ஸ்பின்டில் வண்டு :மிதைல் பாரதியான் 1.3 D மருந்தை லிட்டருக்கு 2.5 கிராம் (அ) டைமிதோயேட் லிட்டருக்கு 1.5 மி.லி. தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
பாளைப்புழுக்கள் :இதனை கட்டுப்படுத்த மிதைல் பாரதியான் 20 EC 2 மிலி (அ) WP 2.5 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
நூற்புழு:
சூடோமோனாஸ் ஃப்ளுரசன்ஸ் மற்றும் பேசிலஸ் சப்டிலிஸை மண்ணில் இடுவதன் மூலம் வேர்மூடிச்சு நூற்புழு மற்றும் அவரை விதை வடிவ நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.
நோய்கள்
காய் அழுகல் அல்லது மாகாளி நோய் : நோய் தாக்கப்பட்ட பகுதியை நீக்கிவட்டு அந்த இடத்தில் 10 சதவீதம் போர்டோக் கலவையை தடவிவிடவேண்டும்.
அடித்தண்டு அழுகல் : கடுமையாக தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அழித்துவிடவேண்டும்.வேப்பம் பிண்ணாக்கு 2 கிலோ/மரம்/வருடம் மண்ணில் இடுவதை தொடர்ந்து 1.5 % டிரைடிமார்ஃப்யை 125 மி.லி. மூன்று மாத இடைவெளியில் வேர் மூலம் செலுத்த வேண்டும். 1% போர்டாக்ஸ் கலவையை மண்ணில் தெளிக்க வேண்டும்.
மஞ்சள் இலை நோய்
சரிவிகித சத்துகளுடன் சூப்பர் பாஸ்பேட்டை கூடுதல் அளவு இடவும்.
சுண்ணாம்பு - 1 கிலோ/மரம்/வருடம் பயன்படுத்தவும்.
அங்கக உரங்கள் - 12 கிலோ/மரம்/வருடம் பயன்படுத்தவும்.
இலைப்புள்ளி நோய்:
1% போர்டாக்ஸ் கலவை (அ) 0.2% டைதேன் M 45 யை இலைவழியாக தெளிக்கவும்.
பாக்கு விரிசல் நோய்:
2 கிராம் போராக்ஸ்/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
அறுவடை
நட்ட 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும். ஒரு வருடத்தில் மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.
மகசூல் : எக்டருக்கு 1250 கிலோ.