சொட்டுநீர் பாசனம்
- இத்திட்டத்தினைப் பற்றி
- 2008 – 09 ல் அனுமதிக்கப்பட்ட சொட்டுநீர்ப்பாசன நிறுவனங்கள்
- விண்ணப்ப படிவங்கள்
- பரிசோதனை ஆய்வுக் கூடங்கள்
1. இத்திட்டத்தினைப் பற்றி:
இன்றைய நாளில் நீரின் தேவை மிக மிக அதிகமாக ஒவ்வொரு துறைகளுக்கும் தேவைப்படுகின்றது. நீரின் ஆதாரம் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக வேளாண்மைத் துறைக்கு மிகுந்த அளவு நீர் உபயோகப்படுத்தப்படுகிறது. நீர் ஆதாயத்தை பாதுகாக்கவும், வளப்படுத்தவும் நீர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மரபு வழியிலான முறையில் நீர்பாசனம் மிகுந்த அளவில் வீணாக்கப்பட்டது.
இதை மாற்றியமைக்க நவீன நீர்பாசன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம் முதலியனவாகும். இந்த முறையில் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் ஆதாயங்கள் சிறந்த முறையில் வீணாக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் எந்தெந்த விவசாயிகள் எல்லாம் தங்களின் நிலங்களில் சொட்டு நீர்ப்பாசனம் அல்லது தெளிப்பு நீர்ப்பாசனம் கருவிகளை பொருத்தியிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் 50 சதவீதம் பணம் மானியமாக வழங்கப்படுகிறது. வேளாண்மைத் துறை தென்னை மற்றும் கரும்பு, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ஒரு முன்னோடி நிறுவனமாக செயல்படுகிறது. வேளாண் பொறியியல் துறை பழப்பயிர்களுக்கும், தோட்டக்கலைத் துறை, காய்கறிகள், மலர்களுக்கும், வாசனைப் பயிர்கள், வாழை மற்றும் மூலிகைப் பயிர்களுக்கும் பொறுப்புள்ள துறைகளாக செயல்படுகின்றன.
ஒரு விவசாயிக்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் பரப்பளவிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் விவசாயின் விருப்பத்திற்கு ஏற்ப பிரதான பயிருக்கோ, அல்லது ஊடுபயிருக்கோ மானியம் வழங்கப்படுகின்றது. கடந்த 2007 – 08 ல் நுண்ணீர் பாசன திட்டங்களுக்காக ரூபாய் 6811 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 12621 ஹெக்டேர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட்டது. மேலும் 2008 – 09 ல் தோட்டக்கலை சாராத பயிர்கள் 38,000 ஹெக்டேர் பரப்பளவில் ரூபாய் 9000 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
2. 2008 – 09 ல் அனுமதிக்கப்பட்ட சொட்டு நீர்ப்பாசன நிறுவனங்கள்:
- ஏ.ஜி.எஸ்
- இ.எல்.ஜி.ஐ அல்ட்ரா
- ஃபுளோ டெக் பவர்
- ஜெயின் இர்ரிகேசன்
- மெகா இர்ரிகேசன்
- நாகர்ஜீனா பெர்ட்டிலைசர்
- நெட்டாபார்ம் இர்ரிகேசன்
- பிளாஸ்ட்ரோ பிளாசன்
- பிரிமியர் இர்ரிகேசன்
- ரூட்ஸ் இர்ரிகேசன்
- ரங்டா இர்ரிகேசன்
- சுஜாய் இர்ரிகேசன்
- விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவனங்கள்
- விண்ணப்பம்
- தேர்ந்தெடுத்த நுண்ணிய நீர் பாசன நிறுவனம் விவசாயிடமிருந்து கடிதம்
- சிட்டா அசல்
- அடங்கல் அசல்
- நில வரைபடம்
- கூட்டுப் பாசன முறையாக இருந்தால் கூட்டாளியின் ஒப்புதல் கடிதம்
- கூட்டுப்பட்டாவாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து ஒப்புதல் கடிதம்
- மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை
- மூன்று வருடங்களுக்கு நுண்ணிய நீர் பாசன கருவிகளை விற்கவோ வாடகைக்கு தரவோ கூடாது என விவசாயியிடமிருந்து ஒப்புதல் அறிக்கை
- விவசாயி / பயனாளி குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு திட்டங்களின் கீழ் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் எதுவும் பெறவில்லை என்பதற்கான உத்திரவாத சான்று
- நுண்ணிய நீர் பாசன முறையை நிறுவிய பிறகு மூன்று ஆண்டுகளில் எந்த ஒரு அதிகாரியும் பார்வையிட வரலாம் என ஒப்புதல் அறிக்கை
- விவசாயியின் புகைப்படம்
- நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான கேள்விகள்
- நுண்ணிய நீர்பாசனம் நிறுவனத்தின் பென்ச்மார்க் கணக்கெடுப்பு
- மதிப்பீடு / மேற்கோள்
