தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: இரப்பர் |
|||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் சந்தை நிலவரம் |
||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் டிஜிபி 1, பிபி 86, பிடி 5,10, பி.ஆர் 17, ஜிடி 1 இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள ஆஆஐஎம் 5, 105,141, 430, 422, 50, 52, 118, 176, 208, 300, 429, 600, பிபி 28 / 59, பிபி 217, 235, 703, 5, 260, பி.சி.கே –- 1, மண் ரப்பர் சாகுபடிக்கு வளமான ஆழமான இருபொறை மண்வகைகள் சிறந்ததாகும். மேலும் கார அமிலத்தன்மை 4.5 முதல் 6.0 வரை இருத்தல்வேண்டும். குறிப்பாக மண்ணில் மணிச்சத்துக் குறைவாக இருத்தல் இதன் வளர்ச்சி மற்றும் மகசூலை ஏதுவாக உயர்த்துகின்றது. தட்பவெப்பநிலை சிறந்த மகசூலுக்கு மிதமான தட்பவெப்பநிலை சிறந்ததாகம். சாகுபடிக்கு வருடமழை 2000-4500 மிமீ இருத்தல்வேண்டும். வெப்பநிலை 25-34 டிகிரி செல்சியஸ் 80 சதவீதம் ஈரப்பதம் கொண்டிருக்கவேண்டும். காற்று வீசும் பகுதிகளை தேர்ந்தெடுக்கக்கூடாது. விதை மற்றும் நடவு மெட்டுக்கட்டுதல் முறை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட செடிகளை நடவிற்கு பயன்படுத்தவேண்டும். சுத்தம் செய்யப்பட்ட நடவிற்கு பயன்படுத்தவேண்டும். சுத்தம் செய்யப்பட்ட வனப்பகுதியில் 3 x 2 மீட்டர் (அ) 5 x 5 மீட்டர் இடைவெளியில் 1 x 1 x 1 மீட்டர் அளவில் குழிகள் எடுக்கவேண்டும். பின் மேல் மண்ணுட்ன மக்கு உரமிட்டு நடவு செய்யவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் ரப்பர் மரத்தில் பால் எடுக்குமுன்னர்:
நடவு செய்த 5வது வருடம் முதல் மேற்கூறிய கலவையினை 400 கிராம் / எக்டர் என்ற அளவில் ஏப்ரல் / மே மற்றும் செப்டம்பர் / அக்டோபர் மாதத்தில் இடவேண்டும். இரப்பர் பால் எடுக்கும் மரங்களுக்கு வருடத்திற்கு இரண்டுமுறை 12:6:6 தழை, மணி, சாம்பல் சத்து தரும் கலவையினை 400 கிலோ / எக்டர் என்ற அளவில் இடவேண்டும். மெக்னீசியம் பற்றாக்குறை இருக்கும் தருணத்தில் 100 கிலோ கலவைக்கு 10 கிலோ மெக்னீசியம் சல்பேட் இடவேண்டும். பின்நேர்த்தி மூடுபயிர்களான பெரூரியா, கலப்பகோனியம், சென்ரோசோமா மற்றும் பெல்மோடியம் போன்றவற்றை வளர்த்து மற்றும் டெஸ்மோடியம் போனறவற்ற வளர்த்து பின் மண்ணோடு சேர்த்து உழுதல்வேண்டும். இரப்பர் தோட்டங்களை களையின்றி பாதுகாக்கவேண்டும். பால் வடித்தல் நடவு செய்த 7வது வருடத்திலிருந்து ரப்பர் மரம் பால் எடுக்க எனந்த தருணமாகும். மேலும் தரைமட்டத்திலிருந்து 50 செ.மீ உயரத்தில் தண்டின் சுற்றளவு 5 செ.மீ இருக்கவேண்டும். மொட்டு கட்டிய செடிகளில் மொட்டுக்கட்டிய இடத்திலிருந்து 125 செ.மீ உயரத்தில் தண்டின் சுற்றளவு 50 செ.மீ ஆக இருக்கவேண்டும். எத்ரல் ஊக்கி நேர்த்தி செய்தல் எத்ரல் ஊக்கியனைப் பயன்பாட்டின் மூலம் இரப்பர் மரத்தில் அதிக அளவு பால் பயிர் பாதுகாப்பு
இலை உதிரல் தென்மேற்கு பருவமழைக்கு முன்பு முன் எச்சரிக்கையாக 1 சதவீதம் போர்டோக்கலவையினை ஒரு எக்டருக்க 4000 - 5000 என்ற அளவில் விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும். காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தினை ஒட்டும் திரவத்துடன் கலந்த குறைந்த அளவு விசைத் தெளிப்பான் கொண்டு அடித்தண்டுப் பகுதி மற்றும் மேற்பரப்பில் தெளிக்கவேண்டும். சாம்பல் நோய் இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 11 - 14 கிலோ நனையும் கந்தகம் (எண் 325 சல்லடையில் சலிக்கப்பட்ட) பதினைந்து நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும். மேலும் 1 கிலோ மருந்தை 4000 லிட்டர் தண்ணீர் கலந்து நாற்றாங்கால் மற்றும் இளவயது செடிகளுக்கு தெளிக்கவேண்டும். இலைப்புள்ளி 1 சதவீதம் போர்டோக்கலவை (அ) 0.2 சதவீதம் மேங்கோசெப் (அ) காப்பர்காக்கிகுளோரைடு 0.2 சதவீதம் தெளித்துக் கட்டுப்படுத்தவேண்டும். மகசூல் நடவு செய்த ஐந்தாம் வருடம் முதல் இரப்பர் பால் வடிதல் அதிகமாகும். சிறந்த மகசூல் நடவு செய்த 14வது வருடத்தில் கிடைக்கும். தென் இந்தியாவில் ஒரு எக்டரிலிருந்து (375 கிலோ மகசூலும், மொட்டு கட்டிய மரங்களிலிருந்து விதை மூலம் நடவு செய்த மரங்களிலிருந்து 800-1000 கிலோ மகசூல் கிடைக்கும்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||
மேலோட்டம் |
|||||||||||||||||||||||||||||||||||||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||
தேசிய இணையதளங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||||||||||||||||||||||||||||||||||||
பழப்பயிர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||