நீர் மேலாண்மை
ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியாதலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மை திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம் அல்லது வட்டப்பாத்தி மூலம் கடைப்பிடிக்கலாம்.
தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்).
மாதங்கள் |
நீர்நிறைந்த பகுதிகள் |
நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள் |
வறட்சியான பகுதிகள் |
அ. சொட்டு நீர்ப்பாசனம் |
பிப்ரவரி - மே |
65 |
45 |
22 |
ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் |
55 |
35 |
18 |
ஜுன் மற்றும் ஜுலை, அக்டோபர் முதல் டிசம்பர் வரை |
45 |
30 |
15 |
ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசனம் |
பிப்ரவரி - மே |
410 லிட்டர் / 6 நாள் * |
|
|
ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் |
410 லிட்டர் / 7 நாள் * |
|
|
ஜுன் மற்றும் ஜுலை, அக்டோபர் - டிசம்பர் |
410 லிட்டர் / 9 நாள் * |
|
|
தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் அக்டோபர் தென்னை மரங்குளுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்)
மாதங்கள் |
நீர் நிறைந்த பகுதிகள் |
நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள் |
வறட்சியான பகுதிகள் |
அ. சொட்டு நீர்ப்பாசனம் |
மார்ச்சு - செப்டம்பர் |
80 |
55 |
27 |
அக்டோபர் - பிப்ரவரி |
50 |
35 |
18 |
ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசன முறை |
மார்ச் - செப்டம்ப ர் |
410 லிட்டர் / 5 நாள் |
|
|
அக்டோபர் - பிப்ரவரி |
410 லிட்டர் / 8 நாள் |
|
|
- வட்டப்பாத்திகளில் நீர் பாய்ச்சும்பொது மேலே கொடுக்கப்பட்ட நீரின் அளவுடன் 35 முதல் 40 சதவிகிதம் (135 - 160 லிட்டர்) அதகப்படுத்தி வாய்க்கால்களில் பாய்ச்சும்போது குறையும் நீரின் அளவை ஈடுகட்டவேண்டும்.
- தென்னை நார்க்கழிவால் நிரப்பப்பட்ட ஒரு அடி நீள, அகல, ஆழ குழிகள் அமைத்து குழிக்குள் 16 மி.மீ விட்டமுடைய பி.வி.சி குழாய்களை சாய்வாக வைத்து அதில் சொட்டு நீர் விழும்படி அமைக்கவேண்டும். இக்குழிகள் மரத்திலிருந்து 1 மிட்டர் தூரத்தில் நான்கு பக்கமும் அமைக்கப்படவேண்டும்.
- முதலாம் ஆண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாளும், இரண்டாம் ஆண்டு முதல் காய் விடிக்கும் வரை வாரம் இருமுறையும் தேவைக்கேற்ப பாய்ச்சதல் சிறந்தது.
|