Horticulture
||| | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தேயிலை
 

தேயிலை (கேமளியா சைனன்சிஸ் )
கேமிலியேசியே

தமிழ்நாடு தேயிலை கழகம்

தேயிலை வாரியம்

உலக - தேயிலை உற்பத்தி வரைபடம்                        இந்தியா - தேயிலை உற்பத்தி வரைபடம்

இரகங்கள்

பாண்டியன், சுந்தரம், கோல்கொண்டா, ஜெயராம், எவர்கிரீன் அத்ரே, ப்ரூக் லேண்ட், பிஎஸ்எஸ் – 1,2,3,4,5

தேயிலை செடி தேயிலை பூ

சிறந்தமுறையில்  தேயிலை பயிரிடுதல்
வ.எண் சிறந்த முறைகள் குத்துச் செடி உருவாக்கம்
1. காற்று தாங்கும் திறன் UPASI-2 UPASI-10 UPASI-TRF India
2. வறட்சி தாங்கும் திறன் UPASI-9 UPASI-TRF India
3. பனி தாங்கும் திறன் B-26 HPKV-TES India
4. சிறிய இலை CH-1 IHBT India
5. பெரிய இலை Betjan BETJAN T.E, India
6. கருகலுக்கு தாங்கும் திறன் TRI-2043, TRI, Sri Lanka
7. அதிக சுனை தன்மை வாய்ந்த TRI-2043 TRI, Sri Lanka
8. அதிக அந்தோசயனின் நிறமிகள் TRI-2025 TRI Sri Lanka
9. அதிக அமில மற்றும் காரம் தாங்கும் திறன் TN-14-3 TRF, Kenya
10. குறைவான நொதிப்பு திறன் 12/2 TRF, Kenya
11. சிறு பூச்சிகளுக்கு எதிரான 7/9 TRF, Kenya
12. செதில் பூச்சி சகிப்புத்தன்மை TN-14-3 TRF, Kenya
13. அதிக பாலிபினால் நொதி (53.7%) Luxi white tea TRI, China
14. அதிக அமினோ அமிலம் (6.5%) Anji white tea TRI, China
15. குறைந்த காஃபின் (0.14%) Guangdong tea TRI, China
16. அதிக காஃபின் (6.96%) Wild tea at Yunnan TRI, China
17. அதிக நீர் சகிப்புத்தன்மை TV-9 TES, India

மேம்படுத்தப்பட்ட  குத்துச்செடிகள்

வ.எண்

குத்துச் செடி

முக்கிய பண்புகள்

1.

UPASI 1 (Ever green)

கடினமான, தரம் – சராசரிக்கும் மேல்

2.

UPASI 2 (Jayaram)

கடினமானது, தரம் – சராசரிக்கும் மேல், வறட்சி மற்றும் காற்றுக்கு தாங்கும் திறன்

3.

UPASI 3 (Sundaram)

இயற்கை தரம் மும்மடங்கு அதிக மகசூல் தரும் குத்துச்செடி

4.

UPASI 6 (Brooklands

மத்திய மற்றும் உயரமான இடங்களுக்கு ஏற்றது

5.

UPASI 8 (Golconda)

அனைத்து உயரமான இடங்களுக்கும் ஏற்றது, அதிக மகசூல்

6.

UPASI 9 (Arthrey)

அதிக வெப்பம் மற்றும் வறட்சி, அதிக காரத்தன்மை தாங்கும் திறன், அதிக மகசூல்

7.

UPASI 10 (Pandian)

கடினமானது, தரம் – சராசரிக்கும் மேல், வறட்சி மற்றும் காற்றுக்கு தாங்கும் திறன்

8.

UPASI 14 (Singara)

உயரமான மற்றும் அதிகமகசூலுக்கு ஏற்றது.

9.

UPASI 15 (Spring field)

ஆண்டு முழுவதும் நீர் வளம்

10.

UPASI 17 (Swarna)

மத்திய மற்றும் அதிக உயரமான இடங்களுக்கு ஏற்றது

11.

UPASI 24

கடினமான

12.

UPASI 25

அதிக மகசூல்

13.

UPASI 16

அதிக மகசூல்

14.

UPASI 27

வறட்சி தாங்கும் திறன்

15.

UPASI 28 (UPASI 10 * TRI2025)

நல்ல திறன் மற்றும் தரம்

 

மண் மற்றும் தட்பவெப்பநிலை

தேயிலை சாகுபடிக்கு சிறந்த அங்கக் சத்துக்கள் நிறைந்த நல்ல வடிகால் வசதியுடைய மண் சாகுபடிக்கு சிறந்ததாகும். மண்ணின் கார அமிலத் தன்மை 4.5-5.4 இருத்தல்வேண்டும். இப்பயிரை கடல் மட்டத்திலிருந்து 1000-2500 மீட்டர் வரை சாகுபடி செய்யலாம்.20 – 27o செ. தேயிலை பயிரிட உகந்த வெப்பநிலையாகும்.

நாற்றாங்கால்

வடிகால் வசதியுடைய பொறை மண் வகைகள் நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். மண்ணின் கார அமிலத் தன்மை 4.5 முதல் 4.8 வரை இருக்கவேண்டும். நாற்று உற்பத்திக்கு தேவையான மண், மணல் போன்ற பொருட்களை நூற்புழு மற்றும் கார அமிலத்  தன்மையினை சோதனை செய்தபின் பயன்படுத்தவேண்டும்.

நாற்றங்கால்

பந்தல் மூலம் செயற்கை நிழல் அளித்தல் பாலித்தீன் கூடாரத்தில் தேயிலை நாற்றுகள்

முதல் நிலை மண்நேர்த்தி

அலுமினியம் சல்பேட் என்னும் வேதிப் பொருள் பயன்படுத்தி கார – அமில தன்மையினைக் குறைக்கச் செய்யலாம். முதலில் 8 நெ.மீ உயரமுள்ள பாத்திகளை 1 மீட்டர் அகலம், தேவையான நீளத்திற்கு உருவாக்கவேண்டும். பின்பு 2 சதவீதம் அலுமினியம் சல்பேட் கரைசலை 2.5 சதுர மீட்டருக்கு 10 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். மேலும் 8 நெ.மீ மண் அடுக்கினை இட்டு மேற்கூறிய வேதிப்பொருளைத் தெளிக்கவேண்டும். மண் பகுதி கார - அமில தன்மையினை சோதனை செய்யவேண்டும்.
பாலித்தீன் பைகள்

150 (அ) 200 காஸ் மொத்தம் / அடர்த்தியுள்ள பாலித்தீன் 10 செ.மீ அகலம், 30-45செ.மீ நீளமுள்ள பாலித்தீன் பைகளை தேர்வு  செய்யவேண்டும். பின் வடிகால் வசதிக்கு கீழ்ப்பாகத்தில் துளைகள் இடவேண்டும். முக்கால் பாகத்திற்கு மணல் மற்றும் மண் கலவையினை 1:3 விகிதத்தல் நிரப்பவேண்டும். பின்பு மீதமுள்ள பகுதியில் 1:1 மணல் மற்றும் மணல் கலவையினை நிரப்பவேண்டும். நிழல் பகுதியில் பைகளை வரிசையில் அடுக்கி வைக்கவேண்டும்.

தாய் செடிகள் தேர்வு மற்றும் நேர்த்தி

நோயற்ற வீரிய வளர்ச்சியுடைய நல்ல மகசூல் தரக்கூடிய தாய்ச் செடிகளை தேர்வு செய்யவேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட செடிகளுக்கு 5 ஆண்டுகள் வரை 40 கிராம் தேயிலை கலவை, 60:90 தழை, சாம்பல் சத்துக் கொண்ட கலவையினை இடுதல்வேண்டும். மேலும் நாற்று உற்பத்தி மூன்றாக 0.5 சதவிகிதம்  அலுமினியம் சல்பேட் + 1 சதவீதம் மெக்னீசியம் மூன்று வாரத்திற்கு சல்பேட் கலவையும், இரண்டு வாரங்களுக்கு முன்பாக   துத்தநாக சல்பேட் கடைசி ஒரு வாரத்திற்கு முன்பாக 1 சதவிகிதம் யூரியா தெளித்து நேர்த்தி செய்யவேண்டும்.

தண்டுக் குச்சிகள் தயார் செய்தல் மற்றும் நாற்றாங்களில் நடவு

தண்டுக் குச்சிகளை ஏப்ரல் - மே, ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் எடுக்கவேண்டும். ஒரு இலை மற்றும் கணுக்களுடைய குச்சிகளை வெட்டி கீழ்ப்பகுதியில் சாய்வான வெட்டு கொடுக்கவேண்டும். பின்பு மண்கலவை நிரப்பிய பாலித்தீன் பைகளுக்கு நீரூற்றி நடவு செய்யவேண்டும். தண்டுப் பகுதியினை மண்ணுடன் இறுக்கமாக செய்வது மூலம் காற்றோட்ட / வெற்றிடத்தினை நீக்க முடிகின்றது. குச்சிகள் 10-12 வாரங்களில் வேர்பிடிக்கத் தொடங்கும்.

நடவு செய்த 90வது நாளில் நிழல் வலைகளை நீக்கவேண்டும்.

நாற்றாங்காலில் ஊட்டச்சத்து மேலாண்மை

வளர்ச்சியின் தன்மைக்கேற்ப நாற்றுக்களைப் பிரித்து தாங்கு குச்சிகள் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் 30 கிராம் நாற்றாங்காலுக்குரிய கலவையினை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து 4 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நாற்றுகளுக்கு இடவேண்டும்.

உரக்கலவை

அமோனியம் பாஸ்பேட்                -           35 பாகம்
பொட்டாசியம் சல்பேட்                -           15 பாகம்
மெக்னீசியம்                                -           15 பாகம்
முரைட் அப் பொட்டாஷ்               -           12 பாகம்
துத்தநாக சல்பேட்                        -           3 பாகம்
மொத்தம்                                     -           80 பாகம்

நாற்றுக்களை கடினப்படுத்துதல்

4-6 மாத வயதுடைய நாற்றுக்களை 4-6 வாரங்களுக்கு சூரிய வெளிச்சமுள்ள இடத்திற்கு வெளிக்கொணர்ந்து கடினப்படுத்தவேண்டும். ஆரம்ப காலங்களில் குறைவான நேரத்தில் கடினப்படுத்தி பின் அதிகப்படுத்தவேண்டும்.

நடவு முறை

ஒற்றை வரிசை முறை / அடுக்கு முறை

இந்த முறையில் 1.20 x 0.75 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யவேண்டும். இதன் மூலம் ஒரு எக்டருக்கு 10,800 செடிகளை நடவு செய்யலாம்.

இரு வரிசை முறை / இரட்டை அடுக்கு முறை

இந்த முறையில் 1.35 x 0.75 x 0.75 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யவேண்டும். இதன் மூலம் ஒரு எக்டருக்கு 13,200 வரை நடவு செய்யலாம்.

பருவம்

மே - ஜுன் , செப்டம்பர் - அக்டோபர்

நடவு

நடவின் போது வேர்ப்பாகம் உடையாமல் நடவு செய்யவேண்டும். இதனைச்செய்ய பாலித்தீன் பைகளை நீள் வட்டத்தில் கிழித்து நடவு செய்யவேண்டும்.

விதையில்லாப் பெருக்கம்

 

நீர் நிர்வாகம்

கோடைக்காலங்களில் இளவயதுடைய செடிகள் காயாத வண்ணம் நீர்ப்பாசனம் செய்து பாதுகாக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்

நடவு செய்த இரண்டாவதுமாதம் முதல் உரமிடுதல் வேண்டும். ஆண்டிற்கொருமுறை மணிச்சத்து தரும் ராக்பாஸ்பேட் (பாறை உப்பு) 80 -100 கிலோ / எக்டர் என்ற அளவில் இடவேண்டும். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கொருமுறை இடவேண்டும். மேலும் முதல் 3 ஆண்டுகளுக்கு தழை மற்றும் சாம்பல் சத்தினை 2:3 விகிதம் என்ற அளவிலும் அதன் பின்னர் 1:1 என்ற விகிதத்தில் இடவேண்டும்.

வருடம்

ஒரு வருடத்திற்கு ஒரு எக்டருக்கு தேவையான உர அளவு

பிரித்து இடும் அளவு

ஒரு செடிக்கு (கிராம் தேவையான)

 

தழைச்சத்து

மணிச்சத்து

 

அமோனியம்  சல்பேட்

யூரியா

முதல் வருடம்

180

270

5

13

27

இரண்டாம் வருடம்

240

360

6

23

15

மூன்றாம் வருடம்

300

450

6

29

18

நான்காம் வருடம் முதல்

300

300

6

33

19

பருவ மழை ஆரம்பித்த பின் உரமிடுதல்வேண்டும். மேற்கூறிய உரங்களை தண்டுப் பகுதிக்கருகாமையில் இடாமல் சற்று தள்ளி இடவேண்டும்.

பின் நேர்த்தி

நீண்ட காலம் வாழும் / பல்லாண்டு களைகளை கிளைபோசேட் 1.75 லிட்டர் + கயோலைன் 2 லிட்டர் + 2 கிலோ நனையும் பொருள் கலவையினை 450 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். மேலும் இரு இலைகளை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 500 மில்லி கிராமாக்சோன் களைக் கொல்லியனை 200 லிட்டர் கலந்து தெளிக்கவேண்டும்.

இள தேயிலை செடிகளை சீரமைத்தல்

  1. நடவு செய்த 3-5 மாதங்களில், நுனி தண்டினை 8-10 இலைப்பகுதிவிட்டு வெட்டிவிடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பக்கக்கிளைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
  2. மற்றொரு முறையில் வளர்ந்த செடிகளை 60 செ.மீ உயரத்தில் வெட்டி எடுக்கவேண்டும்.

கவாத்து செய்தல்

கவாத்து செய்வதன் மூலம் இலைப் பறிக்கும் மட்டம், காய்ந்த மற்றும் நோய் தாக்க்பபட்ட கிளை வாதுகளை வெட்டி எடுக்க முடியும்.
ஒரு வருடத்திற்கு கவாத்து செய்ய  =  தேயிலைத்  தோட்டத்தின் மொத்த பரப்பளவு
வேண்டிய பரப்பளவு                                                _________________________________
கவாத்து சுழற்சி (இரு கவாத்திற்குள்ள கால இடைவெளி)

கவாத்து இடைவெளி = (கடல் மட்டத்திலிருந்து தேயிலைத் தோட்டத்தின் உயரம்)

பொதுவாக கவாத்தினை ஏப்ரல் - மே (அ) ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் செய்யவெண்டும்.

கவாத்து உயரம்

கவாத்து                                          -           தரைமட்டத்தில் இருந்து வெட்டப்பட்ட  உயரம்

புனர அமைப்பு கவாத்து                  -           12க்கு கீழ்     
அடி கவாத்து                                   -           12 - 18
நடுத்தர கவாத்து                              -           18 - 24
மேல் கவாத்து                                  -           24 - 26
வீச்சு கவாத்து                                  -           26 மேல்

கவாத்து செய்யப்பட்ட செடி

 

நிழல் மரங்கள் பராமரித்தல்

கனமழைக்கு முன்னர் நிழல் தரும் மரங்களை தரைமட்டத்திலிருந்து சுமார் 8-10 மீட்டர் உயரத்தில் வெட்டவேண்டும்.

கவாத்து செய்யப்பட்ட செடி

 

கிளை வெட்டுதல்
பருவமழைக்கு முன்னர் நிழல் மரங்களின் பக்க கிளைகளில் உள்ள செங்குத்தான கிளைகளை வெட்ட வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

செதில் பூச்சியினைக் கட்டுப்படுத்த கார்பரில் 2 கிராம் / லிட்டர் (அ) குயினால்பாஸ் 2மில்லி / லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.

தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த குயினால்பாஸ் மருந்தினை துளையினுள் இட்டு ஈரக்களிமண் கொண்டு மூடவேண்டும்.

இலைப்பேன்
பின்வரும் பூச்சிக்கொல்லியை ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்


பூச்சிக்கொல்லி

அளவு

அசாடிராக்டின் 5 % வேப்பஞ்சாறு

5.0 மிலி/10 லி.

அசாடிராக்டின் 1.0 % EC (வேம்பு சார்ந்த)

2.0 மிலி/லி.

எதியான் 50%EC

5.0 மிலி/10 லி.

ப்ரொஃபெனோபாஸ் 50 % EC

2.0 மிலி/லி.

குயினால்பாஸ் 25 % EC

7.5 மிலி/10 லி

அசுவுணி
போசலோன் 35 % EC @ 2.0 மிலி/லிட்டர் தெளிக்கவும்.

