சர்வ சுகந்தி (பிரின்ஜி இலை)
(பைமென்டா டையகா)
மிர்டேசியே
|
சர்வ சுகந்தி |
மண் மற்றும் வெப்பநிலை
- அங்கக வளம் மிக்க செம்பொறை மண் மற்றும் இருபொறை மண் இப்பயிர் சாகுபடிக்கு உகந்தது.
- கடல் மட்ட உயரம் 1000 மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.
- வருடாந்திர மழையளவு : 100 - 200 செ.மீ
- தகுந்த வெப்பநிலை - 270 செ
பயிர்ப் பெருக்கம்
விதை
தொடர்ந்து காய்க்கக் கூடிய மற்றும் அதிக மகசூல் தரக் கூடிய மரங்களிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். பழங்களை ஓர் இரவு சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து சல்லடையில் தேய்த்து விதைகளை பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட விதையினை நிழலில் உலர்த்த வேண்டும். 1.2 மீட்டர் அகலமுள்ள நாற்றங்கால் படுக்கையில் விதைகளை விதைத்து வைக்கோல் அல்லது காய்ந்த இலைச் சருகுகள் கொண்டு மூட வேண்டும். விதைத்த 15 நாட்களில் முளைப்பு தென்படும்.
விதையில்லா பயிர்ப் பெருக்கம்
ஜனவரி மாதத்தில் விண்பதியம் (Air layering) மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யலாம்.
நடவு
25-30 செ.மீ உயரம் கொண்ட 9-10 மாத நாற்றுகளை வயலில் நடவு செய்யவும்.
இடைவெளி
6 x 6 மீட்டர் இப்பயிர் இருபாலின வகையை சார்ந்ததால் தோட்டத்தில் ஆண் மற்றும் பெண் மரம் 1:10 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
உரமிடுதல்
முதல் வருடம் – 10 கிலோ தொழு உரம் + 20 : 180 : 50 கிராம் NPK / மரம்
15 வயது மற்றும் அதற்கு மேல் – 50 கிலோ தொழு உரம் + 300:250:750 கிராம் NPK / மரம். இதனை இரண்டு பாகங்களாக அளிக்க வேண்டும்.
அறுவடை
விதையில்லா பயிர்ப் பெருக்கம் மூலம் நடவு செய்த மரங்கள் மூன்று வருடத்திலும், விதை மூலம் நடவு செய்த மரங்கள் 6 வருடத்திலும் பூக்க ஆரம்பிக்கும். மண் வழியாக மரம் ஒன்றிற்கு 1.25 கிராம் பேக்குளோபூட்ரசால் அளிப்பதால் பூக்கிளைகள், பூக்கள், காய் பிடிப்புத் தன்மை அதிகரித்து மகசூலையும் அதிகரிக்கிறது. நன்கு முதிர்ந்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.
|
|
சர்வ சுகந்தி இலை |
சர்வ சுகந்தி பழங்கள் |
மகசூல் : மரம் ஒன்றிற்கு வருடத்திற்கு 20-25 கிலோ உலர்ந்த பழங்கள் கிடைக்கும்.
|