தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: பிராட் பீன்ஸ்

இரகங்கள் : நாட்டு இரகங்கள், எஸ்ஆர்எஸ் 1 , பிஆர்1 மற்றும பிஆர்2

மண் : இப்பயிர் அனைத்து மண் வகையிலும் வளர்க்கக்கூடியது. இதற்கு தேவையான காரமற்றும் அமிலத்தன்மை 6.5-7.5 இருக்கவேண்டும். சிறந்த மற்றும் மகசூலுக்கு குளிர்ச்சியான தட்பவெப்பநிலை தேவை.

விதைப்பு மற்றும் பருவம் :

ஜூலை - ஆகஸ்ட் , நவம்பர் - டிசம்பர் வரை விதைக்கலாம். விதைக்கும் பொழுது இடைவெளியாக 45x15 செ.மீ விடுதல்வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது மண்ணை பண்படச்செய்யவேண்டும். பின் தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

ஊட்டச்சத்து நிர்வாகம்

கடைசி உழவின்போது ஒரு எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இருத்தல்வேண்டும். அடியுரமாக 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மேலும் 25 கிலோ தழைச்சத்தினை விதைத்த 20-25 நாளிலும், 25 கிலோ தழைச்சத்தினை விதைத்த 40-45வது நாளில் மேலுரமாக இடவேண்டும்.

பின்நேர்த்தி

விதைத்த 45வது நாள் மண்ணைக்கவேண்டும். செடிகள் மலர ஆரம்பித்தவுடன் நுனி பாகத்தைக் கிள்ளி விடுதல் மூலம் காய்கள் விரைவான வளர்ச்சியினை அடையும்.

மகசூல்

விதைத்த 10-12 மாதங்களில் 400-500 கிலோ காய்கள் (பீன்ஸ்) ஒரு எக்டரிலிருந்து அறுவடை செய்யலாம்.