தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை |
|
பயிர் இடைநேர்த்தி மற்றும் களை நிர்வாகம் தென்னந்தோப்புகளில் வருடம் இரண்டுமுறை அதாவது ஒருமுறையும் மற்றும் மார்கழி மாதத்தில் ஒருமுறையும் உழவு செய்வதன் மூலம் களைகளை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கலாம். மேலும் இது வேர்களில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, புதிய வேர்கள் விடத் தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது. இராசயன களைக் கட்டுப்பாடு இருவிதை இலைகள் நிறைந்த தோப்புகளில் களை முளைப்பதற்கு முன் அட்ரசின் களைக்கொல்லியை செயல்படும் ஒரு கிலொ அளவில் ஒரு எக்டருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம். புல் வகை மற்றும் கோரை வகை களைச் செடிகள் உள்ள தோப்புகளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி கிளைபொசேட் என்னும் களைக்கொல்லி மற்றும் 20 கிராம் அம்மோனியம் சல்பேட் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
|
|
Update : December 2014 | |
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014. |