தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கருவேப்பிலை |
|||||||||||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் சந்தை நிலவரம் |
||||||||||||
இரகங்கள் : செண்காம்பு, தார்வாடு 1 , தார்வாடு 2. மண் மற்றும தட்பவெப்பநிலை : சிறந்த வடிகால் வசதியுடைய செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. வெப்பநிலை 26 முதல் 27 வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். பருவம் மற்றும் நடவு பருவம் : ஜூலை - ஆகஸ்ட் மாதம் விதைகளை பறித்த 3-4 நாட்களில் பாலித்தீன் பைகளில் விதைக்கவேண்டும். ஒரு வயதுடைய நாற்றுக்கள் நடவுக்கு உகந்தவை. நிலம் தயாரித்தல் நிலத்தினை நன்கு உழுது மண்ணைப் பண்படச்செய்தல் வேண்டும். கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் ஒரு எக்டருக்கு 20 டன் என்ற அளவில் இடவேண்டும். 1.2 முதல் 1.5 மீட்டர் இடைவெளியில் 30x30x30 செ.மீ என்ற அளவில் குழிகள் எடுத்து 2-3 மாதம் கழித்து நடவு செய்யவேண்டும். குழகளின் நடுவே ஒரு நாற்றினை நடவு செய்யவேண்டும். நீர் நிர்வாகம்: நடவு செய்தவுடன் தண்ணீர் பாசனம் செய்யவேண்டும். உயிா தண்ணீர் மூன்றாவது நாளும் அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்நேர்த்தி களையினை அவ்வப்போது நீக்கவேண்டும். நடவு செய்த முதலாம் ஆண்டில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். பயிர் பாதுகாப்பு எலுமிச்கைப் பயிரினைத் தாக்கும் புழுக்களை சேகரித்து அழித்துவிடவேண்டும் பின் மாலத்தியான் 1 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். செதில் பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1 மில்லி மருந்தினை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். இலைப்புள்ளி நோய் கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். மகசூல்
|
|||||||||||||
மேலோட்டம் |
|||||||||||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
|||||||||||||
தேசிய இணையதளங்கள் |
|||||||||||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||||||||||
பழப்பயிர்கள் |
|||||||||||||