நபார்டு
தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டம்:
நபார்டு வங்கியானது வேளாண்மையை வளர்ச்சிப்படுத்த / வளப்படுத்த தொடங்கப்பட்ட வங்கியாகும். சிறுதொழில், குடிசைத் தொழில் கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கிராமப்புற தொழில்களுக்காக தொடங்கப்படட வங்கியாகும். இது மேலும் கிராமங்களில் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த மற்றும் தொடர்ச்சியான, வளமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
கிராமப்புறங்களில் நபார்டு வங்கியின் நோக்கங்கள்:
- கிராமங்களின் கடன் திட்டங்களும், மறுகடன் திட்டங்களும்
- வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லுதல் மற்றும்
- வாடிக்கையாளர் வங்கிகளை மதிப்பிடுதல், கண்காணித்தல் மேற்பார்வையிடுதல்
இதர நோக்கங்கள்:
- கடன் தரும் வங்கிகளை ஒருங்கிணைத்தல்
- அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் விரிவான உதவிகள் கிராமப்புற வளர்ச்சிக்கு கிடைத்திட உதவுகிறது
- வங்கிகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் கிராம மேம்பாட்டினைப் பற்றி பயிற்சி அளித்தல்
- தமிழக அரசு அறிமுகப்படுத்தும் கொள்கைகளை சரியான முறையில் வேளாண்மைத்துறைக்கும், கிராம வளர்ச்சிக்கும் கிடைத்திட உதவுகிறது
- கூட்டுறவு வங்கிகளுக்காக சீரான முறையில் செயல்படுவது
மேலும் விவரங்களுக்கு http://www.nabard.org/ |