தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

நாற்றங்கால் மேலாண்மை
நாற்றங்கால் பரப்பு

  • நல்ல வடிகால் வசதியுள்ள, உலர்ந்த மணற்பாங்கான பாசன வசதியுள்ள  நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். நாற்றங்காலில் திறந்த வெளி நிழலமைப்பு அமைத்து நிழலை ஏற்படுத்த வேண்டும் அல்லது முதிர்ந்த மரங்களுக்கிடையே நாற்றங்கால் அமைக்கவும்.

 

நாற்றங்கால் படுக்கை தயாரித்தல்

1.5 மீ அகலமும் உகந்த நீளமும் 75 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்ட படுக்கைகள்

சமப்படுத்தப்பட்ட படுக்கை
     

சிறிய படுக்கைகள்

நன்கு தயாரிக்கப்பட்ட நாற்றங்கால் படுக்கைள்
 
நாற்றங்கால் அமைப்பு

தென்னைகளுக்கு இடையே அமைக்கப்பட்ட நாற்றங்கால்

மேட்டுப்பாத்தி நாற்றங்கால்

50 % நிழலூட்டப்பட்ட நாற்றங்கால்

விதைத் தேங்காய் நடவு

  • விதைக்கான தேங்காயை 30 x 30 செ.மீ இடைவேளி விட்டு 20 - 25 செ.மீ  ஆழத்தில் படுக்கை வசமாகவோ அல்லது செங்குத்தாகவோ நடலாம். ஒவ்வொரு பாத்திகளிலும் 50 காய்கள் ஒரு வரிசை வீதம் 5 வரிசைகளில் நடலாம்.

விதைத் தேங்காய் நடவு


நடவுக்காக தயாரிக்கப்பட்ட படுக்கைகள்

நாற்றங்கால் படுக்கை

படுக்கை தயாரித்தல்

விதை பருப்புகளை சரியாக நடுதல்

நடுதல்


பருப்புகளின் மேல்பாகம் தெரிய வேண்டும்


தென்னங்காய்களின் நுனிப்பகுதியிலிருந்து வரும் நாற்றின் வளர்ச்சி


நாற்றங்காலில் பின் செய் நேர்த்தி

  • மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்
  • நாற்றங்காலில் களையை கட்டுப்படுத்த இரண்டு முறை சணப்பை விதைக்கலாம். அதனை தொடர்ந்து ஆறாவது மாதம் கைக்களை எடுக்க வேண்டும். அவ்வாறு பயிரிடப்பட்ட சணப்பையை உழுது தென்னைக்கு உரமாக்கலாம்.
  • நாற்றங்காலுக்கு நிழலூட்டுவதற்காக படுக்கையின் இருபுறங்களிலும் அகத்தியை பயிரிட வேண்டும்.
  • விதைத்தென்னை நடவு செய்த 6-8 வாரங்களில் முளைக்க ஆரம்பித்து, 6 மாதங்கள் வரை நீடிக்கும். நடவு செய்த 5 மாதங்களில் முளைத்த நாற்றினை தேர்வு செய்து நடவும்.
  • பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தவிர்க்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நாற்றங்கால் மேலாண்மை


பாசன வாய்க்கால்


பாசன வாய்க்கால்


பாசனம் செய்த நாற்றங்கால்

நாற்று முளைப்பு

நாற்று முளைத்த வயல்

2 மாத நாற்றுகள்

3 மாத நாற்றுகள்

4 மாத நாற்றுகள்

5  மாத நாற்றுகள்

8 மாத நாற்றுகள்

9  மாத நாற்றுகள்

10 மாத நாற்று

தாமதமாக முளைத்த நாற்றுகள்


நன்கு முளைத்த நாற்றுகள்

நாற்றங்காலில் கை களையெடுத்தல்

விதை - நாற்று

நாற்றுகளை தேர்வு செய்தல்
9-12 மாதங்களான தரமான கன்றுகளை பின்வரும் இயல்புகளை பயன்படுத்தி தேர்வு செய்யலாம்.

  • விரைவில் முளைத்தல், விரைந்த வளர்ச்சி மற்றும் கன்றுகள் வீரிய தன்மை. 
  • 6 முதல் 8 ஓலைகள் உள்ள 10-12 மாதங்கள் ஆன அல்லது குறைந்தது நான்கு ஓலையுள்ள 9 மாத கன்றுகள். 
  • கழுத்து தடிமன் 10-12 செ.மீ. 
  • விரைந்து பிளக்கும் இலைகள், விரைந்து வளரும் மற்றும் விரைந்து காய்க்கும் திறனை குறிக்கிறது.

நல்ல வேர் அமைப்பு

பூச்சி மற்றும் நோயற்ற கன்று

தகுந்த நல்ல வளர்ச்சியுடைய கன்று

அகற்றப்படும் நாற்று

  • விதைத்து 6 மாதங்களுக்குள் வளராத மற்றும் இறந்த துளிர் உள்ள காய்களை அகற்றவும்.

மொட்டு அழுகல் பாதிக்கப்பட்ட நாற்று


நோயுற்ற நாற்று


சிதைப்பட்ட விதைக்காய்


குறைந்த வளர்ச்சியுடைய கன்று

குறைந்த வேர் வளர்ச்சியுடைய நாற்று

நாற்று அறுவடை

  • கன்றுகளை நாற்றங்காலில் இருந்து மம்மட்டியால் உயர்த்தி அகற்றி, வேர்களை வெட்ட வேண்டும். ஓலை அல்லது தண்டை இழுத்து அகற்றுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
  • குறைந்தபட்சம் ஆறு இலைகள் மற்றும் 10 செ.மீ. சுற்றளவு கொண்ட நாற்றுகளை நடவுக்கு தேர்ந்தெடுக்கவும்.


Update : December 2014