தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: மா |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் வீரிய ஒட்டு இரகங்கள்: பெரியகுளம் 1, பெரியகுளம் 2, தர்னா, மல்லிகா, அம்பராபாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து, சேலம் பெங்களூர்.
மண்ணும் தட்பவெப்ப நிலையும்:
நிலம் தயாரித்தல் விதையும் விதைப்பும் செடிகள் நடுதல்: ஒட்டுக்களை குழிகளின் மத்தியில் நடவேண்டும்.
நீர் நிர்வாகம் நீர்ப்பாசனம்: செடிகள் நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப்பாய்ச்சவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
மேற்படி உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். உரங்களை நன்கு கலந்த பின் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப்பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு, பின் அவற்றை மூடி நீர்ப்பாய்ச்ச வேண்டும். களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல் பிப்ரவரி மாதத்தில், பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் ( 5 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் ( 10 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) கரைசல் தெளிக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு தெளிக்கும் காலம்: மரம் பூ பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவேண்டும்.
அசுவினி செதில் பூச்சி: இவற்றைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் அல்லது மெதைல் டெமட்டான் மருந்துகளில் ஏதாவது ஒன்றை 2 மில்லி ஒரு லிட்டர் நீர் விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
பூங்கொத்துப்புழு: இவை பூ பூக்கும் தருணத்தில் பூங்கொத்துக்களல் கூடுபொல கட்டிக்கொண்ட பூ மொட்டுக்களைத் தின்று சேதப்படுத்துதல். கட்டுப்பாடு: பாசலோன் 2 மில்லி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
தண்டு துளைப்பான் : வண்டுக்ள மரத்தின் மேல் பட்டைகளில் முட்டையிட்டு, முட்டைகள் புழுவாக மாறி, பட்டையின் உட்பாகத்தை துளைத்துத் தின்னும், இதனால் கிளைகளும், சில நேரம் முழுமரமும் வாடி பின்பு காய்ந்து விடும்.
கட்டுப்பாடு
பழ ஈ : பழ ஈக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஈ தாக்கப்பட்ட பழங்களின் மேல் வெளிறிய மஞ்சள் நிற புள்ளகிள் தெரியும். அதன் நடுப்பகுதியில் கறுப்பான புள்ளி தெரியும். பழத்தை அழுத்தும்போது அதிலிருந்து ஒரு திரவம் வெளிவரும்.
கோடை உழவு செய்து மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்களை மண்ணின் மேல் பகுதிக்குக் கொண்டு வருவதால் அவை சூரிய வெளிச்சத்தில் அழிந்துவிடும். மெதைல் யூஜனால் ஒரு மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து அதனுடன் மாலத்தியான ஒரு மில்லியைக் கலந்து மொத்த கலவையில் 100 மில்லி எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு எக்டருக்கு 25 இடங்களில் வைக்கவேண்டும். இந்த திரவத்தினால் பூச்சிகள் கவரப்படும். பின்பு அவற்றை சேகரித்து அழிக்கவேண்டும். நோய்கள் சாம்பல் நோய்: இதனைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
இலைப்புள்ளி: மாங்கோசெப் 2 கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பென்டாசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது க்ளோரோதலேனில் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அறுவடை செய்வதற்குமுன் பதினைந்து நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். கரும்பூஞ்சாண நோய்: இலைகளின் மேற்பரப்பில் கருமையான படலம் தோன்றி, இலைகள் கருப்பாகத் தென்படும். கட்டுப்படுத்துதல் : பாஸ்போமிடான் 2 மிலி, ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் 5 சதம் மைதா தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஐந்து சதம் மைதா கலவை தயார் செய்தல்: ஒரு கிலோ மைதாவை 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதிலிருந்து ஒவ்வொரு லிட்டர் எடுத்து, 4 லிட்டர் தண்ணீர் கலந்து இலைகளில் நன்கு படும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அறுவடை
அறுவடையின் நேர்த்தி
அறுவடை செய்த உடன் பழங்களை 52±1 செல்சியஸ் வெப்பமுள்ள சுடுநீரில் 5 நிமிடம் நனைத்து எடுக்கவேண்டும். பின்பு 8 சதவீதம் தாவர மெழுகில் (வேக்சால் (அ) ஃபுரூட்டாஸ்) நனைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பழங்களில் ஆந்தரகனோஸ் நோய் தாக்கதவாறு பாதுகாக்கலாம். மேலும் அறுவடைக்கு முன்னர் 0.20 சதவிகிதம் மாங்கோசிப் (2.0 கி / லிட்டர்) மருந்தினை தெளித்து நோய் தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |