துத்தநாகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
சிவப்பு கலந்த பழுப்பு நிற வட்டப் புள்ளிகள் இலைகளில் தென்படும்
நரம்பிடைப் பகுதிகளில் சிவப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்
அவை பெரிதாகி பழுப்பு நிறமாக மாறும்
நிவர்த்தி
துத்தநாக சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை அறிகுறிகள் மறையும் வரை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்கவேண்டும்