இயற்கை வேளாண்மையில் மிளகு சாகுபடி
மிளகு சாகுபடி இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை வேளாண் சாகுபடியில் மிளகை ஊடுபயிராகவோ (அல்லது) முக்கிய பயிராகவோ பயிரிடலாம். இடுபொருட்களை கொண்டு சாகுபடி செய்யப்பட்ட பயிரிலிருந்து 25 மீ இடைவெளி விட்டு பயிரிட வேண்டும். சரிவான பகுதிகளில் இரசாயன சாகுபடி பரப்பிலிருந்து இயற்கை வேளாண்மை பகுதிக்கு நீர் வடிவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரகங்கள் : |
|
பன்னியூர் 1,2,3,4,5 கிரிமுண்டா, கொட்ட நாடன், சுபகாரா, பஞ்சமி, பெளர்ணமி, ஒட்டப்பிளாக்கல் 1, கல்லுவள்ளி, பாலன்கொட்டா, ஐஐஏஸ்ஆர் சக்தி, ஐஐஏஸ்ஆர்தேவம், ஐஐஏஸ்ஆர் கிரிமுண்டா, ஐஐஏஸ்ஆர் மலபார் எக்செல் மற்றும் உதிரன் கொட்டா.
பன்னியூர் 1 இரகமானது வீரிய ஒட்டுவகையை சார்ந்தது. இது படர் மரங்களில் நன்கு பற்றி வளரும். ஏனைய வகைகளைக் காட்டிலும் கூடுதல் மகசூல் கொடுக்கவல்லது. பன்னயூர் 5 இரகம் நிழலைத் தாங்கி வளரும். இது பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது. |
பஞ்சமி
2828 கிலோ காய்ந்த மிளகு / ஹெக்டர்
சிரிகாரா
2677 கிலோ காய்ந்த மிளகு / ஹெக்டர்
மலபார் எக்செல்
2.78 கிலோ காய்ந்த மிளகு / கொடிக்கு
தேவம்
6.14 கிலோ காய்ந்த மிளகு / கொடிக்கு
கிரிமுண்டா
6.14 கிலோ பச்சை மிளகு / கொடிக்கு
பி.எல்.டி -2
4.97 கிலோ பச்சை / கொடிக்கு
சுபகாரா
4.2 கிலோ பச்சை மிளகு / கொடிக்கு
பெளர்ணமி
4.7 கிலோ பச்சை மிளகு / கொடிக்கு
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
மிளகு பயிரானது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகரி மற்றும் கீழ்பவானி மலைப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் நன்கு வளரும். களிமண் பூமியிலும், மணற்பாங்கான நிலங்களிலும் இப்பயிர் நன்கு வளராது. மண்ணின் கார அமிலத் தன்மை 4.5 முதல் 6.6 வரை இருந்தால் நல்லது. மிளகு பயிருக்கு மழையும், அதிக வெப்பநிலையும் தேவை. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள எல்லா மலைப்பகுதிகளிலும் இப்பயிர் நன்கு வளரும்.
பருவம் :
ஜீன் – டிசம்பர் மாதங்களில் உயர்ரக மிளகு மானாவாரியாகவே பயிர் செய்யப்படுகிறது.
இனவிருத்தி :
மிளகு பயிர் கொடிதுண்டுகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகு ஒருக்கொடியினை தாய்ச்செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். வேர் பிடித்த பின்பு இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம்.
விதையும் விதைப்பும் :
நாற்றங்கால் தயாரிப்பு :
நல்ல நிழல் வளமுள்ள, தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் மற்றும் 5.6 மீட்டர் அளவு நீளமும் கொண்ட உயரப் பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி பின்பு ஒரு பாத்திக்கு 12 கிலோ தொழு உரம், 5 கிலோ மண்புழு உரம், 250 கிராம் உயிர் உரங்கள், 5 கிலோ மணல் மற்றும் 5 கிலோ செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்க வேண்டும்.
