||| | | | | |
தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: திப்பிலி
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

முன்னுரை

மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் இந்திய மருத்துவ முறையில்  பயன்படுத்தப்படுவது திப்பிலியாகும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது “பைப்பர் லாங்கம்” (Piper longum) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது. திப்பிலி, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், ஜாவா போன்ற நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. நமது நாட்டில் அசாம்,  காசி, மிக்கிர் மலைப்பகுதிகளிலும் கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களிலும்  இயற்கைச் சூழ்நிலையில் மட்டும் காணப்படுகிறது. திப்பிலியின் காய்களுக்கு சமீபக் காலமாக அதிக அளவு தேவை இருந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 700 டன் காய்கள் நமது நாட்டின் உபயோகத்துக்கு மட்டும் தேவைப்படுகின்றன. இத் தேவையைப் பூர்த்தி செய்திட ஜாவா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

கொடிவகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்ட காலப்பயிராகும். நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ அகவமானதாகவும் இருக்கும். இலைகள் 5 முதல் 9 செ.மீ நீளமாகவும் 3 முதல் 5 செ.மீ அகலமானதாகவும் இருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ நீளம் உள்ள சரத்தில் நெருக்கமாக இருக்கும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தோன்றும் காய்கள்  தான் மருத்துவரீதியாகப் பயன்படுகின்றன.   திப்பிலியின் காய்களில் வெற்றிலைப் போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனையும் இருக்கும். கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும்.

பயன்கள்

திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்களி, மருந்துப் பொருட்கள் மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பயன்படுததப்படுகின்றன. உலர்ந்த திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு மூலமாக எண்ணெய் பிரிக்கப்படுகிறது. காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலி:கக உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வெறு நோய்களைத் தாக்கும் மருந்துப் பொருளாக தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு “திரிகடுகம்” எனப்பெயர் பச்சைத் திப்பில் கபத்தை உண்டாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. திப்பிலிக் காய்களில் பைப்பரின் (piperine) மற்றும் லாங்குமின் (Longumin) மருந்து வேதிப்போருட்கள் உள்ளன. தவிர ரெஸின், புரதம், கொழுப்பு, தாது உப்பு, சுண்ணாம்பு, இரும்பு, தையமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உலர்ந்த காய்களில் 0.27 சதம் லாங்குமின் வேதிப்பொருள் உள்ளது.இந்த மருந்துப் பொருள் உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றப் போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

சமீபக்காலத்தில் திப்பிலியில் உள்ள வேதிப்பொருட்கள் எய்ட்ஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு மிகச் சிறந்த எதிர்ப்பு சக்தியைத் தருதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கி நோய் மேலும் பரவுவதைத் தடுக்கின்றது.

இரகங்கள்

வெள்ளானிக்கரா 1 (விஸ்வம் திப்பிலி) என்ற உயர் விளைச்சல் திப்பிலி இரகம் கேரள மாநிலத்திலிருந்து 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்காடு பி.எல் 9 என்ற தேர்வு தமிழ்நாட்டில் சாகுபடி செய்வதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இரகத் தேர்வு முன்கூட்டியே காய்த்து அதிகக் காய்களை மகசூலாகத்  தரும்  தன்மை உடையது.

செம்மண் அல்லது இருமண் கலந்து பொறை மண் வகைகள் மிகவும் ஏற்றவை. வகொல் வசதி இருத்தல் மிகவும் அவசியம். மண்ணில் அதிக அளவு இயற்றை அங்ககப் பொருட்கள் இருப்பதும் நன்று.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

அதிக அளவு காற்றின் ஈரத்தன்மை உள்ள தாழ்வான மலைச்சரிவுகளில் பயிர் செய்ய ஏற்றது. குறைந்தளவு 60 சதம் ஈரத்தன்மையை இருப்பது அவசியம். 30-32 டிகிரி செல்சியஸ் சாகுபடி செய்ய இயலாது. அதிகமான தட்பவெப்பநிலையைக் கொண்டு இடங்கிளல் சாகுபடி செய்ய இயலாது. சராசரி ஆண்டு மழையளவு 150 செ.மீ க்கும் மேல் இருப்பது நல்லது. தமிழ்நாட்டில் 1250 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதிகள் அதாவது கிழக்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளான சேர்வராயன், கொல்லிமலை மற்றும் கல்ராயன் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது.

நிலம் தயாரித்தல்

மண்ணை நன்றாக உழுது ஒரு எக்டருக்கு 20-25 டன் தொழு எரு இட்டுப் பண்படுத்தவேண்டும். மலைப்பகுதிகளில் சோலை மண் உள்ள இடங்களில் 10 டன் தொழு எரு இட்டால் போதுமானது. மலைப்பகுதிகளில் 2 மீ x 2 மீ அளவிலான பாத்திகளில் செடிகளை நடவு செய்யலாம். சமவெளிப் பகுதிகளில் ஒரு எக்டருக்கு 25 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்திய பிறகு மூன்று அடி இடைவெளியில் பார்களை அமைத்து அவற்றின் பக்கவாட்டில் செடிகளை நடலாம். குறிப்பாகத் தண்ணீர் வசதி இருக்கின்ற இடங்களை நடவிற்குத் தேர்வு செய்யவேண்டும்.

விதையும் விதைப்பும்

திப்பிலியை ஓரிரு கணுக்களுடைய தண்டுகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். கணுக்கள் எளிதாக வேர்ப்பிடிக்கும் தன்மை உடையவை. திப்பிலிக் கொடிகளின் நுனி மற்றும் நடுப்பாசத்திலிருந்து ஓரிரு கணுக்களை உடைய தண்டுகளைப் பதித்தால் 60 நாட்களில் வேர்கள் முழுவதும் பிடித்துவிடும். வேர்ப்பிடித்த தண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம்.

நடவிற்கு ஏற்ற இடம்

திப்பிலிக் கொடிகளின் வளர்ச்சிக்கு ஓரளவு நிழல் இருப்பது அவசியம். சமவெளிப் பகுதிகளில் தென்னந்தோப்பு மற்றும் பாக்குத் தோப்புகளையும், மலைச்சரிவுகளில் வாழை, சவுக்கு பொன்ற மரங்கள் உள்ள இடங்களையும் தேர்வு அவற்றினுள் செடிகளை நடவு செய்யவேண்டும். பிற்பகல் வேளையில் அதிகளவு சூரிய வெப்பம் வராத வகையில் நிழலி மரங்களான கல்யான முருங்கை, வாழை ஆகியவற்றை நட்டுப் பராமரிக்கவேண்டும்.

நடுவதற்கேற்ற பருவம்

செடிகளை ஜுன் - ஜுலை அல்லது செப்படம்பர் – அக்டோகர் மாதங்களில் நடவு செய்வது நல்லது.

இடைவெளி

பாத்திகளில் செடிக்குச் செடி 60 செ.மீ இடைவெளியில் நடவு செய்யலாம். தென்னந்தோப்புகளில் நடவு செய்யவேண்டுமானால் மூன்று அடி இடைவெளியல் பார்களை அமைத்து செடிகளை ஓர் அடி இடைவெளியில் நெருக்கமாக நடவேண்டும்.

நடவு முறை

செடிகளை 15 நெ.மீ ஆழமுள்ள சிறிய குழிகளில் நடவேண்டும். வேர்ப்பிடிக்காத தண்டகளை நடும் போது ஓர் அடி நீளமான தண்டுகளை எடுத்து இரண்டு அல்லது மூன்று கணுக்களை (அரை மூடி) மண்ணில் பதித்து காலால் மிதித்து அணைக்கவேண்டும். வேர்ப்பிடித்த தண்ணடுகளை நடுவதே சிறந்தது.செடிகள் வேகமாக வளர்ந்து விரைவில் பலனுக்கு வரும்.

ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து மேலாண்மை

திப்பிலி கொடிகளுக்கு உரமிடுதல் மிகவும் அவசியம். ஒரு எக்டருக்கு  60 கிலோ தழைச்சத்து மற்றும் 80 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை ஆண்டுக்கு இருமுறை சம அளவில் பிரித்து இடவேண்டும். முதலில் பாதியை அடியுரமாகவும் மீதியை செடிகள் நட்ட ஆறு மாதங்கள் கழித்தும் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

மலைப்பகுதிகளில் கோடைக் காலங்களில் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். சமவெளிப் பகுதிகளில் தோப்புகளில் வாய்க்கால் ஓரங்களில் செடிகளை நட்டும் பராமரிக்கலாம். தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் அளிக்கவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களை எடுப்பு

செடிகளின் வேர்களுக்கு நல்ல காற்றோட்டம் அவசியமானதால்  செடிகளை நட்ட முதல் களை எடுத்த பிறகு செடிகளைந் சுற்றி மண் அணைக்கவேண்டும். செடிகளை நட்ட முதல் மூன்று மாதங்களுக்கு அதாவது வெடிகள் படரும் வரை களைகள் வராத வண்ணம் காய்ந்த இலைச்சருகுகளை செடிகளைச் சுற்றி பரப்பிவிடலாம்.
திப்பிலிச் செடிகளின் தண்டுகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் கொடிகளைச் சேதமடையாமல் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு கொடியையும் குச்சிகளுடன் சேர்த்துக் கட்டவேண்டும்.

