|
எலுமிச்சையில் சாம்பல்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
-
வளர்ச்சி மெதுவாக இருக்கும். மலர்ச்சியடையும் சமயத்தில் இலைகள் உதிர்ந்துவிடும்
-
புதிய தண்டுகள் கொம்புகளில் மோசமாக இணைந்திருக்கும்
-
இலைகள் சிறியதாகவும், கொம்புகளின் முனைகள் காய்ந்தும், இலையின் முனைகள் பொசுங்கியும், சிறிய பழுப்பு நிறத்தில் பசை போன்ற புள்ளிகளும் இலையின் மேல் தோன்றும்
-
சிறிய சுருக்கக் கோடுடைய புள்ளிகள் இலையில் காணப்படும்
-
பழங்கள் சிறுத்தும், தோல் மிகவும் மெல்லியதாகவும் இருக்கும்
-
ஆழ்ந்த செம்மஞ்சள் நிறத்தில் இலைகள் சுருண்டும், சுருங்கியும், கொம்புகள் சுழன்றும் காணப்படும்
நிவர்த்தி :
- பொட்டாசியம் நைட்ரேட் 2% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
- 200 கிராம் தழைச்சத்து, 100 கிராம் மணிச்சத்துமற்றும் 200 கிராம் சாம்பல்சத்து / மரம்/ வருடம் என்ற அளவில் பயன்படுத்தவும்.
|