தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: ப்ரெஞ்சு அவரை வகைகள் |
||||||||||||||||||||||
முருங்கை அவரை வகைகள் : கேகேஎல் 1(கொடைக்கானல்), விதைகள் வெள்ளை நிறமாக இருக்கும். உள்ளூர் வகைகள் பழுப்பு நிற விதைகளைக் கொண்டிருக்கும். வெண்ணெய் அவரை : கேகேஎல் 1 (கொடைக்கானல்) விதைகள் வெள்ளை நிறமாக இருக்கும். உள்ளூர் வகைகளின் விதைகள் பழுப்பு நிறமாக இருக்கும். மண் : மண் மற்றும் தட்பவெப்பநிலை நல்ல வடிகால் வசதியுடன் குறுமண் இருத்தல்வேண்டும். கார அமிலத் தன்மையுள்ள நிலம் ஏற்றது, மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 வரை பொதுவாக அவரை வகைகளை மலைப் பகுதியில் சாகுபடி செய்ய நல்ல குளிர் பகுதியாக இருக்கவேண்டும். வெப்பநிலை 15 முதல் 25 டிகிரி சி வரை இருத்தல் இதன் வளர்ச்சிக்கு மிகவம் ஏற்றது. பருவம் : மிதமான வெப்பநிலை தேவைப்படுவதால் கொடைக்கானல் போன்ற மரலைப்பகுதிகளில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் விதைக்கலாம். கீழ் மலைப் பகுதியில் ஜீன் முதல் நவம்பர் வரையிலும் சாகுபடி செய்யலாம். பயிர் வளர்ச்சிப் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்திலும் பனி பெய்யக்கூடாது. அதே போன்று அதிக வெப்பமும் இருக்கக்கூடாது. விதையம் விதைப்பும் விதைஅளவு மற்றும் இடைவெளி மலைப்பகுதிகளுக்கு : ஒரு எக்டருக்கு 80 கிலோ விதைகள் . இடைவெளி : 30 x 15 செ.மீ சமவெளிப் பகுதிகளுக்கு : ஒரு எக்டருக்கு 50 கிலோ விதைகள் இடைவெளி : 45 x 30 செ.மீ விதை நேர்த்தி : விதைப்பதற்கு முன் விதைகளை 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைக்கவேண்டும். முதல் முறையாக நடவு செய்யும் போது ரைசோபியம் நுண்ணுயிர் கலந்து விதைக்கவேண்டும். நிலம் தயாரித்தல் நிலத்தை 3-4 முறை நன்கு உழவு செய்து கடைசி உழவின் போது எக்டருக்கு 20 டன் மக்கிய தொழு உரம் மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும். விதைப்பு சமவெளிப் பகுதிகளில் 50 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து பார்களின் ஒரு புற சரிவில் 30 செ.மீ இடைவெளியில் 2.3 செ.மீ ஆழத்தில் குத்துக்கு 3-4 விதைகள் விதைக்கவேண்டும். மலைப் பகுதிகளில் பாத்திகளில் விதைப்பு செய்யவேண்டும். பாத்திகளை மலைச்சரிவுக்கு குறுக்காக உருவாக்கவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உர அளவு : எக்டருக்கு தேவையான உர அளவு தழைச்சத்து 90 கிலோ மணிச்சத்து 125 கிலோ, சமவெளிப் பகுதிகளில் அடியுரமாக 62.5 கிலோ மணிச்சத்து இடவேண்டும். விதைகளை விதைக்கும் வரிசையிலிருந்து 6 செ.மீ கீழே பட்டையாகக் கோடு கிழித்து உரங்களை மண்ணுடன் கலந்து பின்பு விதைக்கவேண்டும்.
நீர் நிர்வாகம் விதை ஊன்றியவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியம். வாரத்திற்கு ஒரு முறை வெய்யில் காலத்தில் மட்டும் நீர்ப் பாய்ச்சவேண்டும். பயிருக்கு அதிக ஈரம் கெடுதல் விளைவிக்கும். பூக்கும் பருவத்திலும், காய்கள் முதிர்ச்சியடையும் தருணத்திலும் மண்ணின் ஈரத்தன்மை சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி பின்செய்நேர்த்தி : கொடி இரகங்களில் கொடி நடத் தொடங்கியவுடன் 5-6 அடி உயரமுள்ள குச்சிகளை நட்டு பொடியைப் படரச் செய்யவேண்டும். குத்து இரகங்களுக்கு இவ்வாறு குச்சி நடைவேண்டியதில்லை. விதைத்த 20-25 மற்றும் 40-45 நாட்கள் சென்ற பின்னர் களைக் கொத்து கொண்டு களை நீக்கம் செய்தபின்னர் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு அசுவினிப்பூச்சி்கள் : இப்பூச்சிகளின் பாதிப்பில் இலைகள் சுருண்டும், இளஞ்செடிகள் வளர்ச்சி குன்றியும் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு டைமீத்தோயேட் அல்லது மெட்டாசிஸ்டாக்ஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். சாம்பல் வண்டு : ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி கலந்து தெளிக்கவேண்டும். வெள்ளை ஈ : மெத்தைல் டெம்டான் (அ) டைமெத்தோயேட் (அ) பாஸ்போமிடான் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். காய்த்துளைப்பான் : இப்பூச்சிகள் காய்களில் துளையிட்டு மிகுந்த சேதத்தை விளைவிக்கும். இதனைக் கட்டுப்படுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து தெளிக்கவேண்டும். நோய்கள் துருநோய்: இந்நோய் விதை மற்றும் காய் மூலமாகப் பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட இலைகள் கரும்பழுப்பு நிறமாகவும், கொடி நிறமாகவும், கொடி நுனி கருகியும் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த கந்தகப் பவுடரை எக்டருக்கு 25 கிலோ தூவவேண்டும். சாம்பல் நோய் : இந்நோய் தாக்கிய இலைகளின் மேல் பாகத்தில் வெண்மையான பொடி தூவியது போன்ற வளர்ச்சி காணப்படும். காய்கள் முற்றாமல் பிஞ்சிலேயே சுருங்கிவிடும். இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் இரண்டு கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எக்டருக்கு 25 கிலோ கந்தகத்தைத் தூவவேண்டும். இலைப்புள்ளி நோய் : இதனைக்கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 மருந்தினை 1 லிட்டருக்கு இரண்டு கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அறுவடை பிரெஞ்சு அவரையில் விதைகள் சிறியதாக இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும். பூத்து இரண்டு அல்லது மூன்று வாரங்களில் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். அறுவடையைத் தள்ளிப்போட்டால் மகசூல் கூடினாலும், காய்களின் தரம் குறைந்துவிடும். மகசூல் : எக்டருக்கு விதைத்த 90-100 நாட்களில் எட்டு முதல் பத்து டன் காய்கள் கிடைக்கும். வெள்ளை ஈ : மெத்தைல் டெம்டான் (அ) டைமெத்தோயேட் (அ) பாஸ்போமிடான் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
|
||||||||||||||||||||||
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |