தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: சுரைக்காய் |
|||||||||||||||||||||||||||||||
நிலம் தயாரித்தல் நிலம் தயாரித்தல் மற்றும் விதைத்தல் : நிலத்தை அமைத்து 3-4 முறை உழவு செய்து கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்பு 2.5x2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்கள் 30x30x30 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் 5 விதைகளை நீர் ஊற்றவேண்டும். 15 நாட்கள் கழித்து குழி ஒன்றில் இரண்டு வளமாக செடிகளை விட்டு விட்டு மற்றவைகள களைந்துவிடவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் 10 கிலோ இடவேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக் கலவையை 100 கிராம் அளவுக்கு இடவேண்டும். மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இடவேண்டும்.
நீர் நிர்வாகம் பத்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி விதைத்த 20 மற்றும் 40வது நாட்களில் களைக்கொத்து கொண்டு கொத்திகளை நீக்குதல்வேண்டும். அதிக மழைக்காலங்களில் மூங்கில் குச்சிகளை நட்டு கொடிகளை ஏற்றிவிட்டால் காய்கள் அழுவி வீணாவதைத் தவிர்க்கலாம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு சாம்பல் நோய் : இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு டைனோகாப் 500 மில்லி அல்லது கார்பென்டைசெம் 500 கிராம் மருந்தைத் தெளிக்கவேண்டும். அடிச்சாம்பல் நோய் மேன்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்’தை 1 எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதால் அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம். பூசணிவகைக் காய்கறிகளுக்கு தாமிரம் மற்றும் கந்தகத் தூள்களை ஒருபோதும் தெளிக்கக்கூடாது. அறுவடை காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்யவேண்டும். மகசூல் : எக்டருக்கு 135 நாட்களில் 15 முதல் 20 டன் காய்களை அறுவடை செய்யலாம்.
|
|||||||||||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024. |