||| | | | | |
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: மிளகாய்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது. கோ 1, கோ 2, கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1, பிகேஎம் 1.

கடற்கரையோர வடகிழக்கு மாவட்டங்களுக்கு பயிரிட ஏற்ற வகை : பிஎல்ஆர் 1.

மேலும் இந்திய தோட்டக்கலைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அர்கா மெகானா, அர்கா ஹரிதா, அர்கா சுவேதா மற்றும் அர்கா லோகித்.

இதைத் தவிரஈ சாத்தூர் சம்பா, இராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த பகுதிகளில் பயிர்  செய்யப்படுகின்றன.

K 1

K 2

Co 1

Co 2

Co 3

Co 4

KKM (Ch) 1

PKM 1

PKM 2

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். உறைபனி இல்லாத 20-250 சென்டி கிரேட் வரை இருக்கக்கூடிய வெப்பம் உகந்தது. மானாவாரியிலும், இறவையிலும் இதைப் பயிரிடலாம். இப்பயிருக்கு 2 மணி நேரத்திற்கு மேல் நீர் நின்றால் செடியின் வேர்கள் அழுகிவிடும்.

விதையும் விதைப்பும்

விதைத்தல் மற்றும் நடவு பருவம்

1.

ஜனவரி - பிப்ரவரி

2.

ஜீன் – ஜீலை

3.

செப்டம்பர்

விதை அளவு: ஒரு எக்டருக்கு ஒரு கிலோ (நாற்றாங்காலுக்கு) நேரடி விதைப்பிற்கு 2 கிலோ.

விதை நேர்த்தி : விதை மூலம் பரவும் நுனிக்கருகல்  நோய், பழம் அழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது ட்ரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்கவேண்டும். அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்குக் குறைக்கலாம்.

நாற்றாங்கால் : நாற்றாங்காலுக்கு மேட்டுப் பாத்திகள் 1 மீட்டர் அகலமும், 3 மீ நீளமும், 15 செ.மீ உயரமும் கொண்டதாக இருக்கவேண்டும். ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ ஆழத்தில் 5-10 செ.மீ இடைவெளியில் வரிசையில் விதைக்கவேண்டும். விதைத்த பிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பவேண்டும். பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவும். விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிடவேண்டும்.
நாற்றாங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்றவேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு 250 கிராம் பியூராடன் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும்  இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். நடுவதற்கு 40 முதல் 44 நாட்கள் வயதுடைய நாற்றுக்களே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்குகுப்பை இட்டு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்கு பயிர் 30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். கோ 3 வகைகளுக்கு 30x15 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் : அடியுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். விதைத்த 70,100 மற்றும் 130வது நாள், நடவுப் பயிரில் நட்ட 30,60,90ம் நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் இடவேண்டும். உரம் இட்டபின் நீர்பாய்ச்சவேண்டும்.

நீர் நிர்வாகம்

கோடைக் காலங்களில் 7 நாட்களுக்கு ஒரு முறையும், மழைக்காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களைக்கட்டுப்பாடு : இறவைப் பயிர் நாற்றுக்கள் நட்ட 3வது நாள் எக்டருக்கு புளுகுளோரலின் ஒரு கிலோ மருந்து என்ற அளவில் 500 லிட்டர் நீரில் கலந்து சீராக கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும். நட்ட 45வது நாள் மண் ள அனைத்து ஒர கைக்கிளை எடுக்கவேண்டும்.

ஊடுபயிர் : மிளகாயில் 45 செ.மீ என்ற அளவில் வரிசைக்கு வரிசை இடைவெளி விட்டு ஊடுபயிராக கொத்தமல்லி அல்லது சின்ன வெங்காயத்தை இரு வரிசைக்கு மத்தியில் வளர்த்து களைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உபரி வருமானம் பெறலாம்.

பயிர் ஊக்கிகள் தெளித்தல் : பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100வது நாளில் ஒரு முறையம் மேலும் 30 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும் வளர்ச்சி ஊக்கி (என்ஏஏ) 10 மில்லி கிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மிலி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

காய்த் துளைப்பான் : காய் துளைப்பானின் இளம்புழுக்கள் மற்றும் வளர்ந்த பச்கை நிறப் புழுக்கள் இலைகள் மற்றும் காய்களை உண்டு சேதம் விளைவிக்கும். இதனைக் கட்டுப்படுத்த

  1. எக்டருக்கு குளோரிபைரிபாஸ் 20 இசி 3 மில்லி ஒரு தண்ணீர் அல்லது குயினால்பாஸ் 25இசி 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பரில் நனையும் தூள் மூன்று கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
  2. காய்ப்புழு தாக்கிய காய்களை சேகரிதது அழிக்கவேண்டும். மேலும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும்.
  3. இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
  4. கார்பரில் 1.25 கிலோ, அரிசி தவிடு 12.5 கிலோ, வெல்லம் 12.5 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் இவற்றை கலந்து விஷ உணவு தயாரித்து வைக்கவேண்டும்.

இலைப்பேன் : இவகைள் துளிர் இலைகளின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் மேல்நோக்கிச் சுருண்டு பழுப்பு நிறமாகிப் பின் உதிர்ந்துவிடும். பூ மொக்குகளும் உதிர்ந்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

அசுவினி : இவைகள், இலைகளின் அடிப்பகுதியிலும், தளிர் இலைகளிலும் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் காணப்படும். இதனால் இலைகள் கீழ்நோக்கிக் குவிந்து காணப்படும். மேலும் தேன் போன்ற கழிவுப்  பொருட்களை இவைகள் வெளியேற்றுவதால், எறும்புகள் அந்த இடங்களில் மொய்த்து ஒளிச்சேர்க்கைக்கு இலைகளின் பரப்பைக் குறைத்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது பாசலோன் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் சிலந்தி : தாக்கிய செடிகளில் இலைகள் கீழ் நோக்கிச் சுருண்டும், சொரசொரப்பாகவும் இலைக்காம்புகள் நீளமாகவும் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தூள் 6 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது டைக்கோபல் 3 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது எத்தியான் 4 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

நோய்கள்

நாற்றழுகல் நோய் : நாற்றாங்காலில் நாற்றுக்கள் மடிந்து சொட்டையாக இருக்கும். கட்டுப்பாட்டு முறைகளை நாற்றாங்கால் பகுதியில் காணவும்.

இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய்: இலைப்புள்ளி நோய் தாக்கிய செடிகளின் இலைகளில் செம்பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். அடிச்சாம்பல் நோய் தாக்கிய செடிகளின் இலைகளின் அடிப்பாகத்தில் சாம்பல் நிறப்பூசணம் காணப்படும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 25 கிலோ 500 லிட்டர் நீரிவ் கலந்த கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் தெளிக்கவேண்டும். அடிச்சாம்பல் நோய்க்கு நனையும் கந்தகத்தூள் 2 கிராம் அல்லது கார்பென்டாசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் நோய் கண்டவுடன் தெளிக்கவேண்டும்.

நுனிக்கருவில் மற்றும் பழ அழுகல் நோய் : நுனிக்கருகலும், பழ அழுகலும் ஒரே பூசணத்தால் ஏற்படுகிறது. நுனிக்கருகல் பாதித்த செடிகள் மேலிருந்து கீழகாகக் காய்ந்திருக்கும். பழ அழுகல்  நோய் தாக்கிய பழங்களில் செம்பழுப்பு நிறத்தில் வட்ட வடிவப் புள்ளிகள் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த, மேங்கோசெப் 1 கிலோ அல்லது தாமிர ஆக்சிகுளோரைடு 1.25 கிலோ இவற்றை 500 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

தேமல் நோய் : பாதிக்கப்பட்ட செடிகள் கரும்பச்சை மற்றும் மஞ்சள் திட்டுக்கள் உள்ள இலைகளுடன் வளர்ச்சி குன்றிக் காணப்படும். இந்நோய் பாதித்த செடிகளில் பூக்களோ, காய்களோ உண்டாகாமல் பெருத்த இழப்பை ஏற்படுத்தும். அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உபயோகப்படுத்தும் மருந்துகளையே இதற்கும் உபயோகித்து நோய் பரப்பும் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம். ஐந்து வரிசை மிளகாய் பயிருக்கு 2 வரிசை சோளம் அல்லது மக்காச்சோளம் பயிரிட்டால் நோய் தாக்குதலைக் குறைக்கலாம்.

அறுவடை

பச்சை மிளகாயை நட்ட 75 நாட்களிலும் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும், அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.

மகசூல்

ஒரு எக்டருக்கு

210 -240 நாட்களில்

வற்றல்

2-3 டன்

பச்சை மிளகாய்

10-15 டன்

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008