தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

உரமிடல்

 

வயது (வருடங்கள்)

தொழு உரம் (கிலோ/மரம்)

யூரியா
(கிலோ/மரம்)

சூப்பர் பாஸ்பேட்
 (கிலோ/மரம்)

மூரேட் ஆப் பொட்டாஷ்
(கிலோ/மரம்)

1

10

0.308 (140 g N)

0.500 (80 g P2O5)

0.480 (300 g K2O)

2

20

0.616 (280 g N)

1.000 (160 g P2O5)

0.960 (600 g K2O)

3

30

0.924 (420 g N)

1.500 (240 g P2O5)

1.440 (900 g K2O)

4

40

1.23 (560 g N)

2.000 (320 g P2O5)

1.920 (1200 g K2O)

5 வருடம் முதல்

50

1.23 (560 g N)

2.000 (320 g P2O5)

1.920 (1200 g K2O)

இரசாயன உரமானது இரண்டு சமபாகங்களாக ஜுன் - ஜுலை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இடப்படுகிறது. எரு மற்றும் இரசாயன உரங்களை தென்னை மரத்தின் அடியிலிருந்து 1.8 மீ துாரத்தில் வட்டப்பாத்திகளில் இட வேண்டும். மேலும் உரம் இடும்போது அவை நன்கு மண்ணில் கலக்க, போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு நீரை பாய்ச்ச வேண்டும்.


தென்னையில் பசுந்தாள் உரம் இடுதல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தென்னை ஊக்க மரம்

காய்க்கும் மரங்களுக்கு, வேர்மூலமாக தென்னை ஊக்க உரத்தை ஒரு மரத்திற்கு 200 மில்லி அளவில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும்.

தென்னைக்கு நுண்ணுயிர் உர பரிந்துரைகள்

50 கிராம் அஸோஸ்பைரில்லம் + 50 கிராம் பாஸ்போபாக்டீரியா அல்லது 100 கிராம் அஸோஃபாட் உடன் 50 கிராம் வேர் உடபூசணத்தை தேவையான அளவு கம்போஸ்ட் அல்லது தொழு உரத்துடன் கலந்து இளம் வேர்களில் படும்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை இடவும். இராசயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களோடு உயிர் உரங்களை கலக்கக்கூடாது.

அங்கக கழிவு சுழற்சி

சணப்பு, அவுரி, கலப்பகோனியம், தக்கைப்பூண்டு ஆகிய ஏதாவது ஒரு பசுந்தாள் உரத்தைப் பயரிட்டு பூக்கும் தருணத்தில் உழவு செய்துவிடவேண்டும். சணப்பையை ஒரு வட்டப்பாத்திக்கு 50 கிராம் என்ற அளவில் விதைத்து பூக்கும் தருணத்தில் கொண்டு மண்ணோடு கலந்துவிடவேண்டும். மேலும் தென்னை நார்க்கழிவு அல்லது தென்னை மட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மண்புழு உரம் மற்றும் மக்கிய கழிவுகளையும் இட்டு சுழற்சி செய்யலாம்.


Update : December 2014