தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: மஞ்சள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மஞ்சள் (குர்குமா லாங்கா) ஜின்ஜிபெரேசியே இரகங்கள் : கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2) ரோமா, ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா விரலி மஞ்சள்,ஐஐஎஸ்ஆர் பிரபா, ஐஐஎஸ்ஆர் பிரதீபா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம். உள்ளூர் வகைகள் : ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் முக்கிய நாட்டு வகைகள் ஆகும்.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை: மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும். நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருபண்பாடு நிலம் மிகவும் உகந்தது. மஞ்சள் பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது, ஆண்டு ஒன்றுக்கு சராசரி மழை 1500 மி.மீ மேல் உள்ள பகுதிகளில் மஞ்சளை மானாவாரியாக பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களிலும் சாகுபடி செய்யலாம்.
பருவம் : தமிழ்நாட்டில் மே - ஜூன் மாதம் மிகவும் ஏற்ற பருவமாகும். விதை நேர்த்தி
பயிர்ப் பெருக்கம் : நடவு வயல் தயார்படுத்துதல் : இடைவெளி : 45 x 15 செ.மீ 20-30 கிராம் எடையுள்ள விதைக் கிழங்குகளை 4 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும். அடியுரம்: எக்டருக்கு 25 டன் தொழுஉரம், 200 கிலோ வேப்பம் (அ) கடலை புண்ணாக்கு, 25:60:108 கிலோ NPK, 30 கிலோ பெரஸ் சல்பேட் மற்றும் 15 கிலோ ஜிங்க் சல்பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை நடவின் போது இட வேண்டும். நுண் ஊட்டச்சத்து பயன்பாடு நீர்வழி உரமிடுதல் :
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி களை நிர்வாகம் : நட்ட மூன்றாவது நாளில் பேஸலின் களைக் கொல்லி 2 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். நடவு செய்த 30வது நாளில் முதல் களையும், பின் 50,120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்கவேண்டும். ஊடுபயிர் : மஞ்சளை இளந் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக பயிர் செய்யலாம். மஞ்சள் தோட்டத்தில் கொத்தமல்லி, வெந்தயம், மிளகாய், பயறுவகைகள் போன்ற பயிர்களை அகன்ற இடைவெளியில் பயிருக்கு தக்கவாறு ஊடுபயிராகப் பயிரிடலாம். மஞ்சளை சிறிதளவு நிழலிலும் சாகுபடி செய்யலாம். நிழல் ஒழுங்கு படுத்தும் பயிராக அகத்தி மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்களைப் பயிரிடலாம். சின்ன வெங்காயத்தை ஊடுபயிராகப் பயிர் செய்வதாக இருந்தால், பேஸலின் மருந்தை சின்ன வெங்காயம் விதைப்பு செய்தவுடன் மண்ணின் மீது தெளிக்கவேண்டும். பேஸலின் தெளித்த பகுதிகளில் நடக்கக்கூடாது. நடந்தால் மருந்து காலில் ஒட்டிக்கொள்ளும். அந்த இடத்தில் களைகள் முளைத்துவிடும். எனவே, களைக்கொல்லி தெளிக்கும் போது பின்நோக்கி நடக்கவேண்டும். அல்லது பக்கவாட்டில் நடக்கவேண்டும். நீர்ப்பாசனம் செய்த பின்னர் தான் நிலத்தில் நடக்கவேண்டும். பெல்லாரி வெங்காயம் நடவு செய்யவேண்டும் எனில் களைக்கொல்லி தெளித்து நீர்ப்பாசனம் செய்த பின் நடவு செய்யவேண்டும்.
மண் அணைத்தல் : இரண்டாவது மேலுரம் மற்றும் நான்காவது மேலுரம் இடும்போது மண் அணைக்கவேண்டும். நீர் நிர்வாகம் மஞ்சள் நடவுக்கு முன்பு, பிறகு நடவு செய்த மூன்றாம் நாளும் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவுக்கு முந்தைய நேர்த்திவிதைக் கிழங்குகளை 1 கிராம் / லிட்டர் கார்பன்டாசிம் மற்றும் போசலோன் 35 EC 2 மிலி/ லிட்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 WSC 1.5 மிலி/ லிட்டரில் ஊற வைப்பதன் மூலம் கிழங்கழுகல் மற்றும் செதில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பூச்சிகள் செதில் பூச்சி : இவை மஞ்சளின் கிழங்குப் பகுதியினைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும். இதனால் கிழங்குகள் சுருங்கி, பின் காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து, கிழங்குகளை நடவு செய்யவேண்டும். செதில் பூச்சியால் பாதிக்கப்படும் சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை மஞ்சள் பயிரிடும் நிலத்தில் பயிர் செய்யக்கூடாது. நடவு செய்யப்பட்ட வயலில் செதில் பூச்சிகளை ஒழிக்க டைமீதோயேட் (ரோகார்) 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகம் நனையும்படி ஊற்றவேண்டும். தண்டுத் துளைப்பான் : தண்டுத் துளைப்பான் விரும்பி உண்ணும் ஆமணக்கு, மாதுளை, பலா, இஞ்சி போன்றவை மஞ்சள் தோட்டத்திற்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இலைப்பேன் : இலைகளில் சாறை உறிஞ்சி பயிர்களை வாடச்செய்யும். மெட்டாசிஸ்டாக்ஸ் மற்றும் டைமெத்ரான் 750 மில்லி , தெளிப்பதன் மூலம் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழு : செம்மண் கலந்து மணற்பாங்கான இடங்களில் நூற்புழு தாக்குதல் தென்படும். இவை மஞ்சளைத் தவிர புகையிலை, மிளகாய், கத்தரி, வாழை, கனகாம்பரம் ஆகிய பயிர்களைத் தாக்கும். எனவே இவற்றை ஊடுபயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்கவேண்டும். செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழுத் தாக்குதலைக் குறைக்க ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். மீண்டும் யூரியா இடும்போது 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். நட்ட 5வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ கார்போபியூரான் குறுணையை செடியைச் சுற்றி 2-3 செ.மீ ஓரத்தில் இடவெண்டும். பின்பு மணல் கொண்டு மூடி நீர்ப்பாய்ச்சவேண்டும். நோய்கள் கிழங்கழுகல் நோய்
இலைத் தீயல்நோய் பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுத்து எரித்துவிடவேண்டும். பின் காப்பர் ஆக்சி குளோரைடு 1250 கிராம் ஒரு எக்டருக்கு அல்லது மேன்கோசெப் 400 கிராம் ஒரு எக்டர் என்னும் அளவில் நோய் கண்டவுடன் தெளிக்கவும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து, இரண்டு அல்லது மூன்று முறை 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
இலைப்புள்ளி நோய் இலைத்தீயல் நோய்க்கு உரிய மருந்துகளை இதற்கும் பயன்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை பயிர் மஞ்சாளதல், சாய்தல், உலர்ந்துவிடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழிதோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.
மகசூல் விதைக் கிழங்குகளை சேமித்தல்: விதைக் கிழங்குகளை பகுதி மூடப்பட்ட பந்தலின் கீழ் மணல் ஊடகத்தில் வைத்து சேமிக்க வேண்டும்.சந்தை தகவல்கள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |