தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வாழை

 

மெக்னீசியம் சத்து பற்றாக்குறை :

அறிகுறிகள் :

அடி இலைகளிள் நடு நரம்பிற்கும் ஒரத்திற்குமிடையில், மஞ்சள் திட்டுக்கள் தோன்றி, இத்திட்டுக்கள் இணைந்து, இலை முழுவதும் பொன்நிற மஞ்சளாகும், நடு நரம்புப் பகுதி பச்சையாக இருக்கும். மஞ்சள் நிறப் பகுதியில், திசுக்கள் மடிந்து கரும்புள்ளிகள் தோன்றும், இலைக் காம்புகள் நீல நிறம் கலந்த ஊதா நிறமாகத் தோன்றும். இதற்கு நீல நோய் என்ற பெயர் உண்டு. பற்றாக்குறை அதிகரிக்கும்பொழுது, இலைகளின் அடிப்பட்டைகள் தண்டிலிருந்து விலகி, உரிய நேரத்திற்கு முன்பே இலைகள் காய்ந்துவிடும். தண்டின் வலிமையும் குறைந்துவிடும்.

நிவர்த்தி :

நூறு லிட்டர் நீரில் ஒரு கிலோ மெக்னீசியம் சல்பேட் கலந்த கரைசலை, இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். எக்டருக்கு 25 கிலோ மெக்னீசியம் சத்து அடியுரமாக இட வேண்டும்.