|
Panchami |
Cirikara |
|
|
Devam |
Malabar Excel |
|
|
Kirimunta |
Subhakara |
|
|
Subhakara |
Pournamy |
|
|
|
|
விரும்பத்தக்க நல்ல குணங்களை கொண்ட தாய் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட துண்டுகளின் அருகில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்க வேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஓடுகொடிகளை தாய்க் கொடியில் இருந்து வெட்டி நீக்க வேண்டும். பின்பு ஓடுகொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும், கீழ்ப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் தவிர்த்து விட்டு நடுப்பகுதியை தண்டுத்துண்டுகள் (Cuttings) தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். இளம் ஓடு கொடிகளையும், முதிர்ந்த ஓடு கொடிகளையும் தவிர்க்க வேண்டும். பின்னர் ஓடு கொடியிலிருந்து 2-3 கணுக்களை கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தகைய தண்டுத் துண்டுகளின் அடிப்பகுதியை பஞ்சகாவ்யா 3 சதம் கரைசலில் 30 நிமிடம் நனைத்து பின்பு பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நட வேண்டும். பாலித்தீன் பைகளில் (7x5 அங்குல அளவு) ஒரு பாகம் வளமான மேல் மண், ஒரு பாகம் ஆற்று மணல், ஒரு பாகம் தொழுஉரம் மற்றும் ஒரு பாகம் மண்புழு மட்கு உரம் கலந்த கலவையை நிரப்ப வேண்டும். அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றங்கால் பாத்திகளில் 250 கிராம் அசோஸ்பைரில்லம் 250 கிராம் பாஸ்போ பாக்டீரியா 250 வேர் உட்பூசனம் போன்றவற்றை நன்கு கலக்க வேண்டும். உரக்கலவையை இடுவதற்கு முன்னரே தேவையான சிறிய துளைகளை பைகளில் இட வேண்டும். பாத்திகளிலும், பாலித்தீன் பைகளிலும் தண்டு துண்டுகளை நட்ட பின்னர் போதிய நீர் விட்டு நிழலில் வைக்க வேண்டும். இரு முறை தேவையான அளவு நீரை பூவாளியால் ஊற்ற வேண்டும். வளரும் சிறு பதியன்கள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யா என்ற அளவில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும். பந்தல் அல்லது மூங்கில் தப்பைகள், பாலித்தீன் உறைகளை கொண்டு கூடாராம் அமைத்து அதில் பாலித்தீன் பைகளை வரிசையாக அடுக்க வேண்டும். பாலித்தீன் பையில் நடப்பட்ட துண்டுகள் மூன்றாம் வாரத்தில் வேர்விடத் தொடங்கி நடுவதற்கு தயாராகிவிடும்.
மிளகு மற்றும் படர்மரங்கள் நடவு செய்தல் :
முள் முருங்கை, சீமை கொன்னை, சில்வர் ஓக் மற்றும் சூபாபுல் போன்ற மரங்களை மிளகு பயிர் பற்றி வளரப் பயன்படுத்தலாம். ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்யும் போது பலா, கமுகு மற்றும் தென்னை போன்ற பலன் தரும் முருங்கை, சீமை கொன்னை போன்றவைகளை வெட்டப்பட்ட தண்டுகள் மூலமாக நடப்படுகின்றன. இத்தண்டுகளை மிளகுக் கொடிகள் நடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நட்டால் போதுமானது. ஏனைய சில்வர் ஓக், சூபாபல் போன்றவற்றை நாற்றுக்களாகவே நட வேண்டும். பற்று நாற்றுக்களை மிளகுக் கொடிகள் நடுவதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நட வேண்டும்.
உயிர் உரங்கள் மற்றும் உயிர் ஊக்கிகள்

உயிர் உரங்கள் மற்றும் உயிர் ஊக்கிகள் :
ஒரு ஹெக்டருக்கு, 12.5 டன் நன்கு மட்கிய தொழு உரம், 5 டன் இயற்கை உயிராற்றல் உரம் மற்றும் 5 டன் மண்புழு மட்கு உரம் மற்றும் 1.25 டன் நன்கு மட்கிய தேங்காய் நார் உரம் இடவேண்டும். இவற்றுடன் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, அசிட்டோபாக்டர் மற்றும் வேர் உட்பூசனம் (VAM) போன்றவற்றை தலா 25 கிலோ வீதம் இட வேண்டும் மற்றும் உயிர் எதிரி கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் போன்றவற்றை தலா 2.5 கிலோ வீதம் ஹெக்டருக்கு இட வேண்டும். இவற்றுடன் பாறை பாஸ்பேட் 25 கிலோ இட வேண்டும்.
