|
உளுந்தில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- இளம் இலைகள் சிறியவையாகத் தோன்றும்.
- இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும்.
- கணுவிடைப்பகுதிகள் குறுகிக்காணப்படும், சிறிய இலைகள் நுனியில் கொத்தாக வளர்ந்து ‘கொத்து இலை நோய்’ போன்று காணப்படும்.
|
நிவர்த்தி |
- துத்தநாக சல்பேட்(5 கிராம் / லிட்டர்) கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும்.
- துத்தநாக சல்பேட் (25 கிலோ / எக்டர்) விதைக்கும் முன் மண்ணில் இடவேண்டும்.
|