தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கூர்க்கன் கிழங்கு |
||||||||||||||||||||||||||||
சிறுகிழங்கு அல்லது கூர்க்கன் கிழங்கு
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் பூமி ஏற்றது. வெப்பம் மற்றும் மிதவெப்பப் பிரதேசம் சாகுபடிக்கு ஏற்றது. றிழலான இடத்தில் நன்கு வளரும். பருவம் : லை - ஆகஸ்ட்நிலம் தயாரித்தல் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் தொழு உரம் இட்டு, மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும். விதையும் விதைப்பும் 60 செ.மீ இடைவெளியில் நடுவதற்கு வரப்பு கட்டவேண்டும். முளைவிட்ட கிழங்குகளை மார்ச், ஏப்ரல் மாதங்களில் 20-30 செ.மீ இடைவெளிவிட்டு பாத்திகளில் நடவேண்டும். 30-40வது நாளில் கொடிகளைக் கிள்ளி எடுக்கவேண்டும். நாற்றாங்காலில் நிழல் தரம் வாழை போன்ற மரங்களை நடுவதுடன் இளஞ்செடியின் அடிப்பாகத்தில் காய்ந்த இலைகளைப் போடவேண்டும். செடிகள் முளைக்கும் வரை நீர் பாய்ச்சுதல் வேண்டும். ஆனால் நீர் தேங்கக்கூடாது. நடுவதற்கு இளந்தண்டுகள் ஒரு மாதத்தில் கிடைக்கும். இந்தத் தண்டுகளை 10 செ.மீ நீளத்தில் இரண்டு அல்லது மூன்று கணுக்கள் இருக்கும்படி எடுத்து நடவேண்டும். நீர் நிர்வாகம் நட்ட மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் விடவேண்டுமட். பின்பு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை நட்ட இரண்டு மாதங்கள் கழித்து எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
|
||||||||||||||||||||||||||||
Updated on : Jan 2016 | ||||||||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016 |