நிழல் பராமரிப்பு

திப்பில் மருந்துச் செடிகளுக்கு அறுபது சதவிகிதம் நிழல் இருப்பது அவசியம். நிழல் தரும் மரங்களான சவுக்கு கல்யான முருங்கை போன்றவற்றை ஆண்டுக்கு ஒரு முறை பரவலாக உள்ள கிளைகளைக் களைதல்வேண்டும். சீரான வெளிச்சமும் அதே சமயம் பிற்பகல் நேரங்களில் ஓரளவு நிழலும் இருக்கின்ற வகைளில் நிழல் மரங்களின் கிளைகளை வெட்டிவிடவேண்டும். சமவெளிப்பகுதியில் தென்னந்தோப்பு அல்லது பாக்குத் டதோப்புகளில் திப்பிலிச் செடிகளுக்கு பிற்பகல் நேரங்களில் நிழல் இருக்கின்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம். அதிக அளவு வெப்பம் இருந்தால் சாழிக் கன்றுகளை நட்டு செடிகளுக்கு நிழலை ஏற்படுத்தலாம்.

ஊடுபயிர் சாகுபடி

திப்பிலிச் செடிகளைப் பெரும்பாலும் காப்பித் தோட்டங்களிலும் தென்னந்தோப்புகளிலும் ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். தனிப்பயிராக செய்வதென்றால் செடிகளை நட்ட முதல் நான்கு மாதங்களுக்கு அவரை, சோயா போன்ற குறுகிய காலப்பயிர்களைப் பயிரிட்டு பலனை அடையலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

திப்பிலிச் செடிகளில் ஒரு சில நோய்கள் தென்படும். அவற்றில் இலைப்புள்ளி நோய் செடிகளுக்குஅதிகச் சேதத்தை விளைவிக்கும். குறிப்பாக மழைக்ாலங்களில் இந்த நோய் தென்படும். இதனைக் கட்டுப்படுத்த இரண்டு கிராம் மேன்கோசெப் பூசண மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.
அதிக மழை உள்ள இடஙகிளல் வேர் அழகளல் நோய் தென்படலாம். செடிகளை நட்ட முதல் ஆண்டிவல் குறைந்த அளவிலாக காய்கள் மகசூலாகக் கிடைக்கும். நன்றாக விளைந்த கரும்பச்சை நிறமுடைய காய்களை காம்புகள் நீக்க அறுவடை செய்துவிடவெண்டும். ஏனென்றால் காய்கிளல் கரும்பச்சை அறவுடை செய்வதற்குப் பிப்ரவரி மார்ச் மற்றும் நவம்பர் - டிசம்பர் மாதங்கள் உகந்தவை.

திப்பிலி மருந்துப் பயிரை ஒரு சில இடங்களில் வேர்களுக்காவும் பயிர் செய்கின்றனர். வேர்களை அறுவடை செய்வதற்கு 18 முதல் 24 மாதங்கள் வயதுடைய கொடிகளை வேரோடு பிடுங்கி எடுக்கவேண்டும். எனினும் நல்ல தரமுடைய வேர்கள் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வயதுடைய கொடிகளில் தான் கிடைக்கின்றன. வேர்களைச் சேதமின்றி பிடுங்கி 2.5 முதல் 5.0 செ.மீ நீளமாக வெட்ட வேர்களை மூன்று தரமாக அதாவது வேரின் பருமனைப் பொறுத்துப் பிரித்து விற்பனை செய்யலாம். முதல் தரத்தின் வேர்கள் இரண்டு செ.மீ குறுக்களவு உடையதாக இருக்கும்.

மகசூல்

முதல் ஆண்டில் 750 கிலோ உலர்ந்த காய்களும் இரண்டாவது ஆண்டிலிருந்து சராசரியாக 1500 கிலோ காய்களும் மகசூலாகக் கிடைக்கும். வேர்களுக்குகாப் பயிர்  செய்தால் எக்டரில் செடிகளை நட்ட இரண்டாவது ஆண்டில் 5 முதல் 7 டன் வேர்களும் மூன்றாவது ஆண்டில் 6 முதல் 8 டன் வேர்களும் உலர்ந்த அடிப்படையில் கிடைக்கும்.

பொதுவாகக் காய்களுக்காகச் சாகுபடி  செய்வதென்றால் திப்பிலிக் கொடிகளை மூன்று ஆண்டுகளுக்குப் பராமரிக்கலாம். அதற்குப் பிறகு செடிகளை வேரோடு பிடுங்கி விட்டு புதிய செடிகளை நடவிற்குப் பயன்படுத்தவேண்டும்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008