||| | | | | |
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: சுரைக்காய்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : கோ 1, பூசா சம்மர் (நீளம்), பூசா சம்மர் (உருண்டை), பூசா மஞ்சரி, பூசா மேகதூத், அர்கா பகார்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : பலவிதமான மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. பனிவிழும் பிரதேசங்களில் இதனைப் பயிர் செய்ய முடியாது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும்.

பருவம் : ஜீலை மற்றும் ஜனவரி

விதையும் விதைப்பும்

விதை அளவு : ஒரு எக்டருக்கு 3 கிலோ விதைகள்.
விதை நேர்த்தி : விதைப்பதற்கு முன் விதைகளை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் என்ற அளவில் உபயோகிக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலம் தயாரித்தல் மற்றும் விதைத்தல் : நிலத்தை அமைத்து 3-4 முறை உழவு செய்து கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்பு 2.5x2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்கள் 30x30x30 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் 5 விதைகளை நீர் ஊற்றவேண்டும். 15 நாட்கள் கழித்து குழி ஒன்றில் இரண்டு வளமாக செடிகளை விட்டு விட்டு மற்றவைகள களைந்துவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் 10 கிலோ இடவேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக் கலவையை 100 கிராம் அளவுக்கு இடவேண்டும். மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இடவேண்டும்.

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள்(கிராம குழி ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம குழி ஒன்றிற்கு)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

சுரைக்காய்

விதைக்கும் போது குழி ஒன்றிற்கு

6

12

12

60

0

 

30 நாட்களுக்குப் பின்னர்

10

0

0

0

22

நீர் நிர்வாகம்

பத்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

விதைத்த 20 மற்றும் 40வது நாட்களில் களைக்கொத்து கொண்டு கொத்திகளை நீக்குதல்வேண்டும். அதிக மழைக்காலங்களில் மூங்கில் குச்சிகளை நட்டு கொடிகளை ஏற்றிவிட்டால் காய்கள் அழுவி வீணாவதைத் தவிர்க்கலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
வண்டுகள், பழஈக்கள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50இசி 1 மில்லி மீதைல் டெமட்டான் 25 இசி ஒரு மில்லி அல்லது பென்தியான் 100 இசி 1 மில்லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் நோய் : இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு டைனோகாப் 500 மில்லி அல்லது கார்பென்டைசெம் 500 கிராம் மருந்தைத் தெளிக்கவேண்டும்.

அடிச்சாம்பல் நோய் மேன்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்’தை 1 எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதால் அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பூசணிவகைக் காய்கறிகளுக்கு தாமிரம் மற்றும் கந்தகத் தூள்களை ஒருபோதும் தெளிக்கக்கூடாது.

அறுவடை

காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல் : எக்டருக்கு 135 நாட்களில் 15 முதல் 20 டன் காய்களை அறுவடை செய்யலாம்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008