தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: குழந்தை மக்காச்சோளம் |
|||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் சந்தை நிலவரம் |
||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் : கோ.1 மண் மற்றும் தட்பவெப்பநிலை : மக்காச்சோளம் விளையக்கூடிய மண் வகை மற்றும் தட்பவெப்பநிலையில் இதையும் பயிர் செய்யலாம். பருவம் இறவை : ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மானாவாரி : ஜீன் - ஜீலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் விதை அளவு : எக்டருக்கு 25 கிலோ நிலம் தயாரித்தல் நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்தவேண்டும். பிறகு 45 செ.மீ இடைவெளியில் சிறிய பார்கள் அமைத்து, அந்தப் பார்களில் 25 செ.மீ இடைவெளியில் விதைகளை ஊன்றவேண்டும். நீர் நிர்வாகம் விதைத்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பிறகு வாரம் ஒரு முறை பாசனம் போதுமானது, எப்போதும் தூர்களில் தண்ணீர் தேங்கக்கூடாது. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உரமிடுதல் : இப்பயிருக்கு நல்ல முறையில் உரமிட்டால் தான் நல்ல பலன் கிடைக்கும். சாதாரண மக்காச்சோளத்திற்கு இடுவதைப் போலவே அடியுரமாக எக்டருக்கு 12.5 டன்கள் மக்கிய தொழு உரம், 75 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை இடவேண்டும். அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தை எக்டருக்கு இரண்டு கிலோ என்ற அளவில் இட்டால், பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தில் 25 சதவிகிதம் இடுவதைக் குறைக்கலாம். மேலுரமாக விதைத்த 25வது நாளில் 75 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மேலுரம் இடுவதற்கு முன்பாக களை எடுத்தவிட்டு மேலுரம் இடவேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி பின்செய்நேர்த்தி இவ்வகை மக்காச்சோளமானது அதிக உயரம் வளராது சுமார் 100-125 செ.மீ உயரம் தான் இருக்கும். விதைத்த 40-45 வது நாட்களின் ஆண் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஆண் பூக்களை அவ்வப்போது வெட்டி எடுத்துவிடவேண்டும். இதனால் மகரந்தச் சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு அறவே தவிர்க்கப்படுகிறது. அறுவடை ஒரு செடியில் இரண்டு அல்லது மூன்று கதிர்களை நட்ட 60 முதல் 75 நாட்களில் அறுடை செய்துவிடலாம். கதிர்களை தக்க பருவத்தில் அறுவடை செய்வது தான் முக்கியம். கணுக்களில் கதிர்கள் தோன்றி வளர்ச்சி அடையும் போது பட்டு போன்ற இழைகள் கதிர்களிலிருந்து வெளியே வரும். அந்தப் பருவத்தில் தான் அறுவடை செய்யவேண்டும். முதல் கதிர் மற்றக் கதிர்களை விடப்பெரியதாக இருக்கும்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||
மேலோட்டம் |
|||||||||||||||||||||||||||||||||||||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||
தேசிய இணையதளங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||||||||||||||||||||||||||||||||||||
பழப்பயிர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||