தண்டு துண்டுகளை பயிரிடுவதற்கு முன் குழிகளில் மேற்கூறிய உயிர் உரம், உயிர் எதிர் கொல்லிகள் மற்றும் தொழு உரக்கலவையை நன்கு கலந்து குழிக்கு 40 கிலோ வீதம் இட வேண்டும்.
நிலத்தை தயார் செய்தல் :
சரிவான பகுதிகளில் போதுமான அளவு மண் மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிலத்தை தயார் செய்யும் போது மேற்கொள்ள வேண்டும்.
நடவு செய்தல் :
பரிந்துரைக்கப்பட்ட இரகங்களையே முடிந்தளவு பயன்படுத்த வேண்டும். எரித்ரினா வகைகளை பயன்படுத்துவதால் வேர் முடிச்சு நூற் புழுக்களின் தாக்குதலை குறைக்கலாம். ஒரு குழியில் 2 அல்லது 3 வேர் பிடித்த தண்டுகளை ஜீன் - ஜீலை மாதங்களில் பருவ மழைக் காலத்தில் நடவு செய்ய வேண்டும்.
வேர் விட்ட துண்டுகளைப் படர பயன்படும் மரங்களிலிருந்து 15 செ.மீ தூரத்தில் 50 செ.மீ தூரத்தில் 50 செ.மீ நீள, அகல மற்றும் ஆழமுள்ள குழிகளைத் தோண்டி நடவு செய்ய வேண்டும். நடும் பொழுது குழிக்கு 10 கிராம் வீதம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் வேர்உட்பூசணம் இட வேண்டும். மேலும் கொடிக்கு 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 30 கிராம் பாறை பாஸ்பேட் உரங்களையும் இட வேண்டும். ஒரு ஹெக்டருக்கு சுமார் 1600 தண்டு துண்டுகளை 2.5x2.5 மீட்டர் இடைவெளியில் பயிரிடலாம்.
பயிர் பராமரிப்பு :
கொடிகள் வளரும்போது, நிலத்தில் படுவதை தவிர்க்க கொடிகளை படர் மரங்களில் கட்டி விட வேண்டும். இளம் கொடிகளை வெயில் காலங்களில் வறட்சியிலிருந்து பாதுகாக்க கொடிகளை சுற்றி நிழல் அமைக்க வேண்டும். வேர் விட்ட கொடிகள் வளரும்போது நன்கு சூரிய ஒளி படுமாறும் மற்றும் கொடிகள் நேராக வளர்வதற்கு ஏதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
பூச்சி மற்றும் பூஞ்சாண தாக்குதலை தவிர்க்க பூக்கும் மற்றும் காய்க்கும் தருணங்களில், அதிகப்படியான நிழல்படுவதை தவிர்க்க வேண்டும். இந்த சமயங்களில் படர் மரங்களின் அதிகப்படியான கிளைகளை வெட்டி மூடாக்குவதாலாகவே அல்லது இயற்கை உயிராற்றல் உரமாகவோ பயன்படுத்தலாம்.
மூடாக்குதல் (சோகை விரித்தல்) :
பசுந்தழை மற்றும் காய்ந்த இலைச்சறுகுகளை கொண்டு மூடாக்கு செய்ய வேண்டும். கொடியின் அடிப்பகுதியை அதிகம் சேதம் செய்யக்கூடாது. களை எடுத்து மூடாக்கு செய்ய வேண்டும். மூடு பயிர்களான கலப்பகோனியம் மியூகோனியாடிஸ், மிமோசா இன்ஸிசா போன்ற பயிர்களை பயன்படுத்தி மழைக்காலங்களில் மண் அரிப்பையும், களைகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம். தோட்டங்களின் ஓரப் பகுதிகள், நடைப்பகுதிகளின் ஓரங்களில் பயறு வகைகளை வரப்பு சுற்றுப் பயிராக பயிரிடுவதால் மண் அரிப்பை கட்டுப்படுத்தலாம்.
உரமிடுதல் :
கொடிகள் நன்கு வளர்ந்த பின்பு ஒரு வருடத்திற்கு, ஒரு கொடிக்கு நன்கு மட்கிய தொழு உரம் 5 கிலோ, இயற்கை உயிராற்றல் உரம் 5 கிலோ மற்றும் மண்புழு உரம் 5 கிலோ என்ற அளவில் மே - ஜீன் மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் மண்ணில் இட வேண்டும். மண் ஆய்வின் அடிப்படையில் பாறை பாஸ்பேட், எலும்புத்தூள், சுண்ணாம்பு மற்றும் டோலமைட் போன்றவற்றை இடலாம். மரத்தூளை சாம்பல் சத்து குறைவாக உள்ள மண்களில் இடலாம். பசும் பயிர் கழிவுகள், மாட்டு சாணி, கோழி கழிவுகள் மற்றும் மரத்தூள் (அல்லது) பாறை பாஸ்பேட்டுடன் கலந்து இரசாயன உரத்திற்கு பதிலாகப் பயன்படுத்தலாம். வேம்பு விதைத் தூள் ஒரு வருடத்திற்கு ஒரு கொடிக்கு 2 கிலோ என்ற அளவில் நூற்புழு தாக்கிய பகுதிகளில் அளிக்கலாம்.
சுண்ணாம்பு இடுதல் :
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கொடிக்கு 500 கிராம் சுண்ணாம்பு அல்லது டாலமைட் இட வேண்டும்.
நீர் நிர்வாகம் :
நீர் பாய்ச்சுதல் வசதி இருந்தால் டிசம்பர் – மே மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குழிகளைச் சுற்றி நீர் விட்டால் நல்ல பலன் கிடைக்கும். சொட்டு நீர் பாசனம் உகந்தது.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
ஜீன் - ஜீலை மற்றும் அக்டோ பர் – நவம்பர் மாதங்களில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும்.
கவாத்து செய்தல் :
மிளகுக் கொடிகளின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும். முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் எல்லா பூங்கொத்துக்களையும் உருவி நீக்கிவிட வேண்டும். அத்துடன் மிகுதியான பக்கக் கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிட வேண்டும். மிளகுக் கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன், மேலும் பற்றிப்படர படர் மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை அப்புறப்படுத்தி, தண்டுகளை நாற்றுக்களாக உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு ஹெக்டருக்கு, 12.5 டன் நன்கு மட்கிய தொழு உரம், 5 டன் இயற்கை உயிராற்றல் உரம் மற்றும் 5 டன் மண்புழு மட்கு உரம் மற்றும் 1.25 டன் நன்கு மட்கிய தேங்காய் நார் உரம் இடவேண்டும். இவற்றுடன் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, அசிட்டோபாக்டர் மற்றும் வேர் உட்பூசனம் (VAM) போன்றவற்றை தலா 25 கிலோ வீதம் இட வேண்டும் மற்றும் உயிர் எதிரி கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் போன்றவற்றை தலா 2.5 கிலோ வீதம் ஹெக்டருக்கு இட வேண்டும். இவற்றுடன் பாறை பாஸ்பேட் 25 கிலோ இட வேண்டும்.
தண்டு துண்டுகளை பயிரிடுவதற்கு முன் குழிகளில் மேற்கூறிய உயிர் உரம், உயிர் எதிர் கொல்லிகள் மற்றும் தொழு உரக்கலவையை நன்கு கலந்து குழிக்கு 40 கிலோ வீதம் இட வேண்டும்.
நிலத்தை தயார் செய்தல் :
சரிவான பகுதிகளில் போதுமான அளவு மண் மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிலத்தை தயார் செய்யும் போது மேற்கொள்ள வேண்டும்.
நடவு செய்தல் :
பரிந்துரைக்கப்பட்ட இரகங்களையே முடிந்தளவு பயன்படுத்த வேண்டும். எரித்ரினா வகைகளை பயன்படுத்துவதால் வேர் முடிச்சு நூற் புழுக்களின் தாக்குதலை குறைக்கலாம். ஒரு குழியில் 2 அல்லது 3 வேர் பிடித்த தண்டுகளை ஜீன் - ஜீலை மாதங்களில் பருவ மழைக் காலத்தில் நடவு செய்ய வேண்டும்.
வேர் விட்ட துண்டுகளைப் படர பயன்படும் மரங்களிலிருந்து 15 செ.மீ தூரத்தில் 50 செ.மீ தூரத்தில் 50 செ.மீ நீள, அகல மற்றும் ஆழமுள்ள குழிகளைத் தோண்டி நடவு செய்ய வேண்டும். நடும் பொழுது குழிக்கு 10 கிராம் வீதம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் வேர்உட்பூசணம் இட வேண்டும். மேலும் கொடிக்கு 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 30 கிராம் பாறை பாஸ்பேட் உரங்களையும் இட வேண்டும். ஒரு ஹெக்டருக்கு சுமார் 1600 தண்டு துண்டுகளை 2.5x2.5 மீட்டர் இடைவெளியில் பயிரிடலாம்.
பயிர் பராமரிப்பு
கொடிகள் வளரும்போது, நிலத்தில் படுவதை தவிர்க்க கொடிகளை படர் மரங்களில் கட்டி விட வேண்டும். இளம் கொடிகளை வெயில் காலங்களில் வறட்சியிலிருந்து பாதுகாக்க கொடிகளை சுற்றி நிழல் அமைக்க வேண்டும். வேர் விட்ட கொடிகள் வளரும்போது நன்கு சூரிய ஒளி படுமாறும் மற்றும் கொடிகள் நேராக வளர்வதற்கு ஏதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
பூச்சி மற்றும் பூஞ்சாண தாக்குதலை தவிர்க்க பூக்கும் மற்றும் காய்க்கும் தருணங்களில், அதிகப்படியான நிழல்படுவதை தவிர்க்க வேண்டும். இந்த சமயங்களில் படர் மரங்களின் அதிகப்படியான கிளைகளை வெட்டி மூடாக்குவதாலாகவே அல்லது இயற்கை உயிராற்றல் உரமாகவோ பயன்படுத்தலாம்.
மூடாக்குதல் (சோகை விரித்தல்) :
பசுந்தழை மற்றும் காய்ந்த இலைச்சறுகுகளை கொண்டு மூடாக்கு செய்ய வேண்டும். கொடியின் அடிப்பகுதியை அதிகம் சேதம் செய்யக்கூடாது. களை எடுத்து மூடாக்கு செய்ய வேண்டும். மூடு பயிர்களான கலப்பகோனியம் மியூகோனியாடிஸ், மிமோசா இன்ஸிசா போன்ற பயிர்களை பயன்படுத்தி மழைக்காலங்களில் மண் அரிப்பையும், களைகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம். தோட்டங்களின் ஓரப் பகுதிகள், நடைப்பகுதிகளின் ஓரங்களில் பயறு வகைகளை வரப்பு சுற்றுப் பயிராக பயிரிடுவதால் மண் அரிப்பை கட்டுப்படுத்தலாம்.
உரமிடுதல் :
கொடிகள் நன்கு வளர்ந்த பின்பு ஒரு வருடத்திற்கு, ஒரு கொடிக்கு நன்கு மட்கிய தொழு உரம் 5 கிலோ, இயற்கை உயிராற்றல் உரம் 5 கிலோ மற்றும் மண்புழு உரம் 5 கிலோ என்ற அளவில் மே - ஜீன் மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் மண்ணில் இட வேண்டும். மண் ஆய்வின் அடிப்படையில் பாறை பாஸ்பேட், எலும்புத்தூள், சுண்ணாம்பு மற்றும் டோலமைட் போன்றவற்றை இடலாம். மரத்தூளை சாம்பல் சத்து குறைவாக உள்ள மண்களில் இடலாம். பசும் பயிர் கழிவுகள், மாட்டு சாணி, கோழி கழிவுகள் மற்றும் மரத்தூள் (அல்லது) பாறை பாஸ்பேட்டுடன் கலந்து இரசாயன உரத்திற்கு பதிலாகப் பயன்படுத்தலாம். வேம்பு விதைத் தூள் ஒரு வருடத்திற்கு ஒரு கொடிக்கு 2 கிலோ என்ற அளவில் நூற்புழு தாக்கிய பகுதிகளில் அளிக்கலாம்.
சுண்ணாம்பு இடுதல் :
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கொடிக்கு 500 கிராம் சுண்ணாம்பு அல்லது டாலமைட் இட வேண்டும்.
நீர் நிர்வாகம்:
நீர் பாய்ச்சுதல் வசதி இருந்தால் டிசம்பர் – மே மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குழிகளைச் சுற்றி நீர் விட்டால் நல்ல பலன் கிடைக்கும். சொட்டு நீர் பாசனம் உகந்தது.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
ஜீன் - ஜீலை மற்றும் அக்டோ பர் – நவம்பர் மாதங்களில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும்.
கவாத்து செய்தல் :
மிளகுக் கொடிகளின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும். முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் எல்லா பூங்கொத்துக்களையும் உருவி நீக்கிவிட வேண்டும். அத்துடன் மிகுதியான பக்கக் கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிட வேண்டும். மிளகுக் கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன், மேலும் பற்றிப்படர படர் மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை அப்புறப்படுத்தி, தண்டுகளை நாற்றுக்களாக உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். |
|
நோய்கள்
- அடி அழுகல் நோய் : பைட்டோப்தோரா கேப்ஸிஸி என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது. அடி அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒழுங்கான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அளவான முறையில் உழவு மேற்கொள்ள வேண்டும். சீரான முறையில் நீர் வடிதல் வேண்டும். டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ் கலவையை வருடத்திற்கு ஒரு கொடிக்கு 50 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
- பொல்லு நோய் : கொல்லட்டோடிரைக்கம் கிளியோஸ்போரியாடிஸ் என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது. பொல்லு நோய் (அல்லது) சாடி அழுகல் நோய் தோன்றினாலும், போர்டாக்ஸ் கலவையை 1% மிகக் குறைந்த அளவில் தெளிக்க வேண்டும். குன்றிய வளர்ச்சி மற்றும் பில்லோடி நோயுள்ள விதைக் காரணிகளை பயிரிடப் பயன்படுத்தக் கூடாது. வேப்ப விதைத் தூளையும் நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
|
|
|
|
அடி அழுகல் நோய் -1 |
அடி அழுகல் நோய் -2 |
வாடல் நோய் |
|
- மெது அழுகல் மற்றும் திடீர் அழுகல் நோய் : மிளகுப் பயிரைத் தாக்கும் நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும். நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும். இது ஒரு வகை பூசண நோய் ஆகும். இது ஜீலை – ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவக்காற்று மழையினால் அதிகம் பரவுகின்றது. நோய் தாக்கிய 10 அல்லது 15 நாட்களுக்குள் மிளகுக் கொடி இலை அனைத்தும் உதிர்ந்து இறந்துவிடும். உதிரும் இலைகள் பசுமை நிறம் கொண்டவையாக இருக்கும். தூர் பாகத்திற்கு மிக அருகில் இருக்கும் தளிர் மற்றும் முதிர்ந்த இலைகள் கருமையாக மாறிவிடும். தூர் பாகம் முதலில் அழுக ஆரம்பித்து பின் வேர்பாகம் முழுவதும் அழுகி செடி இறந்துவிடும். இந்நோய் கீழ்பழனி மலைகளில் அதிகமாகக் காணப்படும்.
