||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: காப்பி
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள்

அரபிகா காப்பி
எஸ்.எல்.என் 7,9,10,795 காவேரி மற்றும் எச்.ஆர்.சி
ரொபஸ்டா காப்பி
எஸ்.எல்.என் 274

மண் மற்றும்  தட்பவெப்பநிலை

அங்ககச் சத்து நிறைந்தள்ள அனைத்து மண் வகைகளும் சாகுபடிக்குச் சிறந்தது.
இதனைக் கடல்மட்டத்திலிருந்து 500 முதல் 1650 மீட்டர் வரையிலும், 150 முதல் 200 செ.மீ வருடமழையளவு இருக்கும் பகுதிகளில்  சாகுபடி செய்யலாம். பூக்கும் தருணத்தில் (மார்ச் - ஏப்ரல்) மற்றும் காய் வளர்ச்சி நிலையிலும் (மே - ஜுன்) மழை பொழிதல் அவசியமாகும்.

பருவம் : ஜுன் - டிசம்பர்

விதை

இப்பயிரினை விதை மூலம் உற்பத்தி செய்யலாம். நோயற்ற நன்கு முதிர்ந்த பழங்களை விதைக்கென்று தனியாக அறுவடை செய்யவேண்டும். தண்ணீர் மிதக்கும் வெற்று விதைகளை நீக்கிவிடவேண்டும். நல்ல பழங்களிலிருந்து சதைப்பற்றினை நீக்கி விதையின் தனியெ பிரித்தெடுக்கவேண்டும். பின்பு மரத்தூள் கலந்து நிழலில் உலர வைக்கவேண்டும். நன்கு  திரண்ட விதைகளை பிரித்தெடுத்து அக்ரோசான் என்றும் மருந்துடன் நேர்த்தி செய்வதால் பூஞ்சாணநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

நாற்றாங்கால்

நல்ல வடிகால் வசதி, இருபொறை, மண்ணில் அதிக அளவிலான அங்கக சத்துக்களுடைய மண்வகைகளை தண்ணிர் மற்றும் நிழல் பகுதியில் தேர்வு  செய்யவேண்டும். மேட்டு / மேடை பாத்திகள் தேவையான அளவு நீளமும் 1 மீட்டர்அகலமும் 15 நெ.மீ உயரம் கொண்டிருக்குமாறு அமைக்கவேண்டும். 1 x 6 பரப்பளவு உள்ள பாத்திகளுக்கு 30-40 கிலோ மக்கிய தொழு உரம், 2 கிலோ சலித்த சுண்ணாம்பு மற்றும் 400 கிராம் ராக்பாஸ்பேட் ( பாறை உப்பு) இடவேண்டும். களிமண் மற்றும் இதர மண்வகைகளுக்கு மணல் சேர்ப்பதன் மூலம் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட வசதி கிடைக்கும். நாற்றாங்காலில் விதைக்கும் முன்னர் விதைகளை அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் நேர்த்தி செய்தல்வேண்டும்.

விதைகளை டிசம்பர் - ஜனவரி மாதங்களில் விதைகளை 1 அங்குல இடைவெளியில் விதையின் தட்டையான பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு விதைக்கவேண்டும். அதன் பின்னர் மெர்ரிய அடுக்குகளான மண்ல் / கலவை இட்டு பின வைக்கோலை மூடவேண்டும். பாத்திகளுக்கு தினசரி தண்ணீர் தெளிக்கவேண்டும். மேலும் நேரடியான சூரிய ஒளியினைக் கட்டுப்படுத்த பந்தலிட்டு ஒளியினைக் கட்டுப்படுத்தவேண்டும். விதைத்த 45வது நாளில் விதைகள் முளைத்துவிடும். பின் அவற்றினை இரண்டாம் நிலை நாற்றாங்கால் (அ) பாலித்தீன் பைகளில் நடவு  செய்யவேண்டும்.

பாலித்தீன் பைகளில் இரண்டாம் நிலை நாற்றாங்கால்

           
பாலித்தீன் பைகளில் வடிகால் வசதிக்குத் தேவையான துளையிட்டு அதனுள் 6:2:1 என்ற அளவில்  மண், மக்கிய தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையினை நிரப்பவேண்டும். 12 x 8 பரப்பளவில் 5000 நாற்றுக்களை உருவாக்க முடியும்.

நடவு

நிழல் தரும் மரங்களைத் தவிர தேவையற்ற மரங்களை நீக்கிவிடவேண்டும். சரிவான நிலப்பகதியில் அடுக்குப் பாத்தி அமைக்கவேண்டும். கோடை மழைக்குப் பின்னர் 1.25 - 2.5 மீட்டர் இடைவெளியில் 45 x 45 x 45 எடுக்கவேண்டும். குழிகளை நன்கு ஆறவிட்டு பின் மேல் மண்ணுடன் 500 கிராம் பாறை உப்பு (ராக்போஸ்ட்) இட்டு நடவு செய்யவேண்டும்.

நிழல்  தரும் மரங்களை நடவு செய்தல்

சில்வர் ஓக் மற்றும் கல்யாண முருங்கை மரங்களை நிழல் தரும் மரங்களாக நடவு செய்யவேண்டும். இந்த மரங்களை தென்மேற்கு பருவமழை (ஜுன்) தொடங்கும் பொழுது நடவு செய்யவேண்டும். கோடைக்காலங்களில் ஏற்படும் அனல் காற்றினை தடுக்க தண்டுப் பகுதியினை சுண்ணாம்பு (அ) கற்றாலை (அ) பாலித்தீன் பைகள் சுற்றி பாதுகாக்கலாம். மழைக்காலங்களில் தேவையற்ற கிளைகளை வெட்டி நீக்கிவடுதல் வேண்டும்.

