||| | | | | |
தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: ஏலக்காய்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : மலபார், மைசூர், வழுக்கா, முடிகிரி 1, சிசிஎஸ், ஐசிஆர்ஐ 2, பிவி 1,எஸ்ஆர்பி 14, கிரீன் கோல்ட், கூர்க் ஏலக்காய், சுவாசினி,  அவினாஷ் மற்றும் விஜிதா 1.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நிழலான பகுதிகளில், வடிகால் வசதியள்ள இரும்பொறை மண் உகந்தது. காற்றில் அதிக ஈரப்பதம் மிகுந்த மிதமான தட்பவெப்பநிலை இது நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 6-6.5க்குள் இருந்தால் அவசியம். அதிகமாக காற்று வீசும் பகுதிகளில் இதனைப் பயிரிட முடியாது. மலபார் வகைகளை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 முதல் 1600 மீட்டர் வரை உள்ள உயரத்தில் பயிரிடலாம். ஆண்டிற்கு சராசரியாக 1500 முதல் 2500 மில்லி மீட்டர் வரை மழை பொழியும் இடங்களில்  இவ்வகை ஏலத்தைப் பயிரிட முடியும். ஆனால் மைசூர்  வகைக்கு அதிக மழைப்பொழிவு தேவை.

பருவம் : ஜூன் - டிசம்பர்

இனப்பெருக்கம் : ஏலக்காய் விதை மூலமும், நிலத்தடி தண்டு கிழங்கு மூலமும் இனப்பெருக்கம் செய்யலாம்.

விதையும் விதைப்பும்

நல்ல ஆரோக்கியமான செடிகளிலிருந்து விதைகளைச் சேகரித்துக் கொள்ளவேண்டும். ஒரு எக்டர் நடுவதற்கு 600 கிராம் விதைகள் தேவைப்படும்.

முதன்மை நாற்றாங்கால் : நாற்றாங்கால்  தயாரிக்க, அங்ககச்சத்து நிறைந்த இருமண்பாடு நிலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். வணிகத்தரம் வாய்ந்த கந்தக அமிலம் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் 20 நிமிடம் வைத்திருந்து. பின்பு சுத்தமான நீரினால் கழுவி விதைப்பதினால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கும். தேவையான அளவுக்கு மேட்டுப்பாத்திகள் அமைத்து,  அதில் நன்றாய்ப் பொடி செய்த மக்கிய தொழு உரம், மரச்சாம்பல் மற்றும் அங்ககச் சத்து நிறைந்த மண் இவற்றை சம அளவில் பாத்திகளில் கலந்து விடவேண்டும். இந்தப் பாத்திகளின் குறுக்கே கோடுகள் கிழித்து ஒரே சீராக விதைகளை விதைத்து மணல் கொண்டு மூடவேண்டும். பின்பு அவற்றின் மேல் காய்ந்த புல் அல்லது வைக்கோல் கொண்டு இலேசாக மூ பூவாளியின் உதவி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும்.  விதைத்த மூன்றாம் மாதத்தில் செடிகள் முளைக்க ஆரம்பிக்கும் சுமார் ஒரு வருடம் ஆன பிறகு நாற்றுக்கள் இரண்டாம் நாற்றாங்காலில் நடுவதற்கு தயாராக இருக்கும்.

இரண்டாம் நாற்றாங்கால் : முதன்மை நாற்றாங்காலில் வளர்ந்த நாற்றுக்களைப் பிடுங்கி, புதிதாக உருவாக்கப்பட்ட மேட்டுப்பாத்திகளில் 15-20 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். இந்த நாற்றுக்களை சுமார் ஒரு வருடம் வரை வளர்க்கவேண்டும். பின்பு இவற்றை தோட்டக்கால்களில் நடவு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

பருவ மழைத் தொடங்கும் போது எக்டருக்கு 25 கிலோ மக்கிய கம்போஸ்ட் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கச்செய்யவேண்டும்.

நடவு செய்தல் : நடவு நிலத்தில் 60 செ.மீ நீள. அகல, ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். குழிகளின் இடைவெளி உயரமாக வளரும் செடிகளுக்கு 2.5x2.0 மீட்டராகவும், குட்டையாக  வளரும்  செடிகளுக்கு 2.0 x 1.5 மீட்டர் இருக்குமாறும் அமைத்துக் கொள்ளவேண்டும். குழிகளில் மேல் மண் மற்றும் இலை மட்கு போன்றவற்றை இட்டு நிரப்பி, குழிகளின் மத்தியில் நாற்றுக்களை நடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

எக்டருக்கு 75 கிலோ தழைச்சத்து. 75 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இருசம பகுதிகளாகப் பிரித்து ஜூன் - ஜூலை மாதங்களில் ஒரு முறையும், பின்பு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒரு முறையும் இடவேண்டும்.

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

ஏலக்காய்

75

75

150

289

100

126

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

பின்செய்நேர்த்தி : பின்செய் நேர்த்தியாக தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். பழுத்த, காய்ந்த இலைகளையும், கிளைகளையும் மே - ஜூன் மாதங்களில் களைந்து அப்புறப்படுத்த வேண்டும். மழைக்குப் பின் செடிகளைச் சுற்றி மண்  வெட்டியாலவ் கொத்தி விடவேண்டும்.

நிழல் அளித்தல் : ஏலக்காய் பயிரானது அதிகமான சூரிய ஒளியையும். அதிகக் காற்றையும் தாங்காது. இதைத் தவிர, பயிரின் அருகாமையில் காற்றின் ஈரப்பதம் அதிகம் இருக்கவேண்டும். எனவே நிழல் அளித்தல் மிகவும் அவசியம் ஆகும். சாதாரணமாக கல்யாண முருங்கை போன்ற நிழல் அளித்தல் மிகவும் அவசியம் ஆகும். சாதாரணமாக கல்யாண முருங்கை போன்ற நிழல் தரும் மரங்களை 8 முதல் 10 மீட்டர் இடைவெளியில் நட்டு நிழல் ஏற்படுத்தவேண்டும். மழைக் காலத்திற்கு முன் நிழல் தரும் மரங்களை தக்க அளவு கவாத்து செய்து நிழல் கட்டுப்பாடு செய்தல் வேண்டும். ஏலத் தோட்டங்களில் தேனீ வளர்த்து மகரந்த சேர்க்கையை அதிகரிக்கலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பூச்சிகள் : ஏலக்காயை தாக்கும் ஏலப்பேன், முடி உள்ள புழுக்கள், தண்டு மற்றும் காய்ப்புழுக்கள் இவற்றை கட்டுப்படுத்த மோனோகுரோட்டாபாஸ் 36 இசி 2.5 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீருடன் கலந்து  தெளிக்கவேண்டும். சிலந்திப்பூச்சிகளின் (Mites) தாக்குதல் இருந்தால் டைக்கோபால் 18 இசி இரண்ட மில்லி மருந்துடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

வேர்ப்புழுக்கள் : தாக்குதல் தென்படும் இடங்களில் லிண்டேன் மற்றும் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும்.

நோய்கள்

மொசைக் அல்லது கட்டே நச்சுயிரி நோய் : இந்நோய் ஏலக்காயை தாக்கும் ஒரு முக்கியமான நோய் ஆகும். இதனால் அதிக அளவில் மகசூல் பாதிக்கப்படும். வாழை அசுவினி பூச்சி மூலம் இந்நோய் பரப்பப்படுகிறது. எனவே நோய் பரப்பும் பூச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். எக்டருக்கு 750 மில்லி பாஸ்போமிடான் அல்லது மீதைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் இப்பூச்சியை கட்டுப்படுத்தவேண்டும்.

குத்து அழுகல் நோய் : பாதிக்கப்பட்ட குத்து அழுகிவிடும்.

கட்டுப்பாடு : நாற்றாங்காலில் விதைகளை, விதைப்பதற்கு முன்பே 3 சதுர மீட்டர் நாற்றாங்காலுக்கு 1 லிட்டர் பார்மால்டிஹைடு மருந்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். விதைத்தவுடன் 1 சதவீத கலசை அல்லது 0.25 சதம் மேன்கோசெப் கரைசலை மண்ணில் ஊற்றவேண்டும்.

அறுவடை

ஏலக்காய் நட்ட மூன்றாம் வருடத்தில் இருந்து காய்க்கத்தொடங்கும். மே - ஜுன் மாதங்களில் அதிக அளவில் பூக்கும் பூ காயாக மாறி முற்றுவதற்கு சுமார் 8 மாதங்கள் பிடிக்கும். மாதத்திற்கு ஒரு முறை காய்களை அறுவடை செய்யலாம். அறுவடையாகும் காய்கள், வெவ்வேறு முதிர்ச்சி நிலையில் காணப்படும். விதைகள் முதிர்ந்து கருமை நிறமடையும் நிலையில் காய்களை காம்புகளுடன் அறுவடை செய்யவேண்டும். காய்களை நன்றாக முதிர்ச்சியடைய விட்டு அறுவடை செய்தால், காயவைக்கும் போது காய்கள் வெடித்துச் சிதற வாய்ப்புண்டு. எனவே அறுவடையை கவனமாக செய்யவேண்டும்.

மகசூல் : ஒரு எக்டருக்கு 200 முதல் 250 கிலோ ஏலக்காய்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008