- நுண்ணிய நீர்ப்பாசன முறையின் முழு வரைபடம்
- மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள்:
- ஆய்வுக்கூடத் துறைகள்
வ.எண் |
மாவட்டம் |
ஆய்வுக்கூடம் |
முகவரி |
1. |
கோயமுத்தூர் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
உர சோதனை ஆய்வு கூடம் |
லாலி ரோடு,
கோயமுத்தூர் – 641013 |
2. |
கடலூர் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
உயிர் உரங்கள் தயாரிப்பு கூடங்கள் |
மஞ்சக்குப்பம், கடலூர்
65 நெல்லிக்குப்பம் மெயின் ரோடு
கடலூர்
செம்மண்டலம், கடலூர் - 607001 |
3. |
தருமபுரி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம் |
வட்டாச்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி – 636701 |
4. |
திண்டுக்கல் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
எண்.3 கூட்டுறவு காலனி, திண்டுக்கல் |
5. |
ஈரோடு |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
14, பூங்குன்றனார் தெரு, கருங்கல் பாளையம்,
ஈரோடு – 638003
I கிராஸ், கருங்கல் பாளையம் |
6. |
காஞ்சிபுரம் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் |
7. |
கன்னியாகுமரி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
கலெக்டர் அலுவலகம் எதிரில்,
நாகர் கோவில் – 629001 |
8. |
மதுரை |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
பசுமலை, மதுரை – 625004
திருநகர், மதுரை – 625006 |
9. |
நீலுகிரி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம் |
விஜயநகரம் பார்ம், உதகமண்டலம் - 643001 |
10. |
புதுக்கோட்டை |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
குடுமியான்மலை, வயலோகம் - 622104 |
11. |
ராமநாதபுரம் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
மதுரை ரோடு, பரமக்குடி – 623707
63, மதுரை ரோடு
ராமநாதபுரம் - 623501 |
12. |
சேலம் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
வட்டாட்சியர் அலுவலக வளாகம், சேலம் - 636001 |
13. |
சிவகங்கை |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
பஞ்சாயத்து அலுவலகம் அருகில், சிவகங்கை |
14. |
தேனி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
36, ஸ்ரீ ராம் நகர், தேனி – 620020 |
15. |
திருச்சி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
உயிர் உரங்கள் தயாரிப்பு நிறுவனம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
காசமலை, திருச்சி – 620020
அன்பழகன் சாலை, த.ந.நகர், திருச்சி – 620021 |
16. |
தஞ்சாவூர் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
ஆடுதுறை – 612101 |
17. |
திருநெல்வேலி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
7 சங்கர் காலனி, திருநெல்வேலி – 627002 |
18. |
வேலூர் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் |
வேளாண் ஆராய்ச்சி நிலையம் வளாகம், கோவில்பட்டி - 627701 |
19. |
விருதுநகர் |
நடமாடும் மண் ஆராய்ச்சி ஆய்வு கூடம் |
வடக்கு முத்துசாமிபுரம் தெரு,
திருநகரம்,
அருப்பு கோட்டை – 626101 |
விலை நிலவரம்:
- மண் மாதிரி பரிசோதனை விவசாயி:
நுண்ணுரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு - ரூ. 5/மாதிரி
நுண்ணிய நீர் பாசன நிறுவனம
நுண்ணுரம் ஆய்வு - ரூ. 50/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு - ரூ. 50/மாதிரி
- நீர் மாதிரி ஆய்வு - ரூ. 10/மாதிரி
- த.வே.ப.க
- மண் மாதிரி ஆய்வு
அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 100 /மாதிரி
அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து நுண்ணுரம் பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 250 /மாதிரி
- நீர் மாதிரி ஆய்வு
அமில, காரத்தன்மை, தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 50 /மாதிரி
விரிவான ஆய்வு மற்றும் பரிந்துரை - ரூ. 250 /மாதிரி |