தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கருவேப்பிலை |
|||||||||||||||||||||||||
AESA சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை - கறிவேப்பிலை
நிலம் தயாரித்தல் நிலத்தினை நன்கு உழுது மண்ணைப் பண்படச்செய்தல் வேண்டும். கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் ஒரு எக்டருக்கு 20 டன் என்ற அளவில் இடவேண்டும். 1.2 முதல் 1.5 மீட்டர் இடைவெளியில் 30x30x30 செ.மீ என்ற அளவில் குழிகள் எடுத்து 2-3 மாதம் கழித்து நடவு செய்யவேண்டும். குழகளின் நடுவே ஒரு நாற்றினை நடவு செய்யவேண்டும்.
நீர் நிர்வாகம்: நடவு செய்தவுடன் தண்ணீர் பாசனம் செய்யவேண்டும். உயிா தண்ணீர் மூன்றாவது நாளும் அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்நேர்த்தி களையினை அவ்வப்போது நீக்கவேண்டும். நடவு செய்த முதலாம் ஆண்டில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். பயிர் பாதுகாப்பு எலுமிச்கைப் பயிரினைத் தாக்கும் புழுக்களை சேகரித்து அழித்துவிடவேண்டும் பின் மாலத்தியான் 1 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். செதில் பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1 மில்லி மருந்தினை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். இலைப்புள்ளி நோய் கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். மகசூல்
|
|||||||||||||||||||||||||
Last Update : January 2016 | |||||||||||||||||||||||||