தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்கு

முன்னுரை

இரகங்கள் : கோ 1, பஞ்சமுகி, கோவூர் (சத்முகி), ‚பல்லவி, ‚ரேஸ்மி.
மண் மற்றும் தட்பவெப்பநிலை : இரும்பொறை மண் உகந்தது. ஈரப்பதமுள்ள மிதவெப்பநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும்.
பருவம் : ஜூன் - ஜூலை மற்றும் பிப்ரவரி - மார்ச்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தி மற்ற கிழங்கு வகைகளுக்குக் குறிப்பிட்ட முறையில் உரம் இடவேண்டும். பின்னர் 45 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைத்தல்வேண்டும்.

விதையும் விதைப்பும்

முற்றின பருவத்தில் எடுத்த கிழங்குகளை முளைக்க வைத்து பின்னர் உபயோகப்படுத்த வேண்டும்.
விதை அளவு : எக்டருக்கு 80 கிலோ.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
பின்செய்நேர்த்தி : ஊடுபயிராக வெங்காயம், கொத்துமல்லி, மிளகாய் போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம். தேவைப்படும்போது நீர்ப் பாய்ச்சவேண்டும். நட்டு 10 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும். வேண்டும்போது களை எடுத்த மண் அணைக்கவேண்டும்.

அறுவடை

செடிகள் வளர்ந்து 8-9 மாதங்களில் கிழங்கு முற்றி பக்குவம் அடையும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது அறுவடைக்கான அறிகுறியாகும். அத்தருணத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டு, கிழங்குகளை அறுவடை செய்யவேண்டும். சாதாரணமான தட்பவெப்பநிலையில் அறுவடை செய்த கிழங்குகளை 6 மாதங்கள் வரை கெடாமல் வைத்து இருக்கலாம்.

மகசூல் : 180 நாட்களில் எக்டருக்கு 8-10 டன் கிழங்குகள்.
ஊட்டச்சத்து நிர்வாகம் : கடைசி உழவின்போது மக்கிய தொழுஉரம் ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் இடவேண்டும். மேலும் தழைச்சத்து 20 கிலோ மணிச்சத்து 30 கிலோ மற்றும் சாம்பல்சத்து 60 கிலோ அடிஉரமாக இடவேண்டும். மேலும் நடவு செய்த 45வது நாள் 20,30 மற்றும் 60 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.