ஒவ்வொலு காயிலும் ஐந்து முதல் ஏழு விதைகள் காணப்படும். தன்மகரந்தச்சேர்க்க ஏற்பட்டு காய்கள் தோன்றும்.

இரகங்கள்

அவுரியில் இரண்டு வகைகள் உள்ளன ஒன்று நமது நாட்டில் விளைவிக்கப்படும் திருநெல்வேலி சென்னா (Vassia angustifolia) மற்றொன்று கேசியாசென்னா (Cassia acutifolia) அல்லது அலெக்ஸ்ஸாண்டரியன்  (Alexandrian) சென்னா என்பவை ஆகும். இது சூடான் நாட்டில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. திருநெல்வேலி சென்னாவில் 1.2 முதல் 2.5 சதம் வரை சென்னோஸைடு மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அலெக்ஸாண்டரியன் வகையிலோ இரண்டு மடங்கு அதிக அளவு மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அலெக்ஸாண்டரின் வகையிலோ இரண்டு மடங்கு அதிக அளவு மூலப்பொருட்கள் (2.5 சதம் முதல் 4.5 சதம் வரை சென்னோஸைடு) காணப்படுகின்றன. தற்போது இந்த வகை அவுரிக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகமாக இருந்தாலும் உற்பத்தி ஆகின்ற அளவு குறைவு. திருநெல்வேலி சென்னாவில் இதுவரை இரகங்கள் தோற்றுவிக்கப்படவில்லை.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

செம்மண், களிமண் போன்ற வளமான மண் வகைகளில் பயிரிட ஏற்றது. எனினும் மண் வளம் குறைந்த களர், உவர் நிலங்களிலும் அவுரியைப் பயிரிடலாம். மண்ணின் கார அமிலத் தன்மை 7.0 முதல் 8.5 இருப்பது நன்று. மண்ணில் வடிகால் வசதி இருப்பது மிகவும் அவசியம். தமிழ்நாட்டில்  பெரும்பாலும் கரிசல் அல்லது தரிசு நிலங்களிலேயே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இராமநாதபுரும் மாவட்டத்தில் மணங்பாங்கான நிலங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மணங்பாங்கான இலாபகரமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வறட்சியான தட்பவெப்பநிலையில் சாகுபடி செய்வதற்கு மிகவும் ஏற்றது. எனினும் அதிக அளவு  இலை மற்றும் காய்களின் உற்பத்திக்கு ஓரளவு நீர்ப்பாசன வசதி இருத்தல் அவசியம். ஆண்டு முழுவதும் மழையளவு மற்றும் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருக்கின்ற இடங்களில் இதனைச் சாகுபடி செய்ய இயலாது. அவுரி மருந்துப் பயிரை மானாவாரியாகவும் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். இருப்பினும் தமிழ்நாட்டில் மானாவாரிப் பயிராகவே அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விதையும் விதைப்பும்

ஒரு எக்டரில் விதைக்க மானாவாரிப் பயிருக்கு 25 கிலோ விதையும் இறவைப் பயிருக்கு 15 கிலோ எக்டரில் விதைக்கு தேவைப்படும்.

விதைக்கும் பருவம்

இரண்டுப் பருவங்களில் அவுரியைப் பயிர் செய்யலாம். செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் விதைத்து மானாவாரிப் பயிராகவும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைத்து இறவைப் பயிராகவும் பயிர் செய்யலாம். விதைப்பதற்கு முன்பு விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து நிழலில் ஒரு மணி நேரம் உலர வைப்பதற்கு விதைக்கவேண்டும். இதனால் விதைகளின் முளைப்புத் திறன் அதிகமாகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை உழுது ஒரு எக்டரக்கு 10 டன் தொழு எரு இட்டு பண்படுத்தவேண்டும். பார்கள் (45 செ.மீ) அமைத்து விதைகளை விதைக்கலாம்.

இடைவெளி

விதைகளை 30-45 செ.மீ இடைவெளியில் ஊன்றவேண்டும். ஊன்றும் போது ஒன்று முதல் இரண்டு செ.மீ ஆழத்திற்கு மேல் ஊன்றுக் கூடாது. பாத்திகளில் விதைக்கவேண்டுமானால் விதைகளை தூவி விதைத்துப் பிறகு அவை முளைத்த பின்பு செடிக்குச் செடி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கலைத்து விடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒரு எக்டருக்கு 80 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்து தரவல்ல இராசயன உரங்கள் இடவேண்டும். இவற்றில் 40 கிலோ தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் உரங்களை அடியுரமாக இடவேண்டும். மறுபாதி தழைச்சத்தில் 20 அல்லது 40 கிலோ தழைச்சத்தினை விதைத்த நான்காவது மாதத்தில் இடவேண்டும்.

