தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: வெந்தயம் |
|||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் சந்தை நிலவரம் |
||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் : கோ 1 ,கோ 2 மற்றும் பூசா எரிலி பன்ஃசிங்
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச்சத்து மிகுந்த மணங்பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்பநிலை ஏற்றது. பருவம் : ஜுன் - ஜுலை மற்றும் அக்டோபர் - நவம்பர் விதையும் விதைப்பும் விதையளவு : எக்டருக்கு 12 கிலோ விதைகள் விதைப்பு : நிலத்தை நன்கு உழுதபின்பு, 3.5x1 அளவுள்ள பாத்திகளாகப் பிரித்து விதைகளை விதைக்கவேண்டும். விதைக்கும் முன்னர் ஒரு எக்டருக்கு தேவையான விதையுடன் 1.5 கிலோ அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்கவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை அடியுரம் : எக்டருக்கு 25 கிலோ தொழு உரத்தை கடைசி உழவின் போது இடவேண்டும். மேலும் 30 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். மேலுரம் : விதைத்த 30 நாட்கள் கழித்து மேலுரமாக எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரத்தை இடவேண்டும்.
நீர் நிர்வாகம் விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாளும் அதனைத் தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும். களை எடுத்தல் : களைகள் முளைக்கும் முன்னர் எக்டருக்கு 700 மில்லி பெண்டிமித்திலின் களைக்கொல்லி மருந்ஐத 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். பிறகு இரண்டு அல்லது மூன்று முறை களை எடுக்கவேண்டும். பின் 3 மாதம் கழித்து மண் அணைக்கவேண்டும். பின்செய்நேர்த்தி : விதைத்த 20-25 நாட்களுக்குப் பிறகு பயிர் களைதல்வேண்டும். களைந்த பயிரை பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வேரழுகல் : நோய் தோன்றும் போது 0.5 கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகத்தில் ஊற்றவேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும். எக்டருக்கு 50 கிலோ புண்ணாக்கை நோய் தோன்றும் போது இடவேண்டும். அறுவடை விதைத்த 20-25 நாட்கள் கழித்து அறுவடை செய்து பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம். 90-100 நாட்களில் விதைகள் உருவாகிவிடும். மகசூல் : எக்டருக்கு பசுங்கீரை 4000 - 5000 கிலோ, விதைகள் 500-700 கிலோ.
|
|||||||||||||||||||||||||||||||||||
மேலோட்டம் |
|||||||||||||||||||||||||||||||||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||
தேசிய இணையதளங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||||||||||||||||||||||||||||||||
பழப்பயிர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||