தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: இஞ்சி |
|||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் சந்தை நிலவரம் |
||||
இரகங்கள் : ரியோ - டி – ஜெனிரோ, மாரன் நடன், சுருக்கி, சுபிரயா, சுரட்டி, சுரவி, வரிமகிரி, ஐஐஎஸ்ஆர் வரா, ஐஐஎஸ்ஆர் மகிமா மற்றும் ஐஐஎஸ்ஆர் ரிஜாதா. மண் மற்றும் தட்பவெப்பநிலை : காற்றோட்டமான வடிகால் வசதியுள்ள, இருமண்பாடான நிலங்கள் மிகவும் உகந்தது. மழையளவு ஆண்டுக்கு 150 செ.மீ கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உணரம் உள்ள பகுதிகயில் இறவைப் பயிராகப் பயிரிடலாம். பருவம் : ஏப்ரல் - மே. விதையும் விதைப்பும் விதையளவு : எக்டருக்கு 1500-1800 கிலோ இஞ்சிக் கிழங்குகள். நடவு : மழை வந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் பார்களில், 15 கிராம் எடையுள்ள இஞ்சித் துண்டுகளை 40x20 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை எக்டருக்கு 40 டன் தொழு உரத்துடன், 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து, கொடுக்கக்கூடிய இராசயன உரங்கள அடியுரமாக இடவேண்டும். களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி நடவு செய்தவுடன், பச்சை இலைகளைக் கொண்டு நிலப்போர்வை அமைக்கவேண்டும். மேலுரம் இடும்போது மண் அணைத்து நீர் தேங்காமல் செய்யவேண்டும். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பூச்சி தண்டுத்துளைப்பான் : இதனைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 30இசி, 2 மிலி, ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது பாஸ்போமிடான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தல் கலந்து தெளிக்கவேண்டும். இலைச்சுருள் பூச்சி கட்டுப்படுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூள் அல்லது குயினால்பாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும். நோய்கள் இலைப்புள்ளி நோய் : இதனைக் கட்டுப்படுத்த 1 சதவீதம் போர்டோக் கலவை அல்லது கார்பன் ஆக்சி குளோரைடு 0.2 சதம் தெளிக்கவேண்டும். இஞ்சி அழுகல் நோய் : அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முறைகளைக் கையாளவேண்டும். இந்த நோய் விதைக் கரணைகள் மற்றும் மண் மூலம் பரவுவதால், நோயற்ற நிலங்களில் இருந்து நன்கு முதிர்ந்த விதைக்கரணைகளைத் தெரிந்தெடுக்கவேண்டும். தண்ணீர் ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது ஒரு சதம் போர்டோக்கலவை அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் மேன்கோசெப் என்ற விகிதத்தில் கலந்து பாதிக்கப்பட்ட செடிகளைச் சுற்றி மண்ணில் ஊற்றவேண்டும். இஞ்சிகிழங்குகளை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 200 பிபிஎம் ஸ்ட்ரெப்டோ சைக்கிலின் மருந்துக் கரைசலில் 30 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு சேமிக்கவேண்டும். அறுவடை 8-9 மாதங்களில் பயிர் அறுவடைக்க வந்துவிடும். இலைகள் பழுப்படைவதும், காய்வதும் அறுவடைக்கான அறிகுறியாகும். மகசூல் : எக்டருக்கு 12-15 டன்கள்.
|
|||||
மேலோட்டம் |
|||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
|||||
தேசிய இணையதளங்கள் |
|||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||
பழப்பயிர்கள் |
|||||