வகைகள் : பூசா சார்பதி, ஹாரா மது, துர்காபுரா மது, அர்கர் ராஜான்ஸ் மற்றும் அர்கா ஜித்
மண் : அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது.
பருவம் : நவம்பர் முதல் பிப்ரவரி வரை எக்டருக்கு 3 கிலோ விதையை 4.0 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் அல்லது கார்பன்டிசம் எக்டருக்கு 2 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்த பின்பு 0.6 மீ இடைவெளியில் நட வேண்டும்.
நிலத்தை தயார் செய்தல்:
நிலத்தை நன்கு உழுது பதப்படுத்தி 2.5 மீ அளவிற்கு வாய்க்கால் அமைக்கவும்.
நீர்பாசனம்:
விதை ஊன்றுவதற்கு முன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும்.
உரப் பயன்பாடு:
எக்டருக்கு 20 டன் தொழுவுரம் அளிக்கவும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 40:60:30 கிகி அடியுரமாக அளிக்கவும் மற்றும் நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு எக்டருக்கு 40 கிகி நைட்ரஜன் அளிக்க வேண்டும். எக்டருக்கு 2 கிகி அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் கடைசி உழவிற்குப் பிறகு எக்டருக்கு 2.5 கிகி சூடோமோனஸ் அதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் 100 கிகி வேப்பம்பிண்ணாக்கு அளிக்க வேண்டும்.
நாற்றங்கால் தயாரிப்பு:
முலாம்பழம் நாற்றங்கால் 200 அளவு, 10 செமீ விட்டம் மற்றும் 15 செமீ உயரம் கொண்டு பாலித்தீன் பைகளில் தயாரிக்கலாம் அல்லது குழித்தட்டுகளை உபயோகிக்கலாம். 12 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை விளைநிலங்களில் பிடுங்கி நட வேண்டும்.
சொட்டுநீர்ப் பாசனம்:
சொட்டு நீர் பாசனத்தை அமைக்க முக்கிய குழாய்களை பொறுத்தவும் மற்றும் உள்வரிசை பக்கவாட்டுக் குழாய்களை 1.5 மீ இடைவெளியில் பொறுத்த வேண்டும். பக்கவாட்டு சொட்டு நீர் குழாய்களை 60 செ.மீ மற்றும் 50 செ.மீ இடைவெளி விட்டு முறையே மணிக்கு 4 மற்றும் 3.5 லிட்டர் திறன் கொண்ட குழாய்களைப் பதிக்க வேண்டும்.
விதைப்பு:
மேட்டுப்பாத்தி ஒற்றை வரிசை முறையில் எக்டருக்கு 23,334 நாற்றுக்கள் தேவைப்படும். இதனை உற்பத்தி செய்ய 250 குழித் தட்டுகள் தேவைப்படும். 120 செ.மீ அகலத்தில் மற்றும் 30 செ.மீ இடைவெளியில் பாத்திகள் அமைத்து பக்கவாட்டுக் குழாய்களை நடுவில் வைக்க வேண்டும். நேரடி விதைப்பு (அ) நாற்று நடுதல் 1.5 மீ இடைவெளியில் பக்கவாட்டு குழாய் இடைவெளியுடன் 30 செ.மீ இடைவெளியில் மேட்டுப்பாத்தியில் ஒற்றைவரி முறையில், கயிற்றைக் கொண்டு 30 செ.மீ இடைவெளியில் குறியிட்டு விதைக்க வேண்டும்.
உரப்பாசனம்:
எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 200:100:100 கிலோ பயிர் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
உரப்பாசன அட்டவணை:
பரிந்துரைக்கப்பட்ட அளவு : எக்டருக்கு 200:100:100 கிகி
வ. எண் |
பயிர் பருவம் |
கால அளவு நாட்கள் |
உரத் தரம் |
மொத்த உரம் (கிகி/எக்டர்) |
வழங்கப்பட்ட ஊட்டச்சத்து |
தேவைப்படும் சதவீதம் |
|
|
|
|
|
N |
P |
K |
N |
P |
K |
1. |
பயிர் முளையிடும் பருவம் |
10 |
19:19:19 +நுண்ணூட்டச்சத்து
13-0-45 யூரியா |
26.81
11.00
13.35 |
5.00
1.43
13.35 |
5.00
-
- |
5.00
4.95
- |
10.00 |
5.00 |
10.00 |
உப மொத்தம் |
19.78 |
5.00 |
9.95 |
|
|
|
2. |
வளர்ச்சிப் பருவம் |
30 |
12-61-0
13-0-45
யூரியா |
12.28
66.00
109.00 |
1.47
8.58
50.14 |
7.49
-
- |
-
29.70
- |
30.00 |
7.50 |
30.00 |
|
|
|
|
உப மொத்தம் |
60.19 |
7.49 |
29.70 |
|
|
|
3. |
பூக்கும் பருவம் |
30 |
12-61-0
13-0-45
யூரியா |
12.28
44.00
115.00 |
1.47
5.72
52.90 |
7.49
-
- |
-
19.80
- |
30.00 |
7.50 |
20.00 |
|
|
|
|
உப மொத்தம் |
60.09 |
7.49 |
19.80 |
|
|
|
4. |
அறுவடை பருவம் |
45 |
19:19:19 + நுண்ணூட்டச்சத்து
13-0-45 யூரியா |
26.31
78.00
97.52 |
5.00
10.14
44.86 |
5.00
-
- |
5.00
35.10
- |
30.00 |
5.00 |
40.00 |
|
மொத்த கால அளவு |
115 |
|
உப மொத்தம் |
60.00 |
5.00 |
40.10 |
|
|
|
மொத்தம் |
200.06 |
24.98 (அ) 25.00 |
99.35 (அ)
100.00 |
100 |
25 |
100 |
*75% பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்தானது சூப்பர் பாஸ்டே்டாக அளிக்கப்படுகிறது = 75 x 6.25 = 469 கிகி/எக்டர்.
1. 19:19:19 = 53 கிகி/எக்டர்
2. 13:0:45 = 199 கிகி/எக்டர்
3. 12:61:0 = 25 கிகி/எக்டர்
4. யூரியா = 351 கிகி/எக்டர்
பின்செய் நேர்த்தி : மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
நோய்கள்
- பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
- ஈக்களின் எண்ணிக்கை வெப்ப காலத்தில் குறைவாகவும் மழை காலத்தில் அதிகமாகவும் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் விதைப்பு நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
- உழுவதன் மூலம் பூச்சிக் கூடுகளை வெளிக்கொண்டு வரலாம்.
- மீன் உணவு பொறியை பயன்படுத்தவும். (5 கிராம் ஈரமான மீன் உணவு + பருத்தியில் நனைக்கப்பட்ட1 மிலி டைக்லோர்வாஸ்). மொத்தமாக எக்டருக்கு 50 பொறிகள் தேவைப்படும், மீன் உணவு + பருத்தியில் நனைக்கப்பட்ட டைக்லோர்வாஸ் 20 மற்றும் 7 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
- வேப்ப எண்ணெய் @3.0 சதவிகிதம் இலைத் தெளிப்பாக தேவையிருப்பின் தெளிக்கலாம்.
தாமிர மற்றும் கந்தகத் தூளை பயன்படுத்தக் கூடாது. இவை தாவர நச்சுக்கள்.
வெள்ளை ஈ : வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதவிகிதம் தெளிக்கவும்.
மகசூல் : 120 நாட்களில் எக்டருக்கு 20 டன் கிடைக்கும்.
|