தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை |
|
நோய் மேலாண்மை I. அடித்தண்டு அழுகல் நோய் - கானோடெர்மா லுாசிடம்
இரசாயன முறை
II. குருத்தழுகல் நோய் - ஃபைட்டோப்தோரா பால்மிவோரா நோய் தாக்கப்பட்ட கொண்டை பகுதியை அகற்றிவிட்டு, 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடை ஊற்றி கொண்டைப் பகுதியை நனைக்க வேண்டும். புதிய குருத்து வரும் வரை போர்டோ பசை தடவி மழைநீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும் (1 லி போர்டோ பசை தயாரிக்க 100 கி. காப்பர் சல்பேட் மற்றும் 100 கி. நீர்த்த சுண்ணாம்பை தனித்தனியே 500 மில்லி தண்ணீரில் கரைத்து, இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்). III. சாறு வடிதல் நோய் IV. பென்சில்முனைநோய் 1 சத போர்டோக்கலவை தயாரிக்கும் முறை 400 கிராம் தாமிர சல்பேட் 20 லிட்டர் தண்ணீர் கரைத்து கொள்ளவேண்டும். இதேபோல் வேறு பாத்திரத்தில் 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ளவேண்டும். பின்பு தாமிர சல்பேட் கரைசலை சுண்ணாம்பு கரைசலுடன் சீராக நன்கு கலக்கவேண்டும். கரைசலை தயாரிக்க மண்ணால் ஆன அல்லது மரத்தாலான பாத்திரத்தை மட்டுமே உபயோகிக்கவேண்டும். உலோகத்திலான பாத்திரங்களை உபயோகிக்ககூடாது. கலவை சரியான விகிதத்தில் கலந்துள்ளதா என்பதை அறிய நன்கு தீட்டப்பட்ட இரும்பு கத்தியை ஒர நிமிடம் கரைசலில் வைக்கவேண்டும். கத்தியில் துருபோன்று படிவு இருந்தால் சிறிதளவு சுண்ணாம்பு கரைசல் சேர்க்கவேண்டும். சுண்ணாம்பு கரைசலைக் கத்தியில் துரு படியாது இருக்கும் வரை சேர்க்கவேண்டும். போர்டோப் பசை தயாரிக்கும் முறை 200 கிராம் தாமிரசல்பேட் தண்ணீரில் கலக்கவேண்டும். பின்பு வேறு பாத்திரத்தில் 200 கிராம் சுண்ணாம்பு ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும். பின்பு மூன்றாவது பாத்திரத்தில் இவ்விரண்டு கரைசலையும் கலந்து பசை போன்று உபயோகித்துக் கொள்ளலாம். அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள் தோப்புகளில் தேங்காய் விளைச்சலுக்கேற்ப 30-45 நாட்கள் இடைவெளியில் நன்கு முற்றிய 11 மாதங்களைக் கடந்த தேங்காய்களை அறுவடை செய்யவேண்டும். வீட்டு உபயோகத்திற்காக இருந்தால் தேங்காய்களை நேராக வைக்கவேண்டும். தேங்காய்களை எடுத்து சூரிய ஒளியிலோ அல்லது தேங்காய் பருப்பு காய வைக்கும் இயந்தியரங்களிலோ வைத்து காய வைக்கவேண்டும். காய்ந்த பருப்புகளை 5-6 சதம் நீராவி வரும் வரை காயவைத்து இருப்பு வைக்கவேண்டும். மேலும், காய் வைத்த கொப்பரைகளை பாலித்தீன் தார்பூசிய சணல் பைகளில் இருப்பு வைப்பது சிறந்தது. |
|
Update : December 2014 | |
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014. |