Horticulture
||| | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: எண்ணை பணை
 

எண்ணைய் பனை (எலயிஸ் கைனன்சிஸ்)
பால்மே

உலக எண்ணைய் பனை உற்பத்தி வரைபடம்

 

எண்ணைய் பனை உற்பத்தி                                    

எண்ணைய் பனை தோட்டம்   

 

எண்ணைய் பனை பழம்                 எண்ணைய் பனை பழம் - பகுதிகள்

இரகங்கள் - டுரா, டெனிரா, பிஷிஃபேரா

வகைகள்

தட்பவெப்பநிலை: வெப்பநிலை - 210 C to 320C, மழையளவு – 200  செ.மீ மற்றும் ஈரப்பதம் - 75 – 100 %. இவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 450 முதல் 900 மீட்டர் உயரம் வரை உள்ள மலைப்பகுதிகளில் வளரக்கூடியது.

மண்: ஆழ்ந்த ஈரப்பதம் மற்றும் சிறந்த நீர் ஊடுருவும் தன்மை கொண்ட களிமண் இப்பயிரிடுவதற்கு உகந்தவை. எண்ணைய் பனை பயிரிடும் மண் 4 முதல் 6 கார அமில கொண்டதாக இருத்தல் நல்லது.

நாற்றங்கால் தொழில்நுட்பம்: குலையிலிருந்து பழங்களை தனியாக பிரித்து, பழத்தின் வெளியுறை மற்றும் நடுத்தோல்களை நீக்க வேண்டும். விதைகளை இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்தி, 3 முதல் 9 மாதங்கள் வரை சேமித்து வைக்க வேண்டும். நாற்றங்கால் தயாரிக்கும் பொழுது விதைகளை ஐந்து நாட்கள் சுத்தமான தண்ணீரில் ஊற வைத்த பின்னர் 24 மணி நேரம் உலர்த்த வேண்டும். அவ்வாறு உலர்த்திய விதைகளை மேல் மணல், மண் மற்றும் எரு நிரப்பப்பட்ட 23 x13 செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் விதைக்க வேண்டும் 10 முதல் 15 நாட்களில் 90 முதல் 95 சதவித முளைப்பு காணப்படும். நாற்றுகள் நன்கு வளர 5 லிட்டர் தண்ணீரில் 15 :15: 6 NPK உரக்கலவையை 8 கிராம் அளவில் 100 நாற்றுகளுக்கு இடவும்.

நாற்றங்கால்

நடவு: 60 க.செ.மீ அளவு குழிகள் தோண்டவும். முக்கோண நடவு முறையில் 9 x 9 x 9 x 9 மீ இடைவெளியில் ஒரு எக்டருக்கு 140 செடிகள் நடலாம். மே-ஜீன் மாதம் நடவுக்கு ஏற்ற பருவமாகும்.
மூடாக்கிடுதல்: எண்ணைய் பனையின் பழக்கழிவுகள், ஆண் பூக்கள், தேங்காய் உமி, கரும்புத் தோகை போன்றவற்றை கொண்டு மூடக்கிடலாம்.

நீர்ப்பாசனம்: மூன்று வருடங்கள் மற்றும் அதற்கு மேலும் நாள் மகசூல் ஈட்டக்கூடிய மரங்களுக்கு, ஒன்றிற்க்கு 150 லிட்டர் நீர் பாய்ச்ச வேண்டும்.

சொட்டு நீர்ப்பாசனம்: மரம் ஒன்றிற்கு் 4 சொட்டுவான்கல் பயன்படுத்தி 8 லிட்டர் நீர் மணி/ சொட்டுவான்கல், நீர் அளக்க வேண்டும்.

மலர் நீக்கம்: மரத்தின் வீரியம் மற்றும் வேர்கள் நன்கு வளர நடவு செய்த முதல் மூன்று வருடங்கள் வரை மாத இடைவெளியில் மலர்களை நீக்க வேண்டும்.

