தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: உருளைக் கிழங்கு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் சந்தை நிலவரம் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் : குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர் மற்றும் குப்ரி சோகா, குப்ரி கிரிராஜ். மண் மற்றும் தட்பவெப்பநிலை : உருளைக்கிழங்கை வளமுள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. மிகுதியான நிறமக்கு நிறைந்த இருபொறை நிலங்கள் ஏற்றவை. களிமண் பூமியைத் தவிர்க்கவேண்டும். வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. குளரி மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 4.8 முதல் 5.4 வரை ஒர் ஆண்டிற்கு 1200 முதல் 2000 மில்லி மீட்டர் வரை மழை பெறும் பகுதிகளில் இதனைப் பயிரிடலாம். நடவு செய்யும் பருவம்
நிலம் தயாரித்தல் நிலத்தை நன்றாகக் கொத்தி, பண்படுத்தி 45 செ.மீ இடைவெளியில் பார் பிடிக்கவேண்டும். மலைப் பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கி சாய்ந்தவாறு சாய்வுத்தளம் அமைக்கவேண்டும். வடிகாலுக்கு வாய்க்கால்கள் அமைக்கவும். விதையும் விதைப்பும் விதைத்தல் : எக்டருக்கு 3000-3500 கிலோ கிழங்குகள் உருளைக் கிழங்கு சாகுபடியில் விதைத் தயாரிப்பு முக்கியமாக கவனிக்கவேண்டும். புதிய கிழங்குகள் முளைக்காது, ஆகவே முளைப்புத் தன்மையை ஏற்படுத்த கார்பன்-டை-சல்பைடு என்னும் மருந்தை 100 கிலோ கிழங்குக்கு 30 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவேண்டும். கிழங்கு களை குவியலாக்கி குவியலின் மேல் ஒரு அகன்ற தட்டில் மருந்தை ஊற்றி பாலித்தீன் தாளினால் மூடிவிடவேண்டும். கிழங்குகளில் முளை வந்தவுடன், நடவுக்குப் பயன்படுத்தவேண்டும். நிலத்தின் சாய்தளத்தைப் பொறுத்து செடிக்கு செடி 15-20 செ.மீ இடைவெளியில் முளைவந்த கிழங்குகளை நடவேண்டும். நீர் நிர்வாகம் நடவுக்குப் பின்னர் 10 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ஒரு எக்டருக்கு அடியுரமாக 15 டன் மக்கிய தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம், 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இராசயன் உரங்களை அடியுரமாக இடவேண்டும். இதனுடன் எக்டருக்கு 60 கிலோ மக்னீசியம் சல்பேட்டையும் அடியுரமாக இடவேண்டும். பிறகு விதைத்த 30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை மேலுரமாக இட்டு மண் அணைக்கவேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி களைக்கட்டுப்பாடு : களைகள் முளைத்த பிறகு எக்டருக்கு 2.5 லிட்டர் கிராமாக்சோன் களைக்கொல்லி மருந்த தெளிப்பதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தலாம். உருளைக்கிழங்கில் விதை விதைத்த 60 நாட்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். விதைத்த 45வது மற்றும் 60வது நாளில் களை எடுத்து மண் அணைக்கவேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வெட்டுப்புழுக்கள் : இது உருளைக்கிழங்குப் பயிரில் 5 முதல் 10 சதம் வரை சேதத்தை ஏற்படுத்தும். இப்புழுக்கள் எல்லாப் பருவத்திலும் தோன்றும். இப்புழு கிழங்குகளில் துளைபோட்டு மாவுப் பகுதியை உண்கிறது. இதனால் தாக்கப்பட்ட கிழங்கில் பெரிய குழிகள் உண்டாகி, நாளடைவில் கிழங்கு அழுகிவிடும். கட்டுப்பாட்டு முறைகள்
அசுவினிப்பூக்கள் : கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது டைமீத்தோயேட் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். நூற்புழுக்கள் : உருளைக்கிழங்கில் நூற்புழுவின் தாக்குதலைத் தவிர்க்க கீழ்க்கண்ட முறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.
நோய்கள் : உருளைக்கிழங்கில் முன் இலைக்கருகல், பின் இலைக்கருகல், பழுப்பு நிற அழுகல், உருளைக்கிழங்கு வைரஸ் மற்றும் இலைச்சுருள் வைரஸ் போன்றவை முக்கியமான நோய்களாகும். உருளைக்கிழங்கு அந்துப்பூச்சி : புதிய கிழங்குகளை நடவு செய்யும் போது நன்கு ஆழமாக நடுதல் வேண்டும். மேலும் தாய் அந்துப்பூச்சிகளை இனக்கவர்ச்சி கொண்டு கவர்ந்து அழிக்கலாம். இலையில் ஏற்படும் சேதாரங்களைத் தடுக்க வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் (அ) குயினால்பாஸ் 2 மில்லியினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். நடவுக்கு பயன்படுத்தப்படும் விதைக் கிழங்கினைக குயினால்பாஸ் (அ) எண்டோசல்பான் தூள் ஒரு கிலோவினை 100 கிலோ கிழங்கு என்ற அளவில் கலந்து நடவு செய்யவேண்டும்.
முன் இலைக்கருகல் (பூசண நோய்) : கிழங்கை நடவு செய்த பின் மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குப் பின் இந்நோய் தொன்றுகிறது. இலைகளில் வெளிர் பழுப்பு நிறமடைய புள்ளிகள் தோன்றும். பின்பு இப்புள்ளிகளில் வட்டவடிவமான வளையங்கள் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும். இந்நோய் மண்மூலம் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த பயிர்ச்சுழற்சி செய்வதோடு தோட்டத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். நோய் தாக்கி காய்ந்து போன இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். நடவு செய்த 45,68 மற்றும் 75 வது நாட்களில் மான்கோசெப் அல்லது குளோரோதலோனின் என்ற மருந்தை எக்டருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். பின் இலைக்கருகல் : உருளைக்கிழங்கில் தோன்றக்கூடிய அனைத்து நோய்களிலும் மிக முக்கியமானது பின் இலைக்கருகல் நோயாகும். சிறிய பழுப்பு நிறமுடைய நீர் கசியும் புள்ளிகள் இலைகளில் தோன்றுவது இந்நோயின் முதல் அறிகுறியாகும். மழையும் வெயிலிலும் மாறிமாறி இருக்கும்போது இப்புள்ளிகள் கருப்பு நிறமாக மாறி, இலைகள் அழுகிவிடும். பாதிக்கப்பட்ட இலைகளின் பின்புறத்தில் இப்பூசணம் வெள்ளை நிறத்தில் காணப்படும். இப்பூசணம் கிழங்குகளையும் தாக்குகின்றது. நோய் தாக்கப்பட்ட கிழங்கின் மூலம் இந்நோய் பரவுகிறது. எனவே இந்நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்காத கிழங்கை நடவுசெய்யவேண்டும். தரையுடன் மூடிய படர் கிளைகளை நீக்கவேண்டும். நோய் தாக்கி கீழே விழுந்த இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். முன் இலைக்கருகலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் மான்கோசெப் அல்லது குளோரோதலோனில் என்ற மருந்தை எக்டருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தல் நீரில் கலந்து நடவு செய்த 45,68 மற்றும் 75வது நாட்களில் தெளிக்கவேண்டும். இந்நோய்க்கு எதிர்ப்பத் திற்ன கொண்ட குப்ரிஜோதி, குப்ரிமலர் மற்றும் குப்ரிதங்கம் ஆகிய இரகங்களைப் பயிரிடவேண்டும். பழுப்புநிற அழுகல் (பாக்டீரியா) நோய் : இளஞ்செடிகள் உடனடியாக வாடுவதும், இலைகள் பழுப்புநிறமடைந்து தளர்ச்சியுற்றுத் தொங்குவதும் இந்நோயின் அறிகுறிகளாகும். நோய் முற்றிய நிலையில் செடிகள் வாடிக் காய்ந்துவிடும். தண்டின் உட்பகுதியில் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறிவிடும். நோய் தாக்கப்பட்ட கிழங்கை வெட்டிப் பார்க்கும் போது கிழங்கின் ஓரத்தில் பழுப்பு நிறமுடைய வளையம் காணப்படும். இதனைத் தொடர்ந்து இக்கிழங்குகள் அழுகிவிடும். வடிகால் வசதி இல்லாத இடங்களில் இந்நோயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பயிர்சுழற்சியைக் கடைப்பிடிக்கவேண்டும். நோய் தாக்காத கிழங்கை நடவு செய்ய வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழித்துவிடவேண்டும். வைரஸ் நோய்கள் மொசைக் நோய் : மொசைக் என்பது ஒரு வகையான வைரஸ் நோய் ஆகும். இந்நோயின் அறிகுறிகளாக இலையில் பச்சையத்திற்கு இடையே மஞ்சள் நிறக் கோடுகள் மற்றும் மஞ்சள் நிறத் திட்டுக்கள் காணப்படும். இதில் பாதிக்கப்பட்ட செடி மற்ற செடிகளுடன் உரசும் போது உருளைக்கிழங்கு வைரஸ் அசுவினி மூலம் பரவுகிறது. இலைச்சுருள் நோய் : இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மேல்நோக்கிச் சுருண்டுவிடும். பாதிக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குன்றி வெளரி நிறமாகத் தோன்றும். இந்த வைரசும் அசுவினி மூலம் பரவுகிறது. வைரஸ் நோய்களை கட்டுப்படுத்த வைரஸ் தாக்காத செடிகளிலிருந்து கிழங்கு எடுத்து அதை நடவு செய்யவேண்டும். தேவையறிந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து அசுவினியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம். அறுவடை கிழங்குகள் நன்கு முற்றி தடித்திருக்கும் போது தோண்டி எடுத்தால் சேதம் குறையும். பின்பு கிழங்குகளை இராசி, பெரிய பொடி, வந்தபொடி மற்றும் தள்ளு என்னும் நான்கு விதங்களாக தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பவேண்டும். மகசூல் : எக்டருக்கு 120 நாட்களில் 15-20 டன் கிழங்குகள்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேலோட்டம் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசிய இணையதளங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பழப்பயிர்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||