தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: முந்திரி |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் சந்தை நிலவரம் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் : வி.ஆர்.ஐ.1 (விருத்தாச்சலம்) வி.ஆர்.ஐ.2 வி.ஆர்.ஐ 3 மண் மற்றும் தட்பவெப்பநிலை : எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். இருந்தாலும் சற்று மணற்பாங்கான செம்பொறை மண் முந்திரிக்கு ஏற்றது. வடிகால் வசதி வேண்டும். களர் உவர் தன்மை இல்லாத நிலமாக இருத்தல் சிறந்தது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும். பருவம் : ஜுன் - டிசம்பர் விதையும் விதைப்பும் இனப்பெருக்கம் : ஒட்டுக்கட்டுதல், இளம் தண்டு ஒட்டு, முந்திரி ஒட்டுக்கட்டும் முறையில் “இளம் தண்டு ஒட்டு முறை: மிகவும் சிறந்தது. அதிக மகசூலைக் கொடுக்கவல்லது. எனவே விவசாயிகள் ஒட்டுக்கட்டும் முறையில் பயிற்சி ஒட்டு உற்பத்தி செய்து, ஒட்டுக் கன்றுகளையே நடுவதற்குப் பயன்படுத்தவேண்டும். நிலம் தயாரித்தல் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் செய்தபிறகு 45 செ.மீ நீளம். அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுத்து, ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 10 கிலோ தொழு எரு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 1.3 சதம் லிண்டேன் மருந்து 100 கிராம் என்ற அளவில் போடவேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக்கொள்ளவேண்டும். பின்பு குழிகளின் மத்தியில் ஒட்டுக்கன்றுகள் நடவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை உரமிடுதல் (மரம் ஒன்றுக்கு)
ஒவ்வொரு முறையும், உரங்களை நவம்பர் - டிசம்பர் மாதத்தில் இடவேண்டும். இரண்டு பருவமழை பொழியும் இடங்களில் உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் - ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இரண்டாவது முறையும் இடவேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி ஊடுபயிர் : முந்திரி காயப்புப்க்கு வரும் வரை கன்றுகளக்கு இடைவெளியை மழை வந்தபிறகு நன்கு உழுது நிலக்கடலை, பயிறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம். கவாத்து செய்தல் : மரத்தில சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிடவேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்து போன மற்றும் குழிக்காக வளர்ந்து கிளைகளை வெட்டிவிடவேண்டும். இதனால் சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் மரங்களுக்குக் கிடைக்கும். மேலும் ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச் செடியில் தோன்றும், பூக்களையும் உருவிவிடவேண்டும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு தண்டுத் துளைப்பான் : இது முந்திரியைத் தாக்கும் முக்கியமான புழு ஆகும். இப்புழு அதிகமாகக் காய்ககம் மரத்தையே சேதப்படுத்துகிறது. இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதம் காணப்படும். சேதத்தின் அறிகுறி மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும் சிறு துளைகளும் அவற்றின் வழியே வெளிவரும் பிசின் போன்ற திரவமும் மற்றும்புழு கடித்துப் போட்ட சக்கைகளுமே ஆகும். இதனால் மரங்களில் இலைகள் உதிர்ந்து மரம் காய்ந்து மொட்டையாகிவிடும். கட்டுப்படுத்தும் முறைகள்
தேயிலைக்கொசு : இக்கொசு இளம் தளிர், பூக்கள், பிஞ்சுகள் ஆகியவற்றில் சாற்றை உறிஞ்சுவதால், கரும்புள்ளிகள் ஏற்பட்டு, நாளடைவில் கருத்துவிடும். கட்டுப்பாடு : மானோகுரோட்டாபாஸ் 35 இசி 1.5 மில்லி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து மூன்று முறை தெளிக்கவேண்டும். தளிர்விடும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் காய்க்கும் பருவம் ( காய்கள் பட்டாணி வடிவத்தில் இருக்கும்போது). வேர்த் துளைப்பான் : ஒரு மரத்திற்கு மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை இரண்டு முறை அதாவது 5 மில்லி மருந்து + 5 மில்லி தண்ணீர் கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். நோய்கள் : நுனிக்கருகல் அல்லது இளஞ்சிகப்பு பூசண நோய் : நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி எடுத்துவிடவேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம் போர்டோக்கலவை அல்லது ஏதாவது தாமிரப்பூசணக் கொல்லி மருந்தினை தடவிவிடவேண்டும். அறுவடை ஒட்டுக்கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்திலிருந்தே காய்ப்புக்கு வரும் . மார்ச் - மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, சூரிய வெய்யிலில் 2 அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர்த்தவேண்டும். மேற்பகுதி மாற்ற வேலை வயதாகிய மற்றும் குறைந்த மகசூல் தரம் முந்திரி மரங்களை மேற்பகுதி மாற்ற வேலை மூலம் புதுப்பிக்கலாம். முதல்லி மரங்களை தரைமட்டத்திலிருந்து 1-3 மீட்டர் அளவில் வெட்டிவிடவேண்டும். பின் அதனின் வரும் தளிர்களில் இளந்தளிர் ஒட்டு மூலம் புதிய ஒட்டுகள் நாளடைவில் வளர்ந்து மகசூல் தர ஆரம்பிக்கும்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேலோட்டம் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசிய இணையதளங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பழப்பயிர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||