தோட்டக்கலை :: திட்டங்கள் :: தேசிய தோட்டக்கலை இயக்கம் |
|
தேசிய தோட்டக்கலை இயக்கம்
தமிழ்நாடு சமூக பதிவு அறிக்கை - 1975 ன் படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தலைவர் நிர்வாக இயக்குனர் மற்றும் ஆறு அலுவலக உறுப்பினர்களை தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணிய நீர் பாசனம் மற்றும் தேசிய மூங்கில் இயக்கம் ஆகியவற்றின் செயல் பாட்டிற்காக டி. என். ஹெச், ஓ. டீ. ஏ வின் சிறப்பு வாகனம் பயன்படுத்தப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கமானது மத்திய அரசால் தோட்டக்கலைத் துறையை நாடு முழுவதும் வளப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டமானது முழுவதும் அரசால் ஏற்று நடத்தப்படுகின்றது. தற்போது இந்த திட்டமானது இருபது மாவட்டங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அவைகள் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கூடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, பெரம்பலூர், வேலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கன்னியாகுமாரி, மற்றும் தஞ்சாவூர். மேலும் இத்திட்டத்தின் மூலம் மா, நெல்லி, வாழை, முந்திரி, கோகோ, மிளகாய், மஞ்சள், வாசனைப் பயிர்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றின் உற்பத்தி பரவலாக அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டம் 2007 – 08 ல் சுமார் 7576 இலட்சம் ரூபாயில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தினுடைய மதிப்பு 2008 – 09 ரூ. 1200 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு http://nhm.nic.in/
|
|