தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: ஏலக்காய் |
|||||||||||||||||||||||||||||||
ஏலக்காய் (எலட்டேரியா கார்டமம்) இரகங்கள் : மலபார்: முடிகிரி 1, முடிகிரி 2, பிவி 1, ஐசிஆர்ஐ 1, ஐசிஆர்ஐ 3, டி கே டீ 4, ஐ ஐ எஸ் ஆர் ஸ்வர்ணா, ஐ ஐ எஸ் ஆர் விஜிதா, ஐ ஐ எஸ் ஆர் அவினாஷ்
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நிழலான பகுதிகளில், வடிகால் வசதியள்ள இரும்பொறை மண் உகந்தது. காற்றில் அதிக ஈரப்பதம் மிகுந்த மிதமான தட்பவெப்பநிலையில் இது நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 6-6.5க்குள் இருந்தால் அவசியம். அதிகமாக காற்று வீசும் பகுதிகளில் இதனைப் பயிரிட முடியாது. மலபார் வகைகளை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 முதல் 1600 மீட்டர் வரை உள்ள உயரத்தில் பயிரிடலாம். ஆண்டிற்கு சராசரியாக 1500 முதல் 2500 மில்லி மீட்டர் வரை மழை பொழியும் இடங்களில் இவ்வகை ஏலக்காயை் பயிரிட முடியும். ஆனால் மைசூர் வகைக்கு அதிக மழைப்பொழிவு தேவை. பருவம் : ஜூன் - டிசம்பர் இனப்பெருக்கம் : ஏலக்காய் விதை மூலமும், நிலத்தடி தண்டு கிழங்கு மூலமும் இனப்பெருக்கம் செய்யலாம். விதையும் விதைப்பும் நாற்றுகள் / ஒட்டுக்கன்றுகளை கொண்டு இனப்பெருக்கம் செய்யலாம். விதை பயிர்பெருக்கம்
இரண்டாம்நிலை நாற்றாங்கால் :
தாவரக் கன்று மூலம் பயிர்பெருக்கம் :
நடவு நிலத்தில் 60 செ.மீ நீள. அகல, ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் மேல் மண் மற்றும் இலை மட்கு போன்றவற்றை இட்டு நிரப்பி, குழிகளின் மத்தியில் நாற்றுக்களை நடவேண்டும். இடைவெளி : குழிகளின் இடைவெளி உயரமாக வளரும் செடிகளுக்கு 2.5x2.0 மீட்டராகவும், குட்டையாக வளரும் செடிகளுக்கு 2.0 x 1.5 மீட்டர் இருக்குமாறும் அமைத்துக் கொள்ளவேண்டும். நீர்ப்பாசனம் : ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை எக்டருக்கு 25 கிலோ மக்கிய கம்போஸ்ட், 75 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இருசம பகுதிகளாகப் பிரித்து ஜூன் - ஜூலை மாதங்களில் ஒரு முறையும், பின்பு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒரு முறையும் இடவேண்டும். களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி பின்செய்நேர்த்தி : பின்செய் நேர்த்தியாக தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். பழுத்த, காய்ந்த இலைகளையும், கிளைகளையும் மே - ஜூன் மாதங்களில் களைந்து அப்புறப்படுத்த வேண்டும். மழைக்குப் பின் செடிகளைச் சுற்றி மண் வெட்டியால் கொத்தி விடவேண்டும். நிழல் அளித்தல் :
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பூச்சிகள் : இலைப்பேன்:
கம்பளிப் புழு டைக்கோபால் 1 லிட்டருக்கு 2 மி.லி வீதம் தெளித்து இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். வேர்ப்புழுக்கள் : தாக்குதல் தென்படும் இடங்களில் லிண்டேன் மற்றும் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். நூற்புழு நோய்கள் மொசைக் அல்லது கட்டே நச்சுயிரி நோய் : இந்நோய் ஏலக்காயை தாக்கும் ஒரு முக்கியமான நோய் ஆகும். இதனால் அதிக அளவில் மகசூல் பாதிக்கப்படும். வாழை அசுவினி பூச்சி மூலம் இந்நோய் பரப்பப்படுகிறது. எனவே நோய் பரப்பும் பூச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். எக்டருக்கு 750 மில்லி பாஸ்போமிடான் அல்லது மீதைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் தெளித்து இப்பூச்சியை கட்டுப்படுத்தவேண்டும். குத்து அழுகல் நோய் : பாதிக்கப்பட்ட குத்து அழுகிவிடும். கட்டுப்பாடு : நாற்றாங்காலில் விதைகளை, விதைப்பதற்கு முன்பே 3 சதுர மீட்டர் நாற்றாங்காலுக்கு 1 லிட்டர் பார்மால்டிஹைடு மருந்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். விதைத்தவுடன் 1 சதவீத கலசை அல்லது 0.25 சதம் மேன்கோசெப் கரைசலை மண்ணில் ஊற்றவேண்டும்.
அறுவடை ஏலக்காய் நட்ட மூன்றாம் வருடத்தில் இருந்து காய்க்கத்தொடங்கும். மே - ஜுன் மாதங்களில் அதிக அளவில் பூக்கும் பூ காயாக மாறி முற்றுவதற்கு சுமார் 8 மாதங்கள் பிடிக்கும். மாதத்திற்கு ஒரு முறை காய்களை அறுவடை செய்யலாம். அறுவடையாகும் காய்கள், வெவ்வேறு முதிர்ச்சி நிலையில் காணப்படும். விதைகள் முதிர்ந்து கருமை நிறமடையும் நிலையில் காய்களை காம்புகளுடன் அறுவடை செய்யவேண்டும். காய்களை நன்றாக முதிர்ச்சியடைய விட்டு அறுவடை செய்தால், காயவைக்கும் போது காய்கள் வெடித்துச் சிதற வாய்ப்புண்டு. எனவே அறுவடையை கவனமாக செய்யவேண்டும்.
மகசூல் : ஒரு எக்டருக்கு 200 முதல் 250 கிலோ ஏலக்காய். சந்தை தகவல்கள்
|
|||||||||||||||||||||||||||||||
Last Updated : April 2015 | |||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |