தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: ஜெர்கின் (அ) சீமை வெள்ளரி |
|
இரகங்கள் : ஹஃரட்ஸ் மண் : பொதுவாக ஜெர்கின் அனைத்துவித மண்வகைகளிலும் வளரும். குறிப்பாக வண்டல் மண் பகுதிகளில் கார அமிலத்தன்மை 6.0 முதல் 6.8 ஆக இருத்தல்வேண்டும். பருவம் : மிதமான வெப்பம் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். விதைஅளவு : ஒரு எக்டருக்கு 800 கிராம் விதைத்தேவை. விதைப்பு : முதலில் விதைகளை டைக்கோடெர்மா விரிடி 4 கிராம் (அ) சூடோமோனாஸ் 10 கிராம் (அ) கார்பென்டாசிம் 2 கிராம் / கிலோ விதை என்ற அளவில் நேர்த்தி செய்யவேண்டும். நிலம் தயாரித்தல் கடைசி உழவின் போது 25 டன் மக்கிய தொழு உரம் இட்டு 1 மீட்டர் இடைவெளியில் பார்சால் அமைக்கவேண்டும். ஊட்டச்சத்து நிர்வாகம் தழைச்சத்து 150 கிலோ மணிச்சத்து 75 கிலோ மற்றும் 100 கிலோ சாம்பல் சத்துக்களை மூன்று பங்காக பிரித்து அடிஉரம் நடவு செய்த மூன்றாவது மற்றும் ஐந்தாவது வாரத்தில் இடுதல்வேண்டும். பின்நேர்த்தி நடவுசெய்த 25வது நாளில் களை எடுத்து மண்ணாக்கவேண்டும். பயிர் வளர்ச்சிக்கேற்ப தட்டிகள் அமைத்த படரவிடவேண்டும். பயிர் பாதுகாப்பு வெள்ளை ஈ, அசுவனி மற்றும் இலைப்பேன் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1.5 மிலி / லிட்டர் (அஃ)மோனோகுரோட்டோபாஸ் 1.5 மில்லி (அ) மாலத்தியான் 1.5 மிலி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். சாம்பல் நோயினை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.05 சதவிகிதம் (0.5 கிராம் / லிட்டர்) தெளிக்கவேண்டும். மகசூல் விதைத்த 90வது நாளில் 10-12 டன் காய்களை ஒரு எக்டரிலிருந்து அறுவடை செய்யலாம்.
|
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024. |