உரமிடுதல்: ஐந்து வயதுடைய மரங்களுக்கு 50 கிலோ மட்கிய உரம் அல்லது தொழு உரம் அல்லது பசுமை இலைகளை இட வேண்டும்.
உர அட்டவணை : N: P: K : Mg So4 (கிராம்/பனை/வருடம்)
முதல் வருடம் = 400:200:400:125
இரண்டாம் வருடம் = 800:400:800:250
மூன்றாம் வருடம் முதல் = 1200:600:1200:500 (2 சமமான அளவாக பிரித்து ஜூலை- ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இட வேண்டும்)

உரமிடுதல்

 

அ. தழைச்சத்து

எண்ணை பனை மரத்தின் இலைகளின் பரப்பு, ஆண், பெண் பூக்களின் விகிதம மற்றும் குலைகளின் எண்ணிக்கை மற்றும் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது. தழைச்சத்து பற்றாக்குறை இருப்பின் மரத்தின் இலைகளில் பச்சையம் குறைந்து முழுவதும் மஞ்சள் நிறத்திற்கு மாறுதல். அதிக அளவில் தழைச்சத்து இடுவதாலும் அதிக அளவில் ஆண் பூக்கள் உருவாகும்.

ஆ. மணிச்சத்து

வேர்களின் உற்பத்தி, பழக்குலைகளின் உற்பத்தி திறன் முற்றும் முதிர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மணிச்சத்து பெண் பூக்கள் மற்றும் குலைகளின் எண்ணிக்கை, குலைகளின் எடை ஆகியவற்றை அதிகரிக்கும். மணிச்சத்து குறைபாட்டினால் இலைகளில் துரு பிடிக்காத மாதிரியான இளஞ்சிவப்பு நிறத் திட்டுகளும் நுனி இலைகள் காய்ந்து போவதும் ஏற்படும்.

இ. சாம்பல் சத்து

சாம்பல் சத்தானது ஒளிச் சேர்க்கையை அதிகப்படுத்துதல், நீராவிப் போக்கை கட்டுப்படுத்துதல், பழக்குலைகளின் எண்ணிக்கை, எடை மற்றும் பெண் பூக்களின் எண்ணிக்கையினை அதிகரித்து மரத்தின் முற்றிய இலைகள் மஞ்சள் நிறமாக மாறி திட்டுத் திட்டாக கரும்புள்ளிகள் காணப்படும். மேலும் இதன் முக்கிய அறிகுறியாக ஆரஞ்சு நிறப்புள்ளிகள் காணப்படும்.

ஈ. மக்னீசியம்

இதன் பற்றாக்குறையினால் இலை முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி நன்கு வெளிப்படுத்தும். இந்த நிறம் முற்றிய இலைகளில் தெரியும். மற்ற இலைகளின் மீது இது வெளிர் ஆரஞ்சு நிறமாக இருக்கும். மக்னீசியம் பச்சையத்தின் முக்கிய மூலக்கூறு. ஆகவே இதன் பற்றாக்குறையை நன்கு கண்டு கொள்ளலாம். இதனைப் போக்க மரத்திற்கு 500 கிராம் மக்னீசியம் சல்பேட் உரத்தை இடவும்.

உ. இதர நுண்ணூட்டங்கள்

இரும்பு, மாங்கனீசு, காப்பர் மற்றும் துத்தநாக குறைபாடுகள் பொதுவாக, நம்
தமிழகத்தில் காணப்படுவதில்லை. போரான் குறைபாடு காணப்படும் இடங்களில் நுனிப்பகுதி ஆரம்ப இலைகளின் நுனிப்பகுதி ஆரம்ப கட்டத்தில் கொக்கியைப் போல் வளைந்தும் பிறகு இலைப்பகுதி சிறிது சிறிதாக சுருங்கி கடைசியில் மீன் முள்போல் சுருங்கி விடும். முற்றிய நிலையில் மட்டைகள் கொத்து போல் ஒன்றோடொன்று சேர்ந்து மர வளர்ச்சி குன்றி காணப்படும். மரத்திற்கு 50-200 கிராம் போராக்ஸ் டெகா ஹைட்ரேட் வயதிற்கு தகுந்தாற்போல சிபாரிசு செய்யப்படுகிறது.