அறுவடை மற்றும் அறுவடை பின்சார் பாதிப்புகள்:
மிளகு நட்ட மூன்றாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கி ஆறு ஆண்டுகளில் கொடிகள் நல்ல மகசூல் கொடுக்கத் துவங்கும். மிளகு பூக்க ஆரம்பித்த பின் 6 முதல் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இந்தியாவில், மிளகுச் செடியின் பூக்கள் மே-ஜீன் மாதத்தில் பூக்கும். பூத்தலிலிருந்து அறுவடை வரை 6-8 மாதம் ஆகும். சமவெளிப் பகுதிகளில் அறுவடைக்காலம் நவம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும். மலைப்பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இருக்கும். முழு பூங்கொத்தையும் காய்கள் ஆரஞ்சு சிவப்பு நிறமாக மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடையின் போது, சிவப்பு எறும்புகளின் மீது எந்த இரசாயனத்தையும் தூவக் கூடாது. மிளகுக் கொடியில் 10 சதம் மிளகுக் காய்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாக மாறும் போது அனைத்து மிளகு சரங்களையும் அறுவடை செய்துவிட வேண்டும். நன்கு முற்றிய மிளகுக் காய்களை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்தல் வேண்டும். கைகளினால் அறுவடை செய்தல் வேண்டும். அறுவடை செய்த காய்களை துளையிடப்பட்ட அலுமினியப் பாத்திரம் (அல்லது) மூங்கில் கூடையில் வைத்து, 80 சென்டிகிரேடு கொதி நீரில் 1 நிமிடம் மூழ்கவைத்து பின்னர் 7-10 நாட்கள் சூரிய ஒளியில் உலர்த்தும்போது அவ்வப்போது திருப்பி விட்டுக் கொண்டிருக்க வேண்டும். காய்களை திருப்பி விடாவிட்டால், பூஞ்சாண வளர்ச்சி ஏற்படும். இதற்கு பயன்படுத்தப்படும் நீர் சுத்தமாகவும், மாசற்றும் இருக்க வேண்டும்.
மகசூல்:
ஒரு வருடத்திற்கு ஒரு கொடியிலிருந்து 2 முதல் 3 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும்.
சுடுநீரில் மிளகுக் காய்களைப் போடுவதால் ஏற்படும் நன்மைகள்:
சுடுநீரிலிடப்பட்ட காய்கள் உலர்வதற்கு 3-4 நாட்கள் இருந்தால் போதும். இதனால் நேரம் வீணாகாமல் இருக்கும். உலர்ந்த மிளகுக் காய்கள் ஒரே மாதிரி கருமை நிறத்தில் காணப்படும்.
வெள்ளை மிளகு :
வெள்ளை மிளகு தயாரிப்பதற்கு 3 முதல் 5 காய்களுடன் கூடிய நன்கு முதிர்ந்த கதிர்கள் மட்டும் அறுவடை செய்ய வேண்டும். முதிராதவற்றை தனியே பிரித்தெடுக்க வேண்டும். பிறகு இந்த முதிர்ந்த காய்களை சாக்குப் பையில் 1-2 நாட்கள் வரை வைத்திருந்து பழுக்கச் செய்ய வேண்டும். 50 கிலோ அளவுடைய சாக்குப் பையில் இந்த முதிர்ந்த காய்களை வைத்து, தளர்வாக கட்டிவிட வேண்டும். பிறகு இந்த பைகளை ஒரு ஒடையில், கால்வாயில் 69 நாட்கள் மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும். காயின் வெளித்தோல் உரியும் வரை வைக்க வேண்டும். பின்பு பைகளை வெளியே எடுத்து, காய்களை தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின் இவற்றை நீரில் கழுவி, உலர்த்த வேண்டும். சூரிய ஒளியில் உலர்த்துவதற்காக, சிமெண்ட் (அல்லது) மூங்கில் பாய்களில் பரப்ப வேண்டும். தொடர்ந்து குவித்து வைத்து, 2 மணி நேர இடைவெளியில் மீண்டும் பரப்பி ஒரே மாதிரி உலர வைக்க வேண்டும். 11% ஈரப்பதம் வரும் வரை உலர்த்தி பின் சுத்தமான பாலித்தீன் (அல்லது) சாக்குப் பையில் அடைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
விஜயநகரம், உதகை – 643 001.
தொலைபேசி – 0423-2442170
மின்னஞ்சல் – hrsooty@tnau.ac.in |
|
|
|