Potassium

எலுமிச்சையில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வளர்ச்சி மெதுவாக இருக்கும். மலர்ச்சியடையும் சமயத்தில் இலைகள் உதிர்ந்துவிடும்
  • புதிய தண்டுகள் கொம்புகளில் மோசமாக இணைந்திருக்கும்
  • இலைகள் சிறியதாகவும், கொம்புகளின் முனைகள் காய்ந்தும், இலையின் முனைகள் பொசுங்கியும், சிறிய பழுப்பு நிறத்தில் பசை போன்ற புள்ளிகளும் இலையின் மேல் தோன்றும்
  • சிறிய சுருக்கக் கோடுடைய புள்ளிகள் இலையில் காணப்படும்
  • பழங்கள் சிறுத்தும், தோல் மிகவும் மெல்லியதாகவும் இருக்கும்
  • ஆழ்ந்த செம்மஞ்சள் நிறத்தில் இலைகள் சுருண்டும், சுருங்கியும், கொம்புகள் சுழன்றும் காணப்படும்

நிவர்த்தி

  • பொட்டாசியம் நைட்ரேட் 2% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
  • 200 கிராம் தழைச்சத்து, 100 கிராம் மணிச்சத்துமற்றும் 200 கிராம் சாம்பல்சத்து / மரம்/ வருடம் என்ற அளவில் பயன்படுத்தவும்.