தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் ::பீர்க்கன்
பீர்க்கன் பீர்க்கையில் சொட்டுநீர் பாசனம் பந்தல் சாகுபடி பீர்க்கை சாகுபடி பிளாஸ்டிக் தழைக்கூளம்

வகைகள் :
கோ 1, கோ 2, பி.கே.எம் 1.
மண்:
அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது.
பருவம்:
நாற்று ஜ%லை மற்றும் ஜனவரி மாதங்களில் படர்கிறது
விதை அளவு:
எக்டருக்கு 1.5 கிகி விதை தேவைப்படுகிறது
விதை நேர்த்தி:
டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 10 கி/கிகி விதைகள் கொண்டு விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

RIDGE GOURD-BLACK POLYTHENE MULCH RIDGE GOURD-PANDAL SYSTEM
பிளாஸ்டிக் தழைக்கூளம் பந்தல் சாகுபடி
நிலத்தை தயார் செய்தல்:
நிலத்தை நன்கு உழ வேண்டும். 30 செ.மீ x 30 செ.மீ x 30 செ.மீ அளவு 2.5 x 2 மீ இடைவெளி விட்டு குழிகள் எடுக்க வேண்டும்.
விதைத்தல்:
குழிக்கு 5 விதை என்ற அளவில் விதைக்க வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குப் பிறகு குழிக்கு இரண்டு நாற்றுகளை வைக்கவும்.
பாசனம்:
விதை ஊன்றுவதற்கு முன் குழிகளில் நீர் விட வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.
உரமிடுதல்:
10 கிகி தொழுவுரம் அளிக்கவும். 100 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 6:12:12 என்ற கலவையில் அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் அளிக்க வேண்டும் மற்றும் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு குழிக்கு 10 கிராம் என்ற அளவில் அளிக்கவும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா எக்டருக்கு 2 கிகி, சூடோமோனாஸ் எக்டருக்கு 2.5 கிகி இதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிராம் உழுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
சொட்டு நீர் பாசனம்:
சொட்டு நீர் பாசனம் அமைக்க முக்கிய மற்றும் கிளை குழாய்கள் அமைக்கவும் மற்றும் 1.5 மீ இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கவும். பக்கவாட்டு சொட்டு நீர் குழாய்களை 60 செ.மீ மற்றும் 50 செ.மீ இடைவெளி விட்டு முறையே மணிக்கு 4 மற்றும் 3.5 லிட்டர் திறன் கொண்ட குழாய்களைப் பதிக்க வேண்டும்.
விதைத்தல்:
45 x 45 x 45 செ.மீ அளவில் 2 மீ இடைவெளி மற்றும் 1.5 மீ வரிசை இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிக்கு மூன்று விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். முளைவந்த பிறகு ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டு மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும். நேரடி விதைப்பிற்கு பதிலாக, விதைகள் பாலீத்தின் பைகளில் விதைக்கபட்டு ஒரு பைக்கு 2 விதைகள் என்ற அளவில் விதைக்கவும் மற்றும் முளைவந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும்.
உரப்பாசனம்:
எக்டருக்கு 250:100:100 கிகி என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை பயிர் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

உரப்பாசன அட்டவணை - பீர்க்கன் (கலப்பினம்)
பரிந்துரைக்கப்பட்ட அளவு : 250:100:100 கிகி / எக்டர்

வ. எண் பயிர் பருவம் கால அளவு நாட்கள் உரத் தரம் மொத்த உரம் (கிகி/எக்டர்) வழங்கப்பட்ட ஊட்டச்சத்து தேவைப்படும் சதவீதம்
          தழை மணி சாம்பல் தழை மணி சாம்பல்
1. பயிர் முளையிடும் பருவம் 10 12-61-0
13-0-45 யூரியா
32.79
22.00
39.49
3.93
2.87
18.20
5.00
-
-
-
10.00
-
10.00 5.00 10.00
உப மொத்தம் 25.00 5.00 10.00      
2. வளர்ச்சிப் பருவம் 30 19:19:19 + நுண்ணூட்டச்சத்து
யூரியா
157.89
97.67
29.99
45.00
-
7.50
-
-
-
29.99
-
30.00 7.50 30.00
        மொத்தம் 74.99 7.50 29.99      
3. பூக்கும் பருவம் 30 12-61-0
13-0-45
யூரியா
49.17
44.00
137.52
5.91
5.72
63.84
7.50
-
-
-
20.00
-
30.00 7.50 20.00
        மொத்தம் 75.47 7.50 20.00      
4. அறுவடை பருவம் 60 12-61-0
13-0-45 யூரியா
32.79
88.00
129.39
3.93
11.44
59.63
5.00
-
-
-
40.00
-
30.00 5.00 40.00
  மொத்த கால அளவு 120   மொத்தம் 75.00 5.00 40.00      
மொத்தம் 250.46 (அ)
250.00
25.00 99.99 (அ)
100.00
100 25 100

*பரிந்துரைக்கப்பட்ட 75 சதவிகித மணிச்சத்தானது சூப்பர் பாஸ்பேட்டாக எக்டருக்கு 469 கிகி அளிக்கவும்

  1. 19:19:19 = 158 கிகி / எக்டர்
  2. 13:0:45 = 154 கிகி / எக்டர்
  3. 12:61:0 = கிகி / எக்டர்
  4. யூரியா = 405 கிகி / எக்டர்

பின்செய் நேர்த்தி:
களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும். 2 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய தாவரத்திற்கு தாங்கிகளை அமைக்க வேண்டும். விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு எத்தரால் 250 பி.பி.எம் (2.5 மிலி /10 லி நீர்) வார இடைவெளியில் நான்கு முறை அளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
நோய்கள்:
வண்டுகள், பழ ஈக்கள் மற்றும் புழுக்கள:  
டைக்ளோர்வோஸ் 76% ஈ.சி 6.5 மிலி/10லி அல்லது டிரைகுளோரோபன் 50% ஈ.சி 1.0 மிலி/லி தெளிக்கவும்.
லின்டேன் 1.3 சதவிகிதம் தூள், தாமிரம் மற்றும் கந்தகத் தூள் ஆகியவை தாவர நச்சுத்தன்மை கொண்டவை.
நோய்கள்:
சாம்பல் நோய்:
டைனோகேப் 1 மிலி/லி அல்லது கார்பன்டாசிம் 0.5 கி /லி தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அடிச்சாம்பல் நோய்:
மேன்கோசெப் அல்லது குளோரோதாலோனில் 2 கி/லி 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.
மகசூல்:
சராசரி மகசூல் எக்டருக்கு 14 -15 டன் ஆகும்.
சந்தை நிலவரம்:

பயிர் விளையும் மாவட்டங்கள் ஈரோடு, கோயமுத்தூர், திருப்பூர்,
தமிழ்நாட்டில் முக்கிய சந்தைகள் பெரியார் காய்கறி சந்தை, கோயம்மேடு, சென்னை, காந்தி சந்தை, ஒட்டன்சத்திரம், நட்சிபாளையம் காய்கறி சந்தை, கோயமுத்தூர்