இடைவெளி

அரபிக்கா காப்பி : இருபுறமும் 1.5 முதல் 2.0
சேன்ரேமன் (குட்டை இரகம்) : 1 x 1 மீட்டர்
ரெபஸ்டர் காப்பி : இருபுறமும் 2.5 மீட்டர்

நீர் நிர்வாகம்

பொதுவாக காப்பிப் பயிரானது மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வரகின்றது. மேலும் மார்ச - ஏப்ரல் மாதங்களில் தெளிப்பு நீர் (ஸ்பிரிங்ளர்) மூலம் நீர் செலுத்துவதன் மூலம் பூக்கள் மலர ஆரம்பிக்கும்.

பின்நேர்த்தி

தேவையின் போது களை எடுத்தல்வேண்டும். மேலும், காய்ந்த இலைகளை நிலப்போர்வையாக இடவேண்டும். பருவமழை முடியும் தருணத்தில் (அக்டோபர் – நவம்பர்) ஒரு அடி ஆழத்திற்கு கொத்திவிடவேண்டும். இவ்வாறு செய்யும் போது இலை மற்றும் களையினை மண்ணில் புதையச் செய்து அதன் பின் மக்கச் செய்து அங்கக சத்துக்களை செடிகளுக்கு கிடைக்கச் செய்கின்றது. நோய் தாக்கப்பட்ட மற்றும் காய்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டி நீக்குதல் வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

வெள்ளை தண்டு துளைப்பான்

அரபிக்கா காப்பியில் குறைந்த அளவிலான நிழல் இருக்கும் பொழுது இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்குத் தேவையான லிண்டேன் பவுடரை (2 கிலோ) 180 லிட்டர் தண்ணீரில் கலந்த தண்டுப்பகுதியில் படுமாறு தடவுதல் வேண்டும். மேலும் துளைப்பகுதியில் மோனோக்குரோட்டோபாஸ் நனைந்த பஞ்சு கொண்டு மூடவேண்டும்.

காய் துளைப்பான்

சரியான தருணத்தில் அனைத்து காய்களையும் பறித்துவிடவேண்டும். அதிகமான நிழல் பகுதியினைக் குறைத்து விடுதல்வேண்டும். என்டோசல்பான் 35இசி மருந்தினை 3340 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மலர்ந்த 120-150 நாளில் அறுவடை செய்யலாம். எனவே பூச்சிக்கொல்லி பயன்பாட்டினை அதற்கேற்றவாறு செய்யவேண்டும்.

காய் துளைப்பான்

மாவுப்பூச்சி

மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த குயினால் பாஸ் 35 இசி 2 மில்லி லிட்டர் (அ) பென்தியான் 1 மிலி (லிட்டர்) (அ) பெனிட்ரோதையான் 1 மிலி x லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

துருநோய்

பூக்கும் தருணத்திற்கு முன்னர் (பிப்ரவரி - மார்ச்) போர்டோக்கலவையும் அதனைத் தொடர்ந்து 0.03 சதவிகிததம் ஆக்சிகார்பாக்சின் மருந்தை பருவ மழைக்குப் பின்னர் (மே - ஜுன்) தெளிக்கவேண்டும்.

துருநோய்

கருப்பு அழுகல் நோய்

பருவமழை இடைப்பட்ட காலக்கட்டங்களில  1 சதவீதம் போர்டோக்கலவை தெளிக்கவேண்டும்.

கருப்பு வேர் அழுகல் நோய்

தாக்கப்பட்ட செடிகளைத் தோண்டி எடுத்த எரிதது விடவேண்டும். தாக்கப்பட்ட செடிகளில் 30 நெ.மீ ஆழக்குழி எடுக்கவேண்டும். பின் அவற்றுள் 18 மாதம் கழித்து நடவு செய்யவேண்டும்.

அறுவடை

அறுவடை நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கும். காப்பி பழங்களை பழுத்த உடன் அறுவடை செய்யவெண்டும். சதைப்பற்ளினை நீக்குவதற்கு முன் பழுக்காத காய்களைப் பிரித்து எடுக்கவேண்டும். இதனைத் தனியாக உலர வைத்து செர்ரி காப்பியாக பயன்படுத்தலாம்.

மகசூல் : ஒரு எக்டரிலிருந்து 750-1000 கிலோ மகசூல் அறுவடை செய்யலாம்.

இதர வாசனைப் பயிர்கள்


பெயர்

பயிர் உற்பத்தி / பெருக்கம்

இடைவெளி

ஊட்டச்சத்து

பின்செய்நேர்ததி

அறுவடை

மகசூல்

 

தண்டுக்
குச்சிகள்

6 x 6 மீட்டர்

-

தேவைப்படும் போது களை எடுத்தல்வேண்டும்.

ஜுலை முதல் ஆகஸ்ட் மாதம் அறுவடை செய்யவேண்டும். அறுவடைக்குப் பின் வெய்யிலில் காய வைத்து பதப்படுத்தவேண்டும்.

ஒருமரத்திலிருந்து 50-60 கிலோ மகசூல் மேலும் காய்ந்த இலைகளை உணவுப் பொருள் / வாசனைக்காக பயன்படுத்தப்
படுகின்றது.


 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008