பாதைகளை பராமரித்தல்

எண்ணை பனை வயல்களை  சுற்றிப்பார்த்து, பராமரிக்கவும், அறுவுடை செய்யவும் களைக் கட்டுப்பாடு செய்யவும் வயல்களில் பாதைகளை நன்கு பராமரித்தல் அவசியம்.

பூக்கள் நீக்கம் (Ablation)

பாமாயில் மரங்கள் நட்ட நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகள் வரை பூக்களை நீக்க (Ablation) செய்யவேண்டும். இளம் பூக்களை கைகளாலே நீக்கி விடலாம். சற்று முற்றிய பூக்களை உளி, கத்தி கொண்டு நீக்கலாம். ஆரம்ப கட்டங்களில் குலைகளின் அளவு மிகச்சிறியதாக இருப்பதாலும், அவற்றின் எண்ணெயின் அளவு மிகக் குறைவாக இருப்பதாலும் பூ நீக்கம் தேவைப்படுகிறது. மேலும் பாமாயில் மரம் வீரியமாகவும் அடிப்பகுதி பெருத்தும், போதுமான வேர்த் தொகுப்புடன் வளர்வதற்கும் பிற்காலத்தில் விளையும் பழக்குலைகள் மற்றும் மட்டைகளின் எடையைத் தாங்கும் சக்தியை மரம் பெறுவதற்கு வசதியாக கவாத்து செய்தல் இன்றியமையாததாகிறது. 3 வருடங்களுக்கு மேற்பட்டு பழக்குலைகளின் அளவு பெரியதாவதால் அவைகள் அறுவடைக்குத் தயாராகி விடுகின்றன.

லை கவாத்து செய்தல் :

மரத்தின் வயது

இலை / சுற்று

இலை / மரம்

4-7 வருடம்

6-7

48-56

8-14 வருடம்

5-6

40-49

>15 வருடம்

4-5

32-40

மூடுபயிரிடுதல்: பூரேரியா பேசியோலாய்டஸ், கலபகோனியம் மூகோனாய்டஸ், செண்ட்ரோசிமா ப்ருடசென்ஸ், மைமோசா இன்விசா, மூகானா சிற்றினங்கள்.  

எண்ணை பனை மரத்தில் மகரந்த சேர்க்கை

எண்ணை பனை மரங்களில் ஆண் பூ, பெண் பூ தனித்தனியாக தோன்றுவதால் ஆண் பூவில் உள்ள மகரந்தம் பெண் பூவிற்கும் காற்று மூலம் பரவி மகரந்த சேர்க்கை ஏற்படுகிறது. ஆனால் காற்று மூலம் நடக்கும் இம்மகரந்த சேர்க்கை குறைந்த அளவில் ஏற்படுகிறது. அதனால் மகசூலும் குறைவாகவே அதிக அளவு எடைடோவியல் காமரூனிகஸ்  என்ற கூன்  வண்டின் நடமாட்டத்தினால் எண்ணை பனை மரங்களில் அதிக அளவு மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு, அதிக மகசூலும் கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். நம் நாட்டில், இவ்வண்டின் காரணமாக 36 முதல் 56 சதம் வரை அதிகப் பழங்கள் உண்டாகிறது என்று ஆய்வு முடிவுகள்ட கூறுகின்றன.

