தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: புளி |
|||||||||||||
புளி (டேமரிண்டஸ் இண்டிகஸ்)
இரகங்கள் : பிகேஎம். 1, உரிகம், தும்கூர், ஹாசனூர், ப்ரதிஸ்தான், டீ. டி எஸ் 1, யோகேஸ்வரி மண் மற்றும் தட்பவெப்பநிலை : புளிய மரம் பல்வேறு வகையான மண் வகைகளில் வளரும். தரங்குறைந்த, அரிக்கப்பட்ட மணல், உப்பு மற்றும காரத் தன்மை மண் வகைகளிலும் வளரும். நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் கலந்த இருபுரை மண்ணில் அதிக உற்பத்தி திறனை கொடுக்கும். தனித்த குறைந்தபட்ச வெப்பநிலையாக 36-47.50செ மற்றும் தனித்த குறைந்தபட்ச வெப்பநிலையாக 0-17.50செ கொண்ட இடத்தில் நன்கு வளரும். மழையளவு 750-1900 மிமீ கடல் மட்டத்திலிருந்து 100 மீ வரை உயரமுள்ள பகுதிகளில் வளரக் கூடியது. பருவம் : ஜுன் - டிசம்பர் விதையும் விதைப்பும் இனப்பெருக்கம் :விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல். நாற்றங்கால் : புதிய விதைகளை நாற்றங்கால் படுக்கைககளில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் விதைக்க வேண்டும். விதைகளை 10 சதவிகித மாட்டு சிறுநீர் (அ) மாட்டுச் சாண கரைசலில் (500 கிராம் / 10 லிட்டர் தண்ணீர்) 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரண்டு வருட வயதுள்ள நாற்றுகளை வயலில் நட வேண்டும். விதையில்லா பயிர் பெருக்கம் இடைவெளி : 8-10 x 8-10 செ.மீ நடவு : 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் மிதைல் பாரதியான் மருந்து 50 கிராம் தூவவேண்டும். செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றிக் கட்டிவிடவேண்டும். நீர் நிர்வாகம் : ஏழு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை : 25 கிலோ தொழுஉரம் மற்றும் 2 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் ஒரு வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 200:150:250 கிராம் NPK இட வேண்டும். களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி செடிகளின் ஒட்டுக்கு அடிப்பாகத்தில் தோன்றும் வேர்க்குச்சியின் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும். மற்றும் காய்ந்த நோய் தாக்கிய குச்சிகளையும் அகற்றவேண்டும். ஊடுபயிர் :பயறு வகை பயிர்கள், குறுகிய கால காய்கறிகள், முருங்கை, எள் மற்றும் சோளம் போன்றவற்றை நான்கு ஆண்டுகளுக்கு பக்கச் சந்து இடைவெளியில் ஊடுபயிராக பயிரிடலாம். உருவமைப்பு அளித்தல் : ஆரம்பத்தில் உருவமைப்பு செய்தல் மூலம் உயர்ந்த சிரத்துடன் கூடிய சீரான கிளைகளை பெறலாம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு இலைத்தின்னும் புழு : குயினால்பாஸ் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். சேமிப்பு வண்டு : காய்பிடிக்கும் பருவத்தில் குயினால்பாஸ் 25 EC 1 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய்கள் சாம்பல் நோய் : இந்நோயைக் கட்டுப்படுத்த டைனோகாப் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். அறுவடை நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில் தான் நல்ல மகசூல் கிடைக்கும். பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் - மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
மகசூல் : ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ. சந்தை தகவல்கள் :
|
|||||||||||||
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |