தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வகைப்பாடு பனைக் குடும்பத்தில் 200 பேரினங்களும் 4000 சிற்றினங்களும் காணப்படுகின்றன. பொதுவாக மரங்களாக இருப்பினும் புதர் செடிகளும் காணப்படுகின்றன. பனையின் முன்னோடியாக ஆப்பிரிக்காவில் காணப்படும் பொ.எதியோபம் என்னும் சிற்றினம் கருதப்படுகிறது.
பனைக் குடும்பத்தில் (Arecaceae) பல்வேறு உட்பிரிவுகள் காணப்பட்டாலும் பொராசஸ் வகை பனைகள் குறைந்த எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்ட தனித்த பேரினமாகக் காணப்படுகின்றன. பொராசஸ் பேரினத்தில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் புதுகினியாவைத் தாயகமாகக் கொண்ட எட்டு சிற்றினங்கள் காணப்படுகின்றன. பொராசஸ் சிற்றினங்களும் தாயகமும்
பொராசஸ் சிற்றினங்களும் காணப்படும் பகுதிகளும் (பெக்காரி, 1913)
பொராசஸ் பேரினத்தில் ஏழு சிற்றினங்கள் காணப்பட்டாலும் பொராசஸ் பிளாபெல்லிபெர் லி, பொ.எதியோபம், பொ.சுண்டைக்கா பெக் ஆகிய மூன்று சிற்றினங்களே தற்பொழுது காணப்படுவதாகவும் இவை மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு இந்தோனேசியா வரையுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவியிருப்பதாகவும் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு சாவா வரை காணப்படும் பொராசஸ் பிளாபெல்லிபெர் வகை இதர பகுதிகளில் காணப்படும் பனை வகைகளில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது. இங்கு காணப்படும் பனைகளின் ஓலையோரங்கள் செதில்களற்றதாகவும் ஆண் பாளைகள் குறைவான கிளைகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. வெப்ப மண்டல ஆப்பிரிக்காவில் பொராசஸ் எதியோபம் என்னும் விசிறி பனை பரவலாகக் காணப்படுகிறது. இது பொராசஸ் பிளாபெல்லி பெர் சிற்றினத்தைவிட வலுவான தண்டு மற்றும் ஓலைகளைக் கொண்டதாகும். ஆண், பெண் பனைகள் தனித்தனியே காணப்பட்டாலும் விசிறி வடிவ ஓலைகளுடன் அழகிய வடிவத்தை அளிக்கும். பனையின் உயரம் 25-30 மீட்டர் ஆகவும் தடிமன் ஒரு மீட்டராகவும் இருக்கும். இளம் பனைகளில் முதிர்ந்த ஓலைகள் சுற்றிக் காணப்படும். முதிர்ந்த மரங்களின் தண்டுப் பகுதி மிருதுவாகக் காணப்படும். தண்டு தடிமனாதல் 30 ஆண்டுகள் வரை நிகழும் எனவும் மூன்றாவது தடிமனாதல் 120 ஆண்டுகளில் நிகழும் எனவும் அறிவியலார் கூறுகின்றனர். ஆசிய பனைவகைகள் மூன்று விதைகளுடனும் ஆப்பிரிக்கா பனை வகைகள் வேறுபட்ட எண்ணிக்கை கொண்ட விதைகளுடனும் ஆப்பிரிக்க பனை வகைகள் வேறுபட்ட எண்ணிக்கை கொண்ட விதைகளுடனும் காணப்படும். பொராசஸ் பிளாபெல்லிபெர் வகை பனையின் தண்டுப் பகுதி நிமிர்ந்தும் பொராசஸ் எதியோபம் வகை பனையின் தண்டுப் பகுதி வயதாகும் பொழுது நீட்சியடைந்தும் காணப்படும்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||