||| | | | | |
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: காய்கறி தட்டைப்பயிறு
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : கோ 2, விபிஎன் (வம்பன்)2, அர்கா கோமல் மற்றும் அர்கா கரிமா

மண் : வடிகால் வசரியுடைய அங்கக சத்து நிறைந்த மண் வகைகள் சாகுபடிக்கு சிறந்தவை.

பருவம்

இறவைப்பயிர் : பிப்ரவரி - மார்ச்
மானாவாரிப் பயிர் : ஜூன் - ஜூலை

விதையளவு மற்றும் விதைநேர்த்தி

விதையளவு

ஒரு எக்டருக்கு 20 கிலோ விதை ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவையுடன் கலந்து பார்களின் இருபக்கங்களிலும் விதைக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல் : நிலத்தை நன்கு உழுது மண்ணை பண்படசெய்தல் வேண்டும். பின் 45 செ.மீ இடைவெளியில் பார்சால்கள் அமைக்கவேண்டும் (அ) தேவைக்கேற்ப பாத்திகள் அமைக்கவேண்டும்.

இடைவெளி : 45 x 15 செ.மீ

நீர் நிர்வாகம் : நடவு  செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின் உயிர் நீராக நடவு செய்த மூன்றாவது நாளும், அதன் பின்னர் ஒரு வார இடைவெளியில் நீர்ப்பாசனம்  செய்யவேண்டும்.

ஊட்டச்சத்து நிர்வாகம்

இறவைப்பயிருக்கு ஒரு எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போபேக்டீரியா, 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து இடவேண்டும். மானாவாரிப் பயிருக்கு ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து இடவேண்டும்.

பின்நேர்த்தி

விதைத்த 25வது நாளில் களை எடுக்கவேண்டும்.

பயிர் பாதுகாப்பு

அசுவினிப் பூச்சி

இதனைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 30 ஈசி 1 மிலி (அ) மீதைல் டெமட்டான் 25 ஈசி 1 மிலி என்ற அளவினை தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

காய்த் துளைப்பான்

எண்டோசல்பான் 25 ஈசி 2 மிலி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நோய்

சாம்பல் நோய்

ஒரு எக்டருக்கு 25 கிலோ கந்தகம் (அ) ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் நனையும் கந்தகம் தெளிக்கவேண்டும்.

மகசூல்

விதைத்த 75 முதல் 90வது நாளில் இறவைப்பயிரில் 5000 கிலோ மகசூலும் மற்றும் மானாவாரிப் பயிர்களில் 2500 கிலோவும் அறுவடை செய்யலாம்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008