தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: பஜ்ஜி மிளகாய் |
|
இரகங்கள் : கேடிபிஎல் - 19 மற்றும் அர்கா அபிர் மண் : நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. களிமண் வகைகளில் சாகுபடி செய்தல் கூடாது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5-7.0 இருத்தல்வேண்டும். பருவம் : ஜூன் - ஜூலை விதையளவு : ஒரு எக்டருக்கு 500 கிராம் இடைவெளி : 60x45 செ.மீ நாற்றாங்கால் 10-12 உயரப்பாத்திகள் 7 மீட்டர் நீளம், 1.2 மீட்டர் அகலம் மற்றும் 15 செ.மீ உயரம் என்ற அளவில் தயார் செய்யவேண்டும். விதைகளை 10 செ.மீ இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்கவேண்டும். ஒவ்வொரு பாத்திகளுக்கும் மக்கிய உரங்கள் 10-12 கிலோ, 500 கிராம் 15:15:15 தழை,மணி, சாம்பல் சத்துக்கலவை கொண்ட உரத்தினை விதைப்பதற்கு 15-20 நாட்கள் முன்னர் இடவேண்டும். நடவு தேர்ச்சியான நாற்றுக்களை 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும். ஊட்டசத்து நிர்வாகம் மக்கிய தொழு உரம் ஒரு எக்டருக்கு 20-25 டன் 60,100 மற்றும் 60 கிலோ தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக் கொண்ட உரத்தினை அடிஉரமாக இடவேண்டும். நடவு செய்த மூன்றாவது வாரத்தில் 20 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மேலும் நடவு செய்த ஆறுவாரங்களில் தழைச்சத்து, 40 கிலோ மற்றும் மணிச்சத்து 40 கிலோ இடவேண்டும். பயிர் பாதுகாப்பு ஆந்திரகனோஸ் : மேங்கோசிப் 2 மில்லி / லிட்டர் தெளித்து கட்டுப்படுத்தலாம். சாம்பல் நோய் : நனையும் கந்தகம் 0.3 சதவிகிதம் தெளிக்கவும். மகசூல் : 25-35 டன் / எக்டர்
|
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |