இரகங்கள்
ஜே.ஜீ.- 11, பூஃக்ளே ஜீ 95311(கே) விதைக்கும் பருவம்
மானாவாரி: செப்டம்பர் கடைசி வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை
பாசன பயிர் : அக்டோபர் இரண்டாம் பதினைந்து நாட்கள் முதல் நவம்பர் முதல்
வாரம் வரை இடைவெளி
30x10 செ.மீ.(வரி விதைப்பு)
விதை நேர்த்தி
- விதை பிரைமிங் (விதையை 4-5 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்)
- டிரைக்கோடெர்மா (6 கிராம்/கிலோ) மற்றும் விட்டா வேக்ஸ் (கார்பாக்ஸின்) 1 கிராம் கொண்டு 1 கிலோ விதை நேர்த்தி செய்தல்
- ரைசோபியம் கலவை (200 கிராம்) / 10 கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்தல்
களை எடுத்தல்
- பென்டிமெத்தலினை 1.0 – 1.25 ஏ.ஐ. கிலோ/ ஹெக் அளவில் முளைக்கும் முன் தெளிக்க வேண்டும்.
- ஒரு கைக்களையெடுத்தல் வேண்டுமெனில் செய்ய வேண்டும்.
நீர்ப்பாசனம்
காய் உருவாகும் பருவத்தில் ஒரு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
உரம் இடுதல்
- 15-20 கிலோ நைட்ரஜன் 40 கிலோ பாஸ்பரஸ், 20 கிலோ சல்பர், 1 கிலோ அம்மோனியம் மாலிப்டேட் மற்றும் 5 டன் தொழு உரம்/ எக். இட வேண்டும்.
- 2% யூரியா/டீ.ஏ.பி. பூக்கும் பருவத்திலும் (விதைத்த 70 நாட்களுக்குப் பிறகு) அதன் பின் நாட்களிலும் தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சி கண்காணிப்பு
- 5-6 பொறிகள் எக்டருக்கு – பீரமோன் பொறிகள் அமைக்க வேண்டும் (6 ஆண் அந்துப்பூச்சிகள் ஓர் இரவில் பொறியில் சிக்குதல்)
- செண்டுமல்லியைப் பொறிப்பயிராக வளர்த்தல்
- எக்டருக்க 30 – 40 பறவைகள் உட்காருமிடம் அமைத்தல் (பயிர் முதிர்ச்சி அடையும் சமயத்தில் அவற்றை நீக்க வேண்டும்)
- வேம்பு விதைச்சாறு 5% (அ) இன்டாக்சோகார்ப் 500 மி.லி./ஹெக். தெளிக்க வேண்டும்.
அறுவடை
- 3-7 மாதத்தில் பயிர் முதிர்ச்சி அடையும், இலைகளானது பழுப்பு (அ) மஞ்சள் நிறமாக முதிர்ச்சி அடையும் பருவத்தில் மாறும்
- பயிர் முதிர்ச்சி அடையும் போது காய்ந்த விதைகளை அறுவடை செய்யலாம் (அ) காயும் முன்பே நிலப்பரப்பை ஒட்டி அறுத்தல் (அ) முழுவதும் பிடுங்குதல் வேண்டும்
- பயிர்களை சில நாட்கள் அடுக்கி வைத்து, பின்னர் களத்தில் அடித்து எடுக்க வேண்டும்.
- உமிகளை/ தோலை காற்றில் தூற்றுவதன் மூலம் கடலையிலிருந்து பிரிக்கலாம்.
|