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

அவுரி

80

40

40

154

141

நீர் நிர்வாகம்

அவுரி மானாவாரிப் பயிராகவே பெரும்பாலும் பயிரிடப்படுகிறது. இறவைப் பயிராக சாகுபடி செய்யும்போது முதல் இரண்டு மாதங்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனமும் அதன் பிறகு 20 நாட்கள் இடைவெளியிலும் நீர்ப்பாசனமும் அதன் பிறகு தேவைப்பு மீறிய நீர்ப்பாசனம் அழுகல் நோய் வருவதற்கு வழிமுறைகள் ஏற்படுத்தும். இறவைப் பயிருக்கு மொத்தமாக 4-6 தடவை நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

இலைப்புள்ளி (Alternarie alternate) மற்றும் இலைக்கருகல் நோய் (Physllosticta sp) போன்றவை அவுரியை அதிகம் தாக்கும். இதனால் முதிர்ச்சியாகும் இலைகள் டபெருமளவில் உதிர்ந்து மகசூலைப் பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த 0.05 சதம் கார்பண்டாசிம் ( ஒரு லிட்டருக்கு ஒரு கிராம்) மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

தண்ணீர் தேங்கும் நிலங்களில் கிராம் நோய் அதிகம் பாதிக்கும். நாற்று அழுகல் நோய் வராமல் தடுக்க மழைக்காலங்களில் வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும். அத்துடன் விதைகளை விதைப்பதற்கு முன் 1.0 பெவிஸ்டின் பூசண மருந்தை ஒரு கிலோ விதையுடன் கலந்து, 30 நிமிடங்கள் வைத்த பிறகு விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்தலாம். அவுரி மருந்துப் பயிரைக் காய்ப்புழு, வெட்டுப்புழுக்கள் போன்ற பூச்சிகள் தாக்கினாலும் பொருளாதாரச் சேதத்தினை ஏற்படுத்துவதில்லை.

அறுவடை

விதைத்த இரண்டாவது மாதத்தில் செடிகளில் பூக்கள் தோன்றும். இலைகளின் மகசூலை அதிகரிக்க பூக்களைக் கிள்ளிவடுவது நல்லது. தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கெங்கல் மற்றும் கயத்தாறு பகுதிகளில் பெரிய இலைகளை விரும்பும் சில ஏற்றுமதி நிறுவனங்களுக்காக இவ்வாறு இலைகளுக்காக மட்டுமே சாகுபடி செய்து பூக்களைக் கிள்ளிவிடுகின்றனர். இந்த முறையில் ஒவ்வொரு செடிகளிலும் குறைந்தது 10 சதவிகிதப் பூக்களை விட்டுவிடவேண்டும். இதனால் விதைகளை உற்பத்தி செய்து  கொள்ளலாம். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இலை மற்றும் காய்கள் மகசூலுக்காகவே பயிர் செய்கிறார்கள். முதல் அறுவடையாக விதைத்த 90 நாட்களில் இலைகளைப் பறிக்கலாம். கருநீல நிறமான முதிர்ச்சி பெற்ற இலைகளை உறுவி எடுக்கலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது அறுவடைகள் 30 நாட்கள் இடைவெளியில் பறிக்கவேண்டும். கடைசி அறுவடையில் செடிகளை வேரோடுப் பிடுங்கி இலைகளையும் காய்களையும் பறித்துப் பதப்படுத்தலாம். பயிரின் மொத்தப் பயிர்க்காலம் 150 முதல் 170 நாட்கள் ஆகும்.

அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி

பதப்படுத்துதல்

அறுவடை செய்த இலை மற்றும் காய்களைக் காற்றோட்டமுள்ள அறைகளில் பரப்பி சீராக உலர்த்தவேண்டும். இலைகளின் ஈரப்பதம் 10 சதவீதம் ஆகும்வரை உலர்த்தவேண்டும். இவ்வபையில் இவற்றை முற்றிலும் உலர வைக்க ஏழு முதல் பத்து நாட்கள்  ஆகும். இலைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. முற்றிலும் உலர்த்தப்பட்ட இலைகள் இளம்பச்சை நிறத்துடன் இருக்கவேண்டும். சரியாக உலர்த்தப்படாத இலைகள் நாளடைவில் நிறம் மாறிக் கறுத்துவிடும். இதனால் இலைகளில் காணப்படும் சென்னோஸைடு ஆல்கலாய்டுகளட குறைந்துவிடும்.

மகசூல்

மானாவாரிப் பயிரில் சுமார் 1000 கிலோ உலர்ந்த இலைகளும் 400 கிலோ விதைகளும் கிடைக்கும். இறவைச் சாகுபடியில் 1500 கிலோ உலர்ந்த இலைகளும் 700 கிலோ விதைகளும் கிடைக்கும்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008