சிவப்பு சிலந்தி, இளஞ்சிவப்பு சிலந்தி, கருஞ்சிவப்பு சிலந்தி


பூச்சிக்கொல்லி

அளவு

அசாடிராக்டின் 5 % வேப்பஞ்சாறு

5.0 மிலி/10 லி.

அசாடிராக்டின் 1.0 % EC (வேம்பு சார்ந்த)

2.0 மிலி/லி.

டைகோபால் 18.5 % SC

2.0 மிலி/லி.

எதியான் 50%EC

5.0 மிலி/10 லி.

ஃபென்சாகுயின் 10 % EC

1.6 மிலி/லி

ஃபென்பைராக்சிமேட் 5 % EC

1.2 மிலி/லி

ஃப்லுமைட் 20%SC/ ப்ளுஃபென்சைன் 20%SC

5.0 மிலி/10 லி

ஹெக்சிதையாசாக்ஸ் 5.45% EC

1.2 மிலி/லி

போசலோன் 35 % EC

1.0 மிலி/லி

ப்ரொஃபெனோபாஸ் 50 % EC

2.0 மிலி/லி.

ப்ரோபார்கைட் 57 % EC

2.0 மிலி/லி.

ஸ்பைரோமெசிஃபென் 22.9 % SC

1.0 மிலி/லி.

தேயிலைக் கொசு

  • தேயிலைக்கொசுவின் தாக்குதலின் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • தேயிலைக் கொசுவின் மாற்று விருந்தோம்பி மரங்களான வேம்பு, முந்திரி, கொய்யாவை அகற்றவும்.
  • பின்வரும் ஏதோ ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்.
  • இமிடாகுலோபிரிட் (0.6 மிலி/லி)
  • தையாமீதாக்சன் (0.6 கிராம் /லி)
  • ப்ரொஃபெனோபாஸ் (2 மிலி/லி).

நோய்கள்
கொப்புள் நோயினைக் கட்டுப்படுத்த  5 நாள் இடைவெளியில் ஒரு எக்டருக்கு கெக்சனசோல் 200 மில்லி + காப்பர் ஆக்சிகுளோரைடு 210 கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும். ஜுன் – செப்டம்பர் மாதம் வரை ஐந்து நாட்களுக்கொருமுறை 210 கிராம் காப்பர் ஆக்சிகுளோரைட் மற்றும் நிக்கல் குளோரைட் தெளிக்கவேண்டும். இதே கரைசலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 11 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும். (அ)( பருவ மழையின் போது ஒரு எக்டருக்கு 80 மில்லி காப்பர் ஆக்ஸிகுளோரைடு 85 கிராம் பூஞ்சாணக் கலவையினை 7 நாட்களுக்கொரு முறை தெளிக்கவேண்டும்.

கொப்புள நோய்

 

அறுவடை

நடவு செய்த மூன்றாண்டுகளில் தேயிலையினை அறுவடை செய்யலாம். அறுவடையின் போது வளரும் மொட்டுடன் இரண்டு இலையுடன் சேர்த்து அறுவடை செய்யவேண்டும். மார்ச் - மே மாதங்களில் வாரம் ஒருமுறையும் மீதமுள்ள மாதங்களில் 10-14 நாட்களுக்கொருமுறை அறுவடை செய்யலாம்.

வளரும் மொட்டு

தேயிலை அறுவடை புதிதாக பரிக்கப்பட்ட தேயிலை இலைகள்

தேயிலை பரிக்கும் தரநிலை

மகசூல்

ஒரு எக்டரிலிருந்து 10 டன் தேயிலை அறுவடை செய்யலாம்.

தேயிலை வகைகள்

கருப்பு தேநீர் பச்சை தேநீர்     
வெள்ளை தேநீர் கருநிறச் சீனத் தேநீர்
தேயிலை தரங்கள்

தேயிலை பதப்படுத்தும் முறைகள்

சந்தை தகவல்கள்


பயிரிடும் மாவட்டங்கள்

நீலகிரீ, கோயமுத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள்

முக்கிய சந்தைகள்

கோயமுத்தூர், நீலகிரீ

தரம்

தேயிலை அளவு : முழுதாக, பெரிய இலை – உயர் தரம்
உற்பத்தி முறை : CTC முறை (கசக்குதல், கிழித்தல் மற்றும் சுருட்டுதல்) மற்றும் வழக்கமான முறை


தேயிலை விதை

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024