இந்தச் சிறிய கூன் வண்டு ஆண் பூக்கள் மலர ஆரம்பித்தவுடனேயே பூவிற்கு வரத் தொடங்கிவிடும். இது பூக்கள் முற்றிலும அதன் வாசனைக்கு கவர்ந்து இழுக்கப்பட்டு, ஆண் பூக்களை மொய்த்து விடும். இவ்வாறு அதிக வண்டுகள் மொய்ப்பதால் பூக்களில் இருக்கும் மகரந்தம் காற்றில் சிதறி பெண் பூவிற்கு பரவுவதற்கு ஏதுவாக இருக்கிறது. இவ்வண்டுகள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மகரந்தத்தைதப் பெண் பூவின் வாசனைக்கு கவரப்பட்டு அங்கு செல்லும் பொழுது மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துகிறது.
இவ்வண்டுகள் மகரந்தத்தை சாப்பிடுவதில்லை. பெண் பூக்களில் வளர்ச்சி பெறுவதும் அதை சாப்பிட்டு சேதப்படுத்தவதும் கிடையாது. இதைத் தவிர பாமாயில்  குடும்பத்தை சார்ந்த தென்னை, பாக்கு, பனை மரங்களில் பூக்களை அண்டி வாழ்வதில்லை என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. வண்டுகளை வருடம் முழுவதும் பராமரிக்க வேண்டுமானால்  ஆண் பூக்க்ள தொடர்ந்து இருக்கவேண்டும். எண்ணை பனை தோட்டங்களில் அதிக அளவு பூச்சி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்:
காண்டாமிருக வண்டு : ஆமணக்கு பிண்ணாக்கு ஒரு கிலோவை 5 லிட்டர் நீரில் ஊற வைத்து ஆங்காங்கு சிறு மண்பானைகளில் வைத்து கவரப்படும் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம். புழுக்களை தாக்கக்கூடிய மெட்டாரைசியம் அனிசோபிலியே மற்றும் பேகுலோவைரஸ் ஒரைசிடஸ் எனும் பூசணத்தை குப்பைக் குழியில் இட்டுப் பரவச் செய்யலாம்.வண்டின் புழுக்களை கட்டுப்படுத்த ஒரு குழியில் கார்பரில் (அ) குயினால்பாஸ் 0.025% தெளிக்கவும்.

சிகப்பு கூன் வண்டு: அழுகிய குலைகள் மற்றும் பழங்களை நீக்கி, வெட்டுப்பட்ட இடங்களில் தாரினை பூசுவதன் மூலம் வண்டுகள் முட்டை இடுவதை தவிர்க்கலாம். முதிர்ந்த வண்டுகளை இனக்கவர்ச்சிப் பொறி மூலம் சேகரித்து அழிக்கலாம். வேர் மூலம் 10 மி.லி. தண்ணீரில் 10 மிலி மோனோகுரோட்டோபாஸ் செலுத்த வேண்டும்.

கூண்டுப்புழு: வேர் மூலம் 10 மிலி தண்ணீரில் 10 மிலி மோனோகுரோட்டோ பாசை செலுத்த வேண்டும்.

நோய்கள்:
தண்டு அழுகல் நோய்: பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கவிட்டு, கார்பென்டசிம் 1% மற்றும் மோனோகுரோட்டூபாஸ் (1மிலி) கலவை கொண்டு பூச வேண்டும்.

மொட்டு அழுகல் நோய்: பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கி விட்டு, கார்பென்டசிம் (அ) திரம் 0.1 சதவீதம் கொண்டு நனைக்க வேண்டும்.

அடித்தண்டு அழுகல் நோய்: பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழிக்கவும். ஒரு வருடத்திற்கு 5 கிலோ/ மரம் வேப்பம் பிண்ணாக்கு இடவும். வருடத்திற்கு மரம் ஒன்றிற்க்கு 100 மி.லி. தண்ணீரில் 10 மி.லி. காலிசின் (அ) 10 கிராம் ஆரியோ பஞ்சின் வேர்மூலம் அளிக்கவும்.

அறுவடை: நட்ட மூன்றரை முதல் நான்கு வருடங்களில் முதல் அறுவடை செய்யலாம். உழி கொண்டு பழுத்த பழங்களை உடைய குலைகளை அறுவடை செய்யவும். 10 வருடங்களுக்கு மேல் உள்ள மரங்களில் கொக்கி மூலம் அறுவடை செய்யலாம். ஒவ்வொரு அறுவடையும் 10-12 நாள் இடைவெளியில் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் 6-7 நாள் இடைவெளியில் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல் : ஒரு ஹெக்டருக்கு 25 - 30 டன்கள் பழ சீப்புகள்

எண்ணைய் பனை அறுவடை
எண்ணைய் பனை கொத்து பழங்கள்
விதைகள் வெறும் பழக